ஏக்தா பிஷ்ட்

இந்திய கிரிக்கெட் வீரர்

ஏக்தா பிஷ்ட் (Ekta Bisht) இந்தியாவின் துடுப்பாட்ட வீராங்கனை.[1][2] இவர் இடது கை மட்டையாளர் மற்றும் இடதுகை சுழல் பந்து வீசுபவர்.[3][4] உத்தராகண்டம் மாநிலத்திலிருந்து வந்து இந்தியாவிற்காக விளையாடிய முதல் சர்வதேச பெண் போட்டியாளர் ஆவார்.

ஏக்தா பிஷ்ட்
ஏக்தா பிஷ்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஏக்தா பிஷ்ட்
பிறப்பு8 பெப்ரவரி 1986 (1986-02-08) (அகவை 38)
அல்மோரா, உத்தராகண்டம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை பந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
கடைசி ஒநாப1 பிப்ரவரி 2019 எ. [[நியூஸிலாந்து துடுப்பாட்ட அணி|நியூஸிலாந்து]]
ஒநாப சட்டை எண்8
இ20ப அறிமுகம் (தொப்பி ஜூன்)23 ஜூன் 2011 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப{{{lastT20Idate}}} 2018 எ. வங்காள தேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–தற்போதுஇரயில்வே மட்டை பந்து அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் சர்வதேச ஒரு நாள் போட்டி பெண்கள் சர்வதேச 20 ஓவர் போட்டி
ஆட்டங்கள் 46 36
ஓட்டங்கள் 139 37
மட்டையாட்ட சராசரி 9.92 4.62
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 18* 15
வீசிய பந்துகள் 2523 745
வீழ்த்தல்கள் 71 45
பந்துவீச்சு சராசரி 20.64 14.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/08 4/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 6/–
மூலம்: ESPNcricinfo, 29 ஜனவரி 2019

இளமை வாழ்க்கை தொகு

ஏக்தா பிஷ்ட் 1986 பிப்ரவரி 8 அன்று உத்தராகண்டம் மாநிலத்தின் அல்மோராவில் குந்தன் சிங் பிஷ்ட் மற்றும் தாரா பிஷ்ட் என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை 1988இல் இந்தியத் தரைப்படையில் ஹவில்தாராக பணியாற்றியுள்ளார். இவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் உண்டு. பிஸ்த் ஆறு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஆண்கள் அணியில் இவர் மட்டுமே பெண்ணாக் இருந்ததால் பெரும்பாலான பார்வையாளர்களை ஈர்த்தது. இவரது தந்தை குந்தன் சிங் பிஷ்ட் ஓய்வூதியம் மட்டுமே பெற்று வந்ததால், குடும்பத்தின் வருவாயை கூடுதலாக்கவும், தனது மகளின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அல்மோராவில் ஒரு தேநீர் கடை ஒன்றை திறந்தார். ஏக்தா பிஷ்ட் வட மண்டல குமாவோன் பல்கலைக்கழக விளையாட்டு அணித் தலைவராக இருந்தார். அவரது தந்தையின் இராணுவ ஓய்வூதியமும் அதிகரித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் தேயிலை கடைகளை மூடினார்கள்.[5]

தொழில் தொகு

பிஷ்ட், 2006 ஆம் ஆண்டில் உத்தராகண்டம் கிரிக்கெட் அணியின் தலைவராக ஆனார். 2007 ஆம் ஆண்டு முதல் 2010 வரை உத்தரபிரதேசம் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்..[5] வட மண்டல குமாவோன் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை உத்தராஞ்சல் மகளிர் கிரிக்கெட் சங்க அணிக்கு பயிற்சி அளித்த லியாகாத் அலி என்பவரால் ஆரம்ப காலங்களில் பயிற்றுவிக்கப்பட்டார்.[6] பிஷ்ட் 2011இல் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது முதல் போட்டி 2011 ஜூலை 2 அன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரானது. 2012 அக்டோபர் 3 அன்று, பிஷ்ட் இந்தியாவிற்காக முதல் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். கொழும்பு, இலங்கையில் நடந்த 20 ஓவர் பெண்கள் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களுக்கு. 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது கடைசி ஓவரில் இவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.[7][8] 2017இல் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இவர் விளையாடினார். இதில் இங்கிலாந்து தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியிடம் இந்திய அணி ஒன்பது ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது.[9][10][11]

டிசம்பர் 2017 ஆம், ஆண்டின் சர்வதேச மகளிர் ஒரு நாள் அணி மற்றும் இந்திய மட்டைப்பந்து பெண்கள் டி 20 அணி ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வீரர் இவர் ஆவார்.[12][13] 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற சர்வதேச மகளிர் உலக இருபது ஓவர் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார்.[14][15]

 
2017 பெண்கள் துடுப்பாட்ட மகளிர் உலகக் கோப்பை)

2017 பெண்கள் உலகக் கோப்பை உலகக் கோப்பையில் பிஷ்ட், பாக்கிஸ்த்தான் அணிக்கு எதிராக 18 ஓட்டங்கள் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து 95 ஓட்டங்கள் இந்திய அணி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. மேலும், அதே ஆண்டில் பிப்ரவரியில் இலங்கைக்கெதிராக 8 ஓட்டங்கள் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.[16][17] 12 ஆண்டுகளுக்கு முன்பு (2005) இந்திய அணியில் இடம் பெற்று காயமடைந்ததனால் போட்டியை விட்டு நடுவே வெளியேறினாலும். 2017 வெற்றிக்குப் பின்னர் தன்னை மீட்டுக்கொண்டார்.[18]

2018 நவம்பரில், அவர் 79 ஒருநாள் போட்டிகளிலும், 50 இருபது ஓவர் போட்டிகளிலும் சராசரியாக 21.98 மற்றும் 14.50 சராசரியைக் கொண்டிருந்தார்.[19] 2017 ம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்த வீரராக இருந்தார். 167 போட்டிகளில் 29 விக்கெட்டுகளுடன் 17.27 சராசரி கொண்டு விளையாடினார்.[20] 29 சர்வதேச விக்கெட்களுடன் 100 விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது இந்திய பெண் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் ஐந்தாவது விக்கெட் வீரர் ஆவார்..[21] இவரின் கள செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டினார்.[18]

விருதுகள் தொகு

2017 ஆம் ஆண்டு நவம்பரில், உத்தராகண்டம் அரசாங்கம், பந்து வீச்சாளர் ஏக்தா பிஷ்ட் மற்றும் அவரது பயிற்சியாளர் லியாகாத் அலி கான் ஆகியோருக்கு கெல் ரத்னா விருது வழங்கியது.[22]

மேற்கோள்கள் தொகு

  1. "Ekta Bisht Profile". ESPNcricinfo Portal.
  2. "Ekta Bisht Player Profile and Carrer [sic] Details". Divya Bhaskar Portal. Archived from the original on 2015-01-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.
  3. "Women's World Cup 2013 Teams and Players". NDTV Sports Portal. Archived from the original on 2013-11-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.
  4. "Ekta, Harmanpreet guide India to victory over Bangla eves". Zee News Portal. 8 April 2013. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. 5.0 5.1 "Dad's tea stall brewed Ekta Bisht's success on pitch – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 July 2017.
  6. "एकता को खेल रत्‍न : जानिए, हैट्रिक लेने वाली पहली भारतीय महिला क्रिकेटर के बारे में". www.livehindustan.com (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "ICC Women's T20 WC: Bisht shines with hat-trick in India`s play-off win". Zee News Portal. 3 October 2012.
  8. "Ekta Bisht hat-trick helps India trounce Sri Lanka women by 9 wickets". CricketCountry. 3 October 2012. Archived from the original on 31 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. Live commentary: Final, ICC Women's World Cup at London, Jul 23, ESPNcricinfo, 23 July 2017.
  10. World Cup Final, BBC Sport, 23 July 2017.
  11. England v India: Women's World Cup final – live!, The Guardian, 23 July 2017.
  12. "Ellyse Perry declared ICC's Women's Cricketer of the Year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
  13. "3 Indian Women in ICC Teams". The Hindu.
  14. "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  16. "Ekta Bisht: First Indian Women Cricketer to Make It to Both ICC ODI & T20 Teams". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  17. Staff, Scroll. "'What a performance': Twitter applauds Ekta Bisht's magical figures of 5/18". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  18. 18.0 18.1 Buzz, Himalayan (2017-07-07). "The struggle of sensational rising cricketer from Uttarakhand Ekta Bisht". Himalayan Buzz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  19. "Women's World T20 2018: Experience and calmness make India's go-to bowler Ekta Bisht key to their performance at event- Firstcricket News, Firstpost". FirstCricket. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  20. "Women's World T20 2018: Experience and calmness make India's go-to bowler Ekta Bisht key to their performance at event- Firstcricket News, Firstpost". FirstCricket. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  21. "Women's World T20 2018: Experience and calmness make India's go-to bowler Ekta Bisht key to their performance at event- Firstcricket News, Firstpost". FirstCricket. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  22. "Bowler Ekta Bisht, coach Liyakat Ali Khan overjoyed with Khel Ratna, Dronacharya announcement - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/bowler-ekta-bisht-coach-liyakat-ali-khan-overjoyed-with-khel-ratna-dronacharya-announcement/articleshow/61548906.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்தா_பிஷ்ட்&oldid=3791555" இலிருந்து மீள்விக்கப்பட்டது