ஏக் தூஜே கே லியே

ஏக் தூஜே கே லியே (Ek Duuje Ke Liye) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். 300 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது இத்திரைப்படம்.[2]

ஏக் தூஜே கே லியே
Ek Duuje Ke Liye
இயக்கம்கே.பாலச்சந்தர்
தயாரிப்புஎல். வி. பிரசாத்
கதைகே.பாலச்சந்தர்
இசைலஸ்மிகாந்த் பியாரெலால்
நடிப்புகமல்ஹாசன்,
ரதி அக்னிகோத்ரி,
மாதவி
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுசூன் 5, 1981
ஓட்டம்163 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்100 மில்லியன் (US$1.3 மில்லியன்)[1]

இத்திரைப்படமானது 1978 ஆண்டில் தெலுங்கு மொழியில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், சரிதா நடித்து 700 நாட்களுக்கு [3] மேல் வெற்றிகரமாக ஓடிய மரோசரித்ரா எனும் படத்தின் மறுபதிப்பாகும்.

மரோசரித்ரா போலவே, ஏக் தூஜே கே லியேவும், மாபெரும் வெற்றி பெற்றது. வட இந்தியாவில் இத்திரைப்படம் 80 வாரங்கள் ஓடியது.[4]

காதல்படம் / நாடகப்படம்

நடிகர்கள்

தொகு

கமல்ஹாசன் முதன்முறையாக இந்தி மொழியில் 1977 ஆண்டில் 'ஆய்னா' எனும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படமே கமல் கதாநாயகனாக நடித்த முதல் இந்தித் திரைப்படமாகும்.

நடிகர் கதாபாத்திரத்தின் பெயர்
கமல்ஹாசன் எஸ். வாசுதேவன் 'வாசு'
ரதி அக்னிகோத்ரி சப்ணா
மாதவி சந்தியா
ராகேஷ் பேடி சக்ரம்
பூர்ணம் விஸ்வநாதன் வி. சிவராமகிருஷ்ணன், வாசுவின் தந்தை
அதிலிலட்சுமி வந்தனா, வாசுவின் தாயார்.
சத்யன் கப்பு ஜகநாத்
அரவிந்த் டேஷ்பண்டி குந்தன்லால், சப்ணாவின் தந்தை.
சுபா ஹோதி திருமதி. குந்தன்லால், சப்ணாவின் தாயார்.
ராச்சா முராட் டேனி
அஸ்ராணி ஜி. ஹரிபாபு
சுனில் தபா நூலகம் ஊழியர்

பாடல்கள்

தொகு

இலட்சுமிகாந்த் - பியாரெலால் ஆகியோரால் இப்படத்திற்கு இசை அமைக்கப்பட்டது. இந்தியில் பாடல் வரிகள் ஆனந்த் பக்சியால் எழுதப்பட்டது. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்தின் மூலம் இந்தி மொழியில் அறிமுகமானார்.

எண். பாடல் பாடகர்(கள்)
1 டெரெ மெரெ பீச் மெய்ன் (Tere Mere Beech Mein) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்
2 ஹம் டம் டோனோ ஜாப் மில் ஜயென் (Hum Tum Dono Jab Mil Jayen) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்
3 மெரெ ஜீவன் சாதி (Mere Jeevan Saathi) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா பாட்வால்
4 ஹம் பானெ டம் பானெ (Hum Bane Tum Bane) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்
5 டெரெ மெரெ பீச் மெய்ன் (சோகம்) (Tere Mere Beech Mein) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம்
6 சோலக் பாரஸ் கி பாலி யுமர் (Solah Baras Ki Bali Umar) ... லதா மங்கேஷ்கர், அனுப் ஜலோடா

விருதுகள்

தொகு
தேசிய திரைப்பட விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்
வென்றவர்கள்
  • சிறந்த படத்தொகுப்பு – கே.ஆர் கிட்டு
  • சிறந்த பாடலாசிரியர் – ஆனந்த் பாக்சி (தேரே மேரே பீச் மேனி என்ற பாடலுக்காக)
  • சிறந்த திரைக்கதை – கை. பாலசந்தர்

மேற்கோள்கள்

தொகு
  1. "ஏக் தூஜே கே லியே திரைப்படத்தின் மொத்த வருவாய்". Box Office India. Archived from the original on 2009-09-03. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 17, 2013.
  2. "கமல்ஹாசனை இந்தியாவின் ஸ்டாராக்கிய ஸ்பெஷல் சினிமா... இதன் சீக்வெலும் செம ஹிட் தெரியுமா?! #40YearsofEkDuujeKeLiye". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/bollywood/kamal-haasan-has-become-indias-star-because-of-ek-duuje-ke-liyes-success. 
  3. "அழியாத கோலங்கள்" (in ta). குங்குமம். 18 May 2015 இம் மூலத்தில் இருந்து 22 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222101352/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8724&id1=6&issue=20150518. 
  4. "பாலசந்தர் டைரக்ஷனில் உருவான மரோசரித்ரா அற்புத சாதனை". மாலை மலர். 31 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்_தூஜே_கே_லியே&oldid=4135652" இலிருந்து மீள்விக்கப்பட்டது