ஏக பாத ஸ்தானகம்

ஏக பாத ஸ்தானகம் என்பது ஒரு காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை மடக்கி தவமிருப்பது போல நிற்கும் கோலம் ஆகும்.[1] இந்த ஸ்தானக முறையில் ஆண், பெண் என இரு நிலைகள் உள்ளன. இந்து சமய சிற்பங்களை வடிக்கும் போது தவ நிலைக்கோலங்கள் இந்த ஸ்தானக முறையில் வடிக்கப்படுகின்றன.

ஆண் தவம் தொகு

 
பகீரதனின் கடும் தவம் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள், தமிழ்நாடு, இந்தியா

ஆண் தவம் செய்யும் முறையில் தரையில் ஊன்றிய காலின் முழங்கால் முட்டியின் மீது மடக்கிய காலின் பாதத்தை வைத்து நிற்பார். இவ்வாறான தவக்கோல முறையில் அர்ஜூனன் தவம், பகீரதன் தவம் போன்ற தவச்சிற்பங்களில் காணப்படுகிறது.

பெண் தவம் தொகு

 
ஏக பாத ஸ்தானக தவக்கோலத்தில் அம்மன்

பெண் தவம் செய்யும் முறையில் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை மடக்கி, மடக்கிய காலின் பாதம் வானத்தை நோக்கி இருப்பதாக நிற்பார். இவ்வாறான தவக்கோல முறையில் காமாட்சியம்மன் போன்ற தவச்சிற்பங்களில் காணப்படுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலின் கருவறையில் காமாட்சியின் இடது பக்கத்தில் வடக்கு திசை நோக்கியவாறு, அஞ்சன காமாட்சி அம்மன் தவம் புரியும் கோலத்தில் உள்ளார். [2]

ஆதாரங்கள் தொகு

  1. சிற்ப செந்நூல் - வை. கணபதி ஸ்தபதி - தொழில் நுட்பக் கல்வி இயக்கம், சென்னை - பக்கம் 64
  2. https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2021/10/05202526/God-Kamakshi-in-three-forms.vpf

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக_பாத_ஸ்தானகம்&oldid=3698180" இலிருந்து மீள்விக்கப்பட்டது