முதன்மை பட்டியைத் திறக்கவும்
ஏதண்டம்

ஏதண்டம் (viaduct) சிறிய பாவுநீளங்கள் சிலவற்றைக் கொண்டுள்ள ஒரு பாலம் ஆகும். ரோம தொட்டிப் பாலங்களைப் போலவே பண்டைய ஏதண்டங்களும் வளைவுகளைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தன. ஏதண்டங்கள் தரை, நீர் அல்லது இவையிரண்டையுமே பாவும் வகையில் அமைக்கப்படலாம்.

தொடருந்து மையங்களாக விளங்கும் நகரங்களில் ஏதண்டங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து பாதைக்கும், நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் இடங்களில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஏதண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில ஏதண்டங்கள் தொடருந்துப்பாதைகளை பள்ளத்தாக்குகளுக்கு குறுக்க்காக பாவுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விரைவு நெடுஞ்சாலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ள சதுப்புநிலப் பகுதிகளைக் கடப்பதற்கும் ஏதண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதண்டம்&oldid=2221841" இருந்து மீள்விக்கப்பட்டது