ஏம்மிக் வினை

கார்பனைல் சேர்மங்களின் முன்னிலையில் α- பிக்கோலினிக் அமிலங்கள் அல்லது இதனுடன் தொடர்புடைய சேர்

ஏம்மிக் வினை (Hammick reaction) என்பது கார்பனைல் சேர்மங்களின் முன்னிலையில் α- பிக்கோலினிக் அமிலங்கள் அல்லது இதனுடன் தொடர்புடைய சேர்மங்கள் வெப்ப கார்பாக்சில் நீக்கவினைக்கு உட்பட்டு 2-பைரிடைல் கார்பினால்கள் உருவாகும் வினையைக் குறிக்கிறது [1][2][3]

ஏம்மிக் வினை
ஏம்மிக் வினை

.

பாரா-சைமெனை இவ்வினையில் கரைப்பானாகப் பயன்படுத்தினால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கிறது [4].

வினை வழிமுறை தொகு

α- பிக்கோலினிக் அமிலத்தைச் சூடாக்கும்போது அது தன்னிச்சையாக கார்பாக்சில் நீக்கம் அடைந்து ஏம்மிக் இடைநிலைவிளைபொருளாக (2) உருவாகிறது. இவ்விடைநிலைப்பொருள் ஓர் அரோமாட்டிக் இலைடாக, அதாவது ஒரு நடுநிலை இருமுனைய மூலக்கூறாகப் பார்க்கப்படுகிறது[5]. ஆல்டிகைடு அல்லது கீட்டோன் போன்ற வலிமையான மின்னனுகவரி ஒன்றின் முன்னிலையில் இந்த இடைநிலை புரோட்டானேற்றத்தைக் காட்டிலும் வேகமாக அணுக்கருகவரியினால் தாக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்குப் பின்னர் மூலக்கூறிடை புரோட்டான் மாற்றம் நிகழ்ந்து தேவையான கார்பினால் கிடைக்கிறது. (4)

 
ஏம்மிக் வினையின் வினை வழிமுறை

கார்பாக்சில் குழு நீங்கும் அமிலங்களுக்கு மட்டும் இவ்வினையின் நோக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இங்கு கார்பாக்சில் குழுவில் α நைட்ரசன் இடம்பெற்றுள்ளது. (மூலக்கூறுகளில் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் α நிலையைக் காட்டிலும் குறைந்த உற்பத்தியைக் கொண்டதாக இருக்கும் எனப் பதிவுகள் தெரிவிக்கின்றன) [6][7] எனவே குயினோலினின் மற்றும் ஐசோகுயினோலினின் α-கார்பாக்சிலிக் அமிலங்கள் உள்ளிட்ட பொருத்தமான அடிமூலக்கூறுகளூக்கு மட்டும் α-பிக்கோலினிக் அமில [3][8] வழிப்பெறுதிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Dyson, P.; Hammick, D. L. (1937). "362. Experiments on the mechanism of decarboxylation. Part I. Decomposition of quinaldinic and isoquinaldinic acids in the presence of compounds containing carbonyl groups". J. Chem. Soc.: 1724. doi:10.1039/jr9370001724. 
  2. Hammick, D. L.; Dyson, P. (1939). "172. The mechanism of decarboxylation. Part II. The production of cyanide-like ions from α-picolinic, quinaldinic, and isoquinaldinic acids". J. Chem. Soc.: 809. doi:10.1039/jr9390000809. 
  3. 3.0 3.1 Brown, E. V.; Shambhu, M. B. (1971). "Hammick reaction of methoxypyridine-2-carboxylic acids with benzaldehyde. Preparation of methoxy-2-pyridyl phenyl ketones". J. Org. Chem. 36 (14): 2002. doi:10.1021/jo00813a034. 
  4. Sperber, N.; Papa, D.; Schwenk, E.; Sherlock, M. (1949). "Pyridyl-Substituted Alkamine Ethers as Antihistaminic Agents". J. Am. Chem. Soc. 71 (3): 887–90. doi:10.1021/ja01171a034. பப்மெட்:18113525. 
  5. Hollóczki, Oldamur; Nyulászi, László (July 2008). "Stabilizing the Hammick Intermediate". The Journal of Organic Chemistry 73 (13): 4794–4799. doi:10.1021/jo8000035. பப்மெட்:18543975. 
  6. Kurt Mislow (October 1947). "An Extension of the Scope of the Hammick Reaction". Journal of the American Chemical Society 69 (10): 2559–2559. doi:10.1021/ja01202a508. 
  7. Betts, M. J.; Brown, B. R. (1967). "Extension of the Hammick reaction to 2-pyridylacetic acid". Journal of the Chemical Society C: Organic: 1730. doi:10.1039/J39670001730. 
  8. Cantwell, Nelson H.; Brown, Ellis V. (March 1953). "An Investigation of the Hammick Reaction". Journal of the American Chemical Society 75 (6): 1489–1490. doi:10.1021/ja01102a515. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏம்மிக்_வினை&oldid=2749938" இலிருந்து மீள்விக்கப்பட்டது