ஏரன் சுவோற்சு

ஏரன் சுவோற்சு (Aaron H. Swartz; நவம்பர் 8, 1986 - சனவரி 11, 2013) ஓர் அமெரிக்க கணினி நிரலாளர், எழுத்தாளர், அரசியல் ஒழுங்கமைப்பாளர், இணையச் செயற்பாட்டாளர். இவர் இணையத்தில் தகவல்களைப் பகிரப் பயன்படும் ஆர்.எசு.எசு சீர்தரத்தின் முதல் பதிப்பின் இணை ஆக்கர். இவர் வெப்.பிவை (web.py) எனப்படும் வலைத்தள சட்டகத்தை எழுதினார். திறந்த நூலகத்துக்கான கட்டமைப்பை உருவாக்கினார். முன்னேற்றத்தைக் கோரு (Demand Progress) என்ற அமைப்பின் நிறுவனர். பூட்டப்பட்ட தரவுத்தளங்களை திறந்த வெளிக்கு கொண்டுவருவதற்கான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தார். இணையத்தை அரசுகள் கட்டுப்படுத்த கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை முன்னின்று வெற்றிகரமாக எதிர்ப்பதில் முக்கிய பங்கு கொண்டார்.

ஏரன் சுவோற்சு
2008இல் ஏரன் சுவோற்சு
பிறப்பு(1986-11-08)நவம்பர் 8, 1986
சிகாகோ, இலினொய்
இறப்புசனவரி 11, 2013(2013-01-11) (அகவை 26)
புரூக்ளின், நியூ யோர்க் மாநிலம்
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை செய்து கொண்டார்
பணிகணினி நிரலாளர், எழுத்தாளர், இணையச் செயற்பாட்டாளர்
வலைத்தளம்
aaronsw.com

சனவரி 11, 2013 அன்று தனது 26 வயதில் இவர் தற்கொலை செய்துகொண்டார். பூட்டப்பட்ட ஆய்விதழ்களை திறந்த வெளியில் கொண்டுவருவதற்கான இவரது கொந்தர் செயற்பாடுகளுக்காக இவர் மீது ஐக்கிய அமெரிக்க அரசால் பல்வேறு குற்ற வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தன. இவற்றால் இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தார் என இவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[1]

ஏரனின் நிறுவனமான இன்போகாமி சனவரி 2006 அன்று ரெட்டிட் நிறுவனத்துடன் இணைந்தது.[2] இணைந்த நிறுவனமான ரெட்டிட்டில் இவர் ரெட்டிட் நிறுவனர்களுக்கு இணையான உரிமையோடு இருந்தார். செய்தியாளர்களாலும் முதலீட்டாளர் பவுல் கிரகாமாலும் ரெட்டிட்டின் இணை தோற்றுவிப்பாளர் என அழைக்கப்பட்டார் [3]

ஏரனின் இறப்பைப் பற்றி உலகளாவிய வலையின் கண்டுபிடிப்பாளர் ரிம் பேர்னேர்சு லீ பின்வரும் கூற்றைத் தெரிவித்துள்ளார். "அரோன் இறந்துவிட்டான். உலகில் அலைபவர்களே, நாம் ஒரு விவேகமான மூத்தவனை இழந்துவிட்டோம். நல்லதுக்கான கொந்தர்களே, எம்மில் ஒருவன் வீழ்ந்துவிட்டான். எல்லாப் பெற்றோர்களே, நாம் ஒரு குழந்தையை இழந்துவிட்டோம். அனைவரும் அழுவோம்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Reddit co-founder Aaron Swartz dies at 26
  2. "Introducing Infogami". Infogami. February 27, 2006. Archived from the original on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2007-01-06.{{cite web}}: CS1 maint: unfit URL (link) (archive.org link)
  3. "...there was a third cofounder of Reddit, who was...", Today I learned..., Reddit
  4. "Aaron dead," he wrote. "World wanderers, we have lost a wise elder. Hackers for right, we are one down. Parents all, we have lost a child. Let us weep."Internet activist, programmer Aaron Swartz dead at 26 பரணிடப்பட்டது 2013-01-12 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரன்_சுவோற்சு&oldid=3586399" இலிருந்து மீள்விக்கப்பட்டது