ஏ-26 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ26 நெடுஞ்சாலை (A26 highway) என்பது கண்டியையும் பதியத்தலாவாயையும் இணைக்கும் வீதி ஆகும். இது சுமார் 105 கிலோமீட்டர் நீளம் கொண்டது. [1] இது 1926இல் பிரித்தானியர்களால் மலைச்சரிவுகளைக் குடைந்து அமைக்கப்பட்டது. பதினெட்டு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட இப்பாதை மத்திய மலை நாட்டை ஊவாமாகாணத்துடன் இணைக்கின்றது.

இந்நெடுஞ்சாலை திகனை, தெல்தெயா, உன்னரசுகிரி, உடதும்பரை, மகியங்கணை, ஊடாக பதியத்தலாவையை அடைகின்றது.

வளைவுகளின் திருப்ப அளைவைக் குறைக்கும் புனரமைப்பு வேலைகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 மே மாதம் பூர்த்தி செய்யப்பட்டது. பதினெட்டு வளைவு வீதி என அழைக்கப்படும் இவ்வீதியில் தற்போது 17 வளைவுகளையே கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

கொண்டை ஊசி வளைவுகளைக் காட்டும் பாதையின் அமைப்பு[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-26_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3236636" இலிருந்து மீள்விக்கப்பட்டது