ஏ. அசோகன்
ஏ. அசோகன் என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருவாரூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, இரண்டுமுறை தமிழக சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]
பின்னர் ஏப்ரல் மாதம் 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தோ்தலில்வேட்பாளராக நிற்க, திராவிட முன்னேற்றக்கழகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தாா்.[3] அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக பணியாற்றியுள்ளார்.[4]. [5]. அதன்பிறகு மீண்டும் திமுகவில் இணைந்தார்.
கொலை முயற்சி வழக்கு
தொகுஇவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனது இரண்டாவது மனைவி ஹேமாவுடன் வசித்துவந்தார். 2015 திசம்பர் 6 அன்று ஹேமா தன் கணவரின் உதவியாளருடன் வெளியில் சென்றுவிட்டு இரவு தாமரமாக வந்துள்ளார். இதனால் ஹேமாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அசோகனுக்கும் ஹேமாவுக்கும் தகராறு ஏற்ப்படது. இதன் முடிவில் அசோகன் ஹேமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றதாக ஹேமா பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அலித்தார். இதன் அடிப்படையில் அசோகன்மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது. வழக்கின் முடிவில் கொலை முயற்சி வழக்கில் அசோகனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டணை மற்றும் பத்தாயிரம் தண்டம் விதிக்கப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
- ↑ "ADMK, DMK facing rebellion". Rediff. 2 April 2006. http://m.rediff.com/news/report/tn/20060402.htm. பார்த்த நாள்: 2017-05-13.
- ↑ தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி திருவாரூர் அசோகன் நியமனம்
- ↑ திமுகவிலிருந்து தாவிய அசோகனுக்கு டெல்லி சிறப்பு பிரநிதி பதவி
- ↑ "மனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை". செய்தி. மாலை மலர். நவம்பர் 22, 2019. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 22, 2019.