முதன்மை பட்டியைத் திறக்கவும்

அப்துல் ரசாக் அலிம் முகம்மது அபூபக்கர் (Abdul Razak Alim Mohamed Abubucker, 31 மார்ச் 1912[1] - ) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்
A. R. A. M. Abubucker

நா.உ.
மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
பின்வந்தவர் எம். ஈ. எச். முகம்மது அலி
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 31, 1912(1912-03-31)
தேசியம் இலங்கைச் சோனகர்
சமயம் இசுலாம்

அரசியலில்தொகு

அபூபக்கர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு 3,480 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 1952 தேர்தலில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் எம். ஈ. எச். முகம்மது என்பவரிடம் 2,721 வாக்குகளால் தோற்றார்.[3] இவர் மீண்டும் மார்ச் 1960 தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 298 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Directory of Past Members: Abubucker, Abdul Razak Alim Mohamed". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.