அ. ம. நாயக்கு

(ஏ. எம். நாயக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அ.ம. நாயக்கு (ஏ. எம். நாயக்கு, Anil Manibhai Naik, பிறப்பு: சூன் 9, 1942) என்பவர் எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர்.[1]

அ. ம. நாயக்
பிறப்புஅனில் மணிபாய் நாயக்
9 சூன் 1942 (1942-06-09) (அகவை 81)
நவ்சாரி, இந்தியா
கல்விஇளங்கலைப் பொறியியல் (இயந்திரவியல்)
பணிலார்சன் அன்ட் டூப்ரோ குழுமத்தின் தலைவர்
பணியகம்லார்சன் அன்ட் டூப்ரோ
வாழ்க்கைத்
துணை
கீதா நாயக்
பிள்ளைகள்2
விருதுகள்பத்ம விபூசண் (2019)
பத்ம பூசண் (2009)

இவர் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை சனவரி 26, 2009 அன்று பெற்றார். மேலும் இவர் எகனாமிக் டைம்ஸ் விருதான "லீடர் ஆப் த இயர்" என்ற விருதையும் 2008 ஆண்டு பெற்றார்.[2]

வாழ்க்கையும்,கல்வியும் தொகு

நாயக் தென் குசராத்துதின் ஒரு கிராமத்தில் பிறந்தவர் இவரின் தாத்தா, அப்பா அனைவரும் ஆசிரியர்கள். குசராத்தின் வல்லபா வித்தியா நகரில் உள்ள பிர்லா விசுவகர்மா மகாவித்தியாலையா பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் முடித்தார்.[3]

பணிகள் தொகு

இவரது ஆங்கிலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால், பிறர் ஆங்கிலத்தில் பேசுவதை குசராத்தி மொழியில் புரிந்துகொண்டு, குசராத்தியில் அதற்கான பதிலை யோசித்து, பின் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பேசி தன்னுடைய ஆரம்ப காலத்தைக் கழித்திருக்கிறார். பிறகு இவர் தன் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். நெசுட்டர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.[4]

நாயக்கு 1965-ம் ஆண்டு மார்ச்சு 15-ம் தேதி "எல் அண்டு டி" நிறுவனத்தில் இளநிலைப் பொறியாளராக இணைந்தார்.[5]

பணியில் சேர்ந்தபின் முதல் 21 வருடங்களில் அவர் எந்த விடுமுறையும் எடுத்ததில்லை. வாராந்திர விடுமுறை கூட எடுக்காமல் பணிபுரிந்தார். 1974-ல் (ஒன்பது ஆண்டுகளுக்குள்) துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார். 1986இல் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார். 1999-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் வேலையாக, எல். அண்டு.டி-யை இளைஞர்களைக் கவரும் நிறுவனமாக மாற்றினார். அதன் பிறகு பல கிளை நிறுவனங்களை உருவாக்கி அவற்றுக்கு தனியாக தலைவர்களை நியமித்தது, பங்குதாரர்களுக்கு ஏற்ற நிறுவனமாக மாற்றினார். நாயக் அறக்கட்டளை மூலம் இதுவரை ரூ.100 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ம._நாயக்கு&oldid=3801943" இருந்து மீள்விக்கப்பட்டது