ஏ. நாராயணன் (இயக்குநர்)

சிவகங்கை ஏ. நாராயணன் (1900 - பெப்ரவரி 1, 1939) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர்[1] மற்றும் தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர். இவர் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு இவரது மனைவி மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். இதன் மூலம் முதல் இந்தியத் திரைப்பட பெண் ஒலிப்பதிவாளர் என்ற பெருமையை மீனாம்பாள் பெற்றார்.[2]

வாழ்க்கைதொகு

தமிழ்நாட்டின் சிவகங்கையில் 1900 ஆம் ஆண்டு ஏ. நாராயணன் பிறந்தார். பட்டப் படிப்புவரை படித்து முடித்த இவர், பின்னர் பம்பாயில் ஆயுள் காப்பீட்டு முகவராக பணியில் சேர்ந்தார். அங்கே அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோ என்ற நிறுவனத்துடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பால் மவுனப் படங்களை வாங்கி கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார். கல்கத்தாவில் பிரபலமான திரையரங்கான ‘க்வின்ஸ் சினிமா’ என்ற அரங்கை குத்தகைக்கு எடுத்து சிலகாலம் நடத்தி, பின்னர் மதராஸ் திரும்பினார்.

திரைப்பட வாழ்வுதொகு

மதராஸ் திரும்பியபின் ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கி மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்து, திருவல்லிக்கேணியில் திரையரங்கை நடத்தினார். இந்தத் தொழில்களில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் நாராயணனுக்கு படங்களைத் தயாரிக்க வேண்டும், இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 1928 ஆம் ஆண்டு ஹாலிவுட் சென்று அங்கே ஓராண்டு காலம் தங்கி திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். ஹாலிவுட் செல்லும்போது ‘அனார்கலி’யின் கதையை அதே பெயரில் மவுனப் படமாக எடுத்துச் சென்று ஹாலிவுட்டில் திரையிட்டார். சென்னை திரும்பிய நாராயணன் 1929 ஆம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற திரைப்பட படப்பிடிப்புத் தளத்தை தொடங்கினார். அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் (1927-30) சுமார் இருபதுக்கும் அதிகமான மவுனப் படங்களைத் தயாரித்தார்.[3] பேசும் படங்கள் வந்த பிறகு பல தமிழ் பேசும் படங்களை இயக்கினார்.

இயக்கிய மௌனப் படங்கள்தொகு

  • கருட கர்வபங்கம் (1929)[4]

இயக்கிய பேசும் படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "இயக்குனர் ஏ.நாராயணன்". http://spicyonion.com/tamil/director/a-narayanan/. 13 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "இது நிஜமா?". குண்டூசி: பக். 48. சனவரி 1951. 
  3. "சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!". கட்டுரை. தி இந்து. 23 திசம்பர் 2016. 13 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. ராண்டார் கை (30 சனவரி 2011). "Garuda Garvabhangham 1936". தி இந்து. 14 பெப்ரவரி 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு