ஐக்கிய நாடுகள் நாள்

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.[1]

ஐக்கிய நாடுகள் நாள்
Flag of the United Nations.svg
ஐநா கொடி
பிற பெயர்(கள்)ஐநா நாள்
கடைபிடிப்போர்உலகளவில்
வகைஐக்கிய நாடுகள்
கொண்டாட்டங்கள்சந்திப்புகள், உரையாடல்கள், கண்காட்சிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள்
நாள்24 அக்டோபர்
தொடர்புடையனஉலக மேம்பாட்டுத் தகவல் நாள்

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.[2]

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு அறிவிப்பினை வெளியிடுகின்றார்;அண்மையில் பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை வெளியிட்டார்[3].

உலக மேம்பாட்டுத் தகவல் நாள்தொகு

1972ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உலக மேம்பாட்டுத் தகவல் நாளும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. ஐக்கிய நாடுகள் General Assembly Resolution 168 session 2 United Nations Day on 31 October1947
  2. ஐக்கிய நாடுகள் General Assembly Resolution 2782 session -1 Proclamation of United Nations Day as an international holiday on 6 December 1971
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-03-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_நாடுகள்_நாள்&oldid=3237004" இருந்து மீள்விக்கப்பட்டது