ஐசோபென்சான்
ஐசோபென்சான் (Isobenzan) என்பது C9H4Cl8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். டெலோடிரின் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். 1958 ஆம் ஆண்டுக்கும் 1965 ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இச்சேர்மம் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை [1]. கரிம வேதியியல் மாசாக மண்ணில் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு இது நீடித்து நிற்கிறது. மேலும் மனித இரத்தத்தில் ஐசோபென்சானின் உயுரியல் அரைவாழ்வுக் காலம் 2.8 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,3,4,5,6,7,8,8-ஆக்டாகுளோரோ-1,3,3a,4,7,7a-எக்சா ஐதரோ-4,7-மெத்தேன் ஐசோபென்சோபியூரான்
| |
வேறு பெயர்கள்
டெலோடிரின்; 1,3,4,5,6,7,8,8-ஆக்டாகுளோரோ-4,7-மெத்திலீன்-3a,4,7,7a-டெட்ரா ஐதரோ ஐசோபென்சாபியூரான்
| |
இனங்காட்டிகள் | |
297-78-9 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18960 |
வே.ந.வி.ப எண் | PC1225000 |
| |
பண்புகள் | |
C9H4Cl8O | |
வாய்ப்பாட்டு எடை | 411.73 g·mol−1 |
தோற்றம் | வெண்மையிலிருந்து இலேசான பழுப்பு நிற படிகத்தூள் |
அடர்த்தி | 1.87 கி/செ.மீ3 |
உருகுநிலை | 121.3 °C (250.3 °F; 394.4 K) |
கரையாது | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | T+, N |
R-சொற்றொடர்கள் | R27/28 R50 |
S-சொற்றொடர்கள் | S28 S36/37 S45 S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமெரிக்காவில் இது மிகவும் அபாயகரமான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஐசோபென்சான் உற்பத்தி, சேமிப்பு அல்லது குறிப்பிடத்தக்க அளவுகளில் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை அந்நாட்டின் அவசரகால திட்டமிடல் மற்றும் சமூக தகவல் அறியும் உரிமை சட்டம் (42 யு.எசு.சி 11002) பிரிவின் 302 ஆம் பிரிவு விதியின்படி கண்காணீக்கப்படுகின்றன [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Isobenzan, International Programme on Chemical Safety
- ↑ Isobenzan பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் at Sigma-Aldrich
- ↑ 40 C.F.R.: Appendix A to Part 355—The List of Extremely Hazardous Substances and Their Threshold Planning Quantities (July 1, 2008 ). Government Printing Office. http://edocket.access.gpo.gov/cfr_2008/julqtr/pdf/40cfr355AppA.pdf. பார்த்த நாள்: October 29, 2011.