பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு

(ஐடிஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு (International Tennis Federation, ITF) உலகின் 205 நாடுகளின் தேசிய டென்னிசு சங்கங்களின் கூட்டமைப்பாக உலக டென்னிஸ் விளையாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாகும். 1913ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம்் தேதி பாரிசு நகரில் ஓர் மாநாட்டிற்காக கூடிய 12 தேசிய டென்னிஸ் சங்கங்கள் இந்த அமைப்பை நிறுவியபோது பன்னாட்டு புற்தரை டென்னிசு கூட்டமைப்பு (ILTF) என்று பெயரிடப்பட்டது. 1924ஆம் ஆண்டு இது உலகெங்கும் புற்தரை டென்னிசு விளையாட்டைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக அலுவல்முறை அங்கீகாரம் பெற்றது. அப்போது அலுவல்முறை 'ILTF டென்னிஸ் விதிகளை' இயற்றியது. உலகின் பெரும்பான்மையான ஆடுகளங்களில் புற்தரையில் ஆட்டங்கள் நடைபெறுவதில்லை என்பதை உணர்ந்து 1977ஆம் ஆண்டு தனது பெயரை "பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு" என மாற்றிக்கொண்டது.

பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு
(ITF)
உருவாக்கம்1 மார்ச் 1913
வகைதேசிய விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு
தலைமையகம்லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
உறுப்பினர்கள்
206 தேசிய சங்கங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
பிரான்சிஸ்கோ ரிக்கி பிட்டி
வலைத்தளம்www.itftennis.com

துவக்கத்தில் பாரிசிலிருந்து இயங்கிய ஐடிஎஃப் இரண்டாம் உலகப்போரின்போது இலண்டனுக்கு மாற்றப்பட்டது. 1987 வரை விம்பிள்டனிலும் பின்னர் பார்டன்ஸ் கோர்ட்டிலும் இயங்கிய இந்த அமைப்பு 1998 முதல் இங்கிலாந்து வங்கியின் விளையாட்டு மைதானத்தில் இருந்து இயங்குகிறது..[1]

மேற்கோள்கள் தொகு

  1. "History of the ITF". Archived from the original on 2010-12-06. பார்க்கப்பட்ட நாள் 2011-09-10.

வெளியிணைப்புகள் தொகு