ஐம்பத்தைந்து ரிஷிகள்

ஐம்பத்தைந்து ரிஷிகள் என்பவர்கள் அய்யாவழி புராண வரலாற்றின் படி பிரம்ம லோகத்திலிருந்து பூலோகத்தில் பிறவி செய்யப்பட்ட காப்பிய பாத்திரங்கள் ஆவார்கள். இவர்களை பொதுவாக ஐம்பத்தைது பிரம்மலோக ரிஷிகள் எனவும் அழைப்பர்.

அய்யாவழி
'
அய்யா வைகுண்டர்
அகிலத்திரட்டு
கோட்பாடு
சமயச் சடங்குகள்
சுவாமிதோப்பு பதி
அய்யாவழி மும்மை
போதனைகள்
அருல் நூல்

அய்யாவழி புராண வரலாற்றின் மூல நூலாகிய அகிலத்திரட்டின் படி நாராயணர் பூலோகத்தில் வைகுண்ட அவதாரம் எடுப்பதற்கு முன் ஏழு லோகத்தாரையும் பூலோகத்தில் சான்றோர் குலத்தில் பிறவி செய்கிறார். அப்போது முன்பு செய்த ஒரு குற்றத்தால் ஏற்பட்ட ஒரு சாபத்தினால் பிரம்ம லோகத்திலுள்ள ஐம்பத்தைந்து ரிஷிகள் பூலோகத்தில் ஏற்கனவே பிறவி செய்யப்பட்டதைப் பிரம்ம லோகத்தார்கள் சுட்டிக் காட்டி, அவர்கள் பூலோகத்தில் ஒவ்வொரு தேசத்திலும் அலைந்து திரிவதைபோல் நாங்களும் அங்கு பிறக்க வேண்டுமே என வேதனையுடன் தெரிவித்தனர்.

வைகுண்டர் தோன்றலை முன்மொழிதல் தொகு

அவர்களைத் தேற்றிய திருமால், அவர்களுக்கு அந்த ரிஷிகளின் பூலோக வாழ்க்கை முறைகளை விளக்குகிறார். பின்னர் சோழ நாடு என்னும் ஒரு சிறந்த நாட்டில், எனது பாலகனான் வைகுண்டர் இவர்களின் செயல்களுக்கு பிரதி பலனளிக்கத் தோன்றுவார் எனவும் கூறுகிறார். மேலும் அவர் இவர்களது வரங்களை ஒப்படைக்கச் சொல்லி அவர்களின் தவறுகளுக்கு தகுந்த தண்டனை கொடுப்பர் எனவும் கூறுகிறார். மேலும் அப்பாலனின் சிறப்பையும் எடுத்துரைக்கிறார்.

ஐம்பத்தைந்து ரிஷிகள் வாழ்க்கை முறை தொகு

மேலும் அந்த ரிஷிகள் பல வித விந்தைகளை செய்தும் கலியில் உழன்று தவித்து உலக இன்பத்தோடு கொஞ்சி விளையாடி சில நாட்கள் உலகில் வாழ்ந்து பின் பிரம்மலோகம் வந்து சேர்வார்கள். அவர்களை நான் வதைத்து பின்னர் வரங்கொடுத்து உங்கள் இனத்தோடு வாழ வைப்பேன், என கூறிய திருமால் அந்த ஐம்பத்தைந்து ரிஷிகளின் வாழ்க்கை முறையை கூறினார். பின்னர் அவர்களின் அற்புத அடையாளங்களையும் விளக்கி, இவ்வடையாளங்களால் அவர்களை இனங்கண்டுகொள்ளுங்கள் எனவும் கூறுகிறார்.

அவர்களின் அற்புத அடையாளங்கள் தொகு


ரிஷி வகை
அடையாளம்
முதலாம் சன்னியாசி
அவன் வருடம் ஒரு முறை மாற்றுப் பிறப்பு பிறந்தேன் எனக் கூறி, "என்னை புருஷனாக தேர்ந்தெடுத்தால் பிள்ளையுண்டு" எனக் கூறித் திரிவான். இவனது நாடு பாண்டியன் ஆளும் கொங்கை என்னும் நாடு.
இரண்டாம் சன்னியாசி
இவன் புங்கம்பாலை அருந்தி, "நான் பெண்களை பார்க்க மாட்டேன்" என்று கூறி, எவ்வித ஆடையுமின்றி வாழ்ந்து வருவான். இவனது நாடு சிங்கள நாட்டிலுள்ள சீகண்டன் இராச்சியமாகும்.
மூன்றாம் சன்னியாசி
இவன் ஒருகையில் சூரக்கோலும், மற்ற கையில் சூலாயுதமும் பிடித்து மிகவும் திமிராக பேசித் திரிவான். பின் தம் கர்ம வினையால் இறப்பான். இவனது நாடு கோரக்கன் நாட்டில் குருகேத்திரன் என்னும் இராச்சியம்.
நான்காம் சன்னியாசி
இவன் கண் இமையை மூடாது தனது கால்களைக் கைகளினால் இறுக்கிக் கட்டியபடி இருப்பான்.
ஐந்தாம் சன்னியாசி
இவன் சோறு உண்ணாமல் எலுமிச்சை இலையை அரைத்துப் பிசைந்து தின்று வாழ்வான்.
ஆறாம் சன்னியாசி
இவன் கஞ்சாவைப் புகைத்து, உடம்பு முழுவதையும் கெடுத்து, தவம் இருப்பதை போன்று இருப்பான்.
ஏழாம் சன்னியாசி
இவன் இடுப்பில் மட்டும் ஒரு ஆடையைக் கட்டிக்கொண்டு வீணாகப் பட்சிகளையும், பறவைகளையும் கொன்று தின்று வாழ்வான்.
எட்டாம் சன்னியாசி
கண்களை மூடிக்கொண்டு தனது சுவாசத்தை இழுத்து இழுத்து விட்டபடி வாழ்வான்.
ஒன்பதாம் சன்னியாசி
இவன் உமிழ்நீரைத் தொண்டைக்குக் கீழ் இறங்க விடாமல் தடுத்து, அசை விறிவிறுக்க, நீரைப் போன்று கண்கள் எல்லாம் வெளுத்து இருக்க, தூங்கி விளித்தவனைப் போன்று சுற்றிப் பார்த்து இன்ப உறவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பான்.
பத்தாம் சன்னியாசி
இவன் எப்பொழுது சிற்றாமணக்கு இலையில் துயின்று கொண்டிருப்பான்.
பதினொன்றாம் சன்னியாசி
பவளமணிகளை கோவையாகக் கழுத்தில் கட்டிக்கொண்டு, எப்பொழுதும் உழுந்தையும் கஞ்சாவையும் பூரணமாக நம்பிக்கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்பான்.
பனிரெண்டாம் சன்னியாசி
மிகுந்த சுமையான கற்களைக் தன்னைச் சுற்றி கோவையாக அடுக்கிக் கொண்டு உழக்கு அளவு இலுப்பை இலைச்சாறினை வயிற்றுக்கு குடித்து வருவான்.
பதிமூன்றாம் சன்னியாசி
இந்த வகை ரிஷி பருப்பும், அவலும், பழமும் தினந்தோறும் உண்டு கொண்டிருப்பான். மேலும், கோவை இலையையும், கொடுப்பை இலையையும் பறித்து, நோய்கள் தீர்த்து தொண்டு செய்து வாழ்ந்து வருவான்.
பதினான்காம் சன்னியாசி
இவன் இறைவனைத் துதிக்கின்ற ஒரு மூல மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருப்பான். மேலும், கையினால் அதன் எண்ணிகையை ஏற்றி அதற்கு அடையாளமாக ஏதாவது ஒன்றை முடிச்சுப் போட்டபடி யிருப்பான்.
பதினைந்தாம் சன்னியாசி
இவ்வகையான் வாசனை பொருந்திய பால் கெந்தமாலையை அணிந்து, மதுவைக் குடித்து, மகிழ்ச்சியோடு உறங்கிக் கொண்டிருப்பான்.
பதினாறாம் சன்னியாசி
இவ்வகை சன்னியாசி ஆடை உடுக்க வேண்டும் என்கின்ற அறிவு சிறிதும் இல்லாமல் கோடை இட்டுப் புள்ளித்த பானத்தை குடித்துக் கொண்டலைவான்.
பதினேழாம் சன்னியாசி
இவன் கள்ளிச் செடியை தின்று மேலும் பல காய்களையும் இலைகளையு முண்டு, தீ எரிந்துகொண்டிருக்கும் கொள்ளிக்கட்டை அருகில் சென்று குளிர் காய்ந்துகொண்டிருப்பான்.
பதினெட்டாம் சன்னியாசி
இவ்வகை சன்னியாசி சிறந்த அத்திக் காயை உண்டு நாமமணி மாலையை அணிந்து, கொல்லன் உலைத்தீ போன்று அலைந்து திரிவான்.
பத்தொன்பதாம் சன்னியாசி
இவன் யாவரும் அறியும்படியாக மான் தோலின்மேல் வாழ்ந்து வருவான்.
இருபதாம் சன்னியாசி
இவன் பெரிய வீசை உடையவனாய் இருப்பான்.
இருபத்தொன்றாம் சன்னியாசி
இவன் நாகத்தின் முள்ளை எடுத்து தலைமேல் அணிந்துகொண்டு, ஆந்தைப்பறவையைச் சுற்றிக் கும்பிட்டுக் கொண்டு திரிவான்.
இருபத்திரண்டாம் சன்னியாசி
இவ்வகையான் மது வகைகளை மந்திர எழுத்துக்களின் முன்னால் வைத்து அம்மந்திரத்தை வணங்குவான்.
இருபத்துமூன்றாம் சன்னியாசி
இவன் தலை முடியையும் தாடியையும் வளர்த்து, சோற்றினை முன்னால் படைத்து, பால், பழம், போன்றவற்றில் மந்திரத் தந்திரங்களை ஓதி உண்டு வாழ்ந்து வருவான்.
இருபத்து நான்காம் சன்னியாசி
இவ்வகையான் எல்லா இடங்களிலும் அலைந்து, நித்தம் மனதில் மந்திரத்தை உச்சரித்து உருவேற்றி உடல் வாடி அமர்ந்திருப்பான்.
இருபத்தைந்தாம் சன்னியாசி
இவன் எருக்குச் செடியில் பால் அருந்தி அழகான பெண்ணுருவத்தை செய்து, அதன்மேல் படுத்திருப்பான்.
இருபத்தாறாம் சன்னியாசி
இவ்வகை சன்னியாசி நன்றாகக் கள்ளை குடித்து உணவில் கறி, உப்பைச் சேர்க்காமல் புள்ளியிட்ட மிருகத்தோலில் புகழுக்காக இருந்து வாழ்வான்.
இருபத்தேழாம் சன்னியாசி
இவன் நீரை தியானித்து நித்திரை உருவாக்குகின்ற மந்திரத்தை ஓதிக் குடித்துவிட்டு இறைவழித் தியானமின்றித் தூங்குவான்.
இருபத்தெட்டாம் சன்னியாசி
இவ்வகை சன்னியாசி கொண்டை முடியை பல கோணலாக முடித்து, ஒரு சிறு தாடியை கையில் பிடித்த வண்ணம் சிறிதும் வெட்கமின்றிச் சுற்றித் திரிவான்.
இருபத்தொன்பதாம் சன்னியாசி
இவன் சூலத்தை கையில் பிடித்த வண்ணம் அச்சூலத்தில் சுழி எழுத்தாகிய ஓங்கார எழுத்தை எழுதிப் பல வேடங்கள் இட்டு அலைந்து திரிவான்.
முப்பதாம் சன்னியாசி
இவன் நீர் ஒழுகும் சிரங்கு தன்னைப் பற்றி இருக்க முச்சந்தியில் போய் அங்கே விழுந்து கிடப்பான்.
முப்பத்தொன்ட்ரான்சன்னாசி
கூர்மையுள்ள காது கொஞமும் கெஅலது ஊமையெனவெ திரிவான்
முப்பத்துரண்டாம் சன்னியாசி
இவன் சர்ப்பத்தின் னஞஜு தான் உண்டோம் என்ட்ரு ப்சொல்லிக்கொண்டு உயர்ன்த் திடில் பார்த்து அதன் மேல் ஏறி இருப்பான்.

ஆதாரம் தொகு

  • அகிலத்திரட்டு அம்மானை
  • நா.விவேகானந்தனின், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், முதற்பாகம்.
முப்பத்தொன்ட்ரான்சன்னாசி - கூர்மையுள்ள காது கொஞமும் கெஅலது ஊமையெனவெ திரிவான்/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐம்பத்தைந்து_ரிஷிகள்&oldid=2367775" இலிருந்து மீள்விக்கப்பட்டது