ஒகரா மாவட்டம்

ஒகரா மாவட்டம் (Okara District), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஒகரா ஆகும். 1982-இல் இம்மாவட்டம் பழைய மாண்டிகோமாரி மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு 1982-இல் நிறுவப்பட்டது.[2]

ஒகரா மாவட்டம்
ضِلع اوكاڑا
மாவட்டம்
மேல்: சைக்கு செரீப் மசூதி
கீழ்: கௌசியா மசூதி
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஒகரா மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஒகரா மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°48′05″N 73°26′54″E / 30.801380°N 73.448334°E / 30.801380; 73.448334
நாடுபாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்சாகிவால்
நிறுவிய ஆண்டு1982
தலைமையிடம்ஒகரா
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
 • துணை ஆணையர்முகமது அலி இஜாஸ்[1]
பரப்பளவு
 • மொத்தம்4,377 km2 (1,690 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்3,040,826
 • அடர்த்தி690/km2 (1,800/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் நேரம் (ஒசநே+5)
தாலுகாக்கள்3
ஒன்றியக் குழுக்கள்10

முல்தான் நெடுஞ்சாலை இம்மாவட்டத்தின் ஒகரா நகரத்தை லாகூருடன் ராவி ஆறு வழியாக இணைக்கிறது.

Map

இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரித்தின் அரப்பா தொல்லியற்களங்களைக் கொண்டது.

புவியியல் தொகு

ஒகரா மாவட்டத்தின் தெற்கில் பகவல்பூர் மாவட்டம், தென்மேற்கில் பாக்பத்தன் மாவட்டம், மேற்கில் சாகிவால் மாவட்டம், வடக்கில் பைசலாபாத் மாவட்டம் மற்றும் நங்கானா சாகிபு மாவட்டம், கிழக்கிலும், வடக்கிலும் கசூர் மாவட்டம், தென்கிழக்கில் இந்தியாவின் பசில்கா மாவட்டம் அமைந்துள்ளது. இந்தியாவின் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாபையும் பிரிக்கும் இராட்கிளிப் கோடு ஒகரா மாவட்டம் ஒட்டி அமைந்துள்ளது.

வேளாண்மை தொகு

பியாஸ் ஆறு பாயும் இம்மாவட்டம் மண் வளம் மற்றும் நீர் வளம் கொண்டது. இம்மாவட்டத்தில் உருளைக் கிழங்கு, தக்காளி, கரும்பு, கோதுமை, நெல், மக்காச் சோளம் போன்ற பயிர்கள் விளைகிறது. ஆரஞ்சு, மாம்பழத் தோட்டங்கள் மிகுதியாக உள்ளது. மேலும் எலுமிச்சம் பழம், கொய்யா, திராட்சைத் தோட்டங்களும் கொண்டது. இம்மாவட்டத்தில் பால் உற்பத்திக்கு சாஹிவால் மாடுகள் மற்றும் எருமைகள் அதிகம் வளர்க்கப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒகரா மாவட்டத்தின் மக்கள் தொகை 30,40,826 ஆகும். அதில் ஆண்கள் 1,564,470 மற்றும் பெண்கள் 1,476,071 ஆகவுள்ளனர். கிராமப்புற மக்கள் தொகை 21,98,262 ஆகவும்; நகர்புற மக்கள் தொகை 8,42,564 ஆகவுள்ளது. சராசரி எழுத்தறிவு 58.28% மட்டுமே. இம்மாவட்டத்தில் இசுலாமியர் 98.53%, கிறித்தவர்கள் 1.44% ஆக உள்ளனர்.[3]இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் பஞ்சாபி மொழி 96.10%, உருது, காஷ்மீரி, பஷ்தூ போன்ற மொழிகள் 2.65% பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் ஜாட் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் தொகு

ஒகரா மாவட்டம் 3 தாலுகாக்களாகவும், 10 ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகரா_மாவட்டம்&oldid=3594002" இருந்து மீள்விக்கப்பட்டது