ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் என்பது தமிழக மக்களின் குறிப்பாக தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முன்வைத்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்கான மொத்தச் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 13.34 பில்லியன் ரூபாய்களில் 12.4 பில்லியன் ரூபாய்களை ஜப்பானின் பன்னாட்டு கூட்டுறவு வங்கி வழங்க இருக்கிறது. மீதமான செலவை தமிழ்நாடு அரசு பொறுப்பேற்கும்[1]. இத்திட்டத்திற்கான அடிக்கல்லை தர்மபுரி, ஒகேனக்கலில் பெப்ரவரி 26, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி நாட்டினார். இத்திட்டத்தினால் மூன்று நகராட்சிகளில் உள்ள 6,755 குடிமனைகள், 17 ஊராட்சிகள், மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத் திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் புளோரைடு அதிகமாக இருப்பதை குறைத்து நீர் தூய்மைபடுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்.[2].

தர்மபுரியில் ஒகேனக்கல் அருவி

இத்திட்டத்திற்கு கர்நாடக பாஜக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். கர்நாடக முதல்வர் எடியூரப்பா போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இத்திட்டம் நடைபெறும் ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்பது அவர்கள் வாதம்.

மேற்கோள்கள் தொகு

  1. "ஒகேனக்கல் குடிநீர் திட்டம்-26ல் கருணாநிதி அடிக்கல்". Archived from the original on 2010-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-04-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-05. பார்க்கப்பட்ட நாள் 2008-04-05.

மேலும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு