ஒசி அபேகுணசேகரா
ஒசி அபேகுணசேகரா (Ossie Abeyagunasekera, 7 ஆகத்து 1950 - 9 நவம்பர் 1994) இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார்.[1] இவர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் காமினி திசாநாயக்காவை ஆதரித்து கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[2] இவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
ஒசி அமேகுணசேகரா Ossie Abeyagunasekera | |
---|---|
இலங்கை மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் | |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் | |
பதவியில் 25 ஆகத்து 1994 – 24 அக்டோபர் 1994 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 7, 1950 |
இறப்பு | நவம்பர் 9, 1994 தொட்டலங்க, பாலத்துறை, இலங்கை. | (அகவை 44)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை மக்கள் கட்சி |
1986 ஆம் ஆண்டில் ஒசி அபேகுணசேகரா விஜய குமாரணதுங்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர்க்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தினரை விடுவித்தார். விஜய குமாரதுங்க 1988 ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து குமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சியின் தலைவரானார். ஒசி அபேகுணசேகரா ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியை நிறுவி 1988 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 235,719 (4.63%) வாக்குகளைப் பெற்றார்.
ஒசி அபேகுணசேகராவின் தந்தை ஏ. டபிள்யூ. ஏ. அபேகுணசேகரா என்பவரும் ஓர் அரசியல்வாதி ஆவார். துறைமுக ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். 1960களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பீட்டர் கெனமனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மும்பையில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார்.