ஒசூர் தொடருந்து நிலையம்
ஒசூர் தொடருந்து நிலையம் (Hosur railway station, நிலையக் குறியீடு:HSRA) இந்தியாவின், தமிழகத்தின், ஒசூர் மாநகரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. சேலம் - பெங்களூரு பாதை 1913-இல் போடப்பட்டது, 1941-இல் இப்பாதை மூடப்பட்டது. மீண்டும் 28 ஆண்டுகள் கழித்து பெங்களூர் - சேலம் தொடர்வண்டி பாதை மீட்டர் கேஜ் பாதையாக போடப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. 1996-இல் இப்பாதை அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.[1] இதன் பிறகு 2017-18 ஆண்டில் ஒசூர் -பெங்களுர், தருமபுரி இடையே மின்சார தொடருந்து இயக்குவதற்காக மின்மயமாக்கும் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் ஒசூர் -பெங்களுர் வரையிலான மின்மயமாக்கப்பணிகள் 2020 ஆண்டின் இறுதியில் முழுமையடைந்தது.[2] இதனையடுத்து 2020 திசம்பர் 6 அன்று ஒசூர் - பெங்களுர் பயணிகளுக்கான முதல் மின்சார தொடருந்து பயணம் தொடங்கியது.[3]
ஒசூர் | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
ஒசூர் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தொடருந்து நிலைய சாலை, ஒசூர், இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°43′06″N 77°49′22″E / 12.7184°N 77.8229°E | ||||
ஏற்றம் | 895 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | சேலம் - பெங்களூர் வழித்தடம், தருமபுரி வழியாக | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்படுகிறது | ||||
நிலையக் குறியீடு | HSRA | ||||
மண்டலம்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | பெங்களூர் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
வசதிகள்
தொகுஇந்த ரயில் நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன.
- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
- புத்தக விற்பனை நிலையம்
- ஐ. ஆர். சி. டி. சி தேனீரகம்
- ஆவின் பாலகம்
- பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
- ரயில் இருப்பிடங்காட்டி/ ஓடும் நிலை அறியும் சேவை
- ஒலிபெருக்கி அறிவிப்பு சேவை
போக்குவரத்து
தொகுஇந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டிகள் [4]
விரைவுத் தொடருந்து
எண். | தொடர்வண்டியின் எண்: | தொடக்கம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் | பயண முறை |
---|---|---|---|---|---|
1. | 17235/17236 | பெங்களூர் | நாகர்கோயில் | விரைவுவண்டி | தினமும் |
2. | 16235/16236 | தூத்துக்குடி | மைசூர் | தூத்துக்குடி மைசூர் விரைவுவண்டி | தினமும் |
3. | 16231/16232 | மயிலாடுதுறை | மைசூர் | மயிலாடுதுறை மைசூர் விரைவுவண்டி | தினமும் |
4. | 11013/1104 | குர்லா, மும்பை | கோயம்புத்தூர் | விரைவுவண்டி | தினமும் |
5. | 16527/16528 | யஷ்வந்த்பூர், பெங்களூர் | கண்ணூர் | விரைவுவண்டி | தினமும் |
6. | 12677/12678 | பெங்களூர் | எர்ணாகுளம் | விரைவுவண்டி | தினமும் |
7. | 12257/12258 | யஷ்வந்த்பூர் | கொச்சுவேலி, திருவனந்தபுரம் | கரீப் ரத் விரைவுவண்டி | வாரத்தில் மூன்று நாட்கள் |
8. | 11021/11022 | தாதர் | திருநெல்வேலி | சாளுக்கியா விரைவுவண்டி | வாரத்தில் மூன்று நாட்கள் |
9. | 16573/16574 | யஷ்வந்த்பூர் | புதுச்சேரி | விரைவுவண்டி | வாரமொரு முறை |
10. | 12647/12648 | கோயம்புத்தூர் | ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் | கொங்கு விரைவுவண்டி | வாரமொரு முறை |
11. | 20641/20642 | கோயம்புத்தூர் | பெங்களூர் | கோவை வந்தே பாரத் அதிவிரைவு வண்டி | வாரத்தில் ஆறு நாட்கள் |
பயணியர் தொடருந்து
எண். | வண்டி எண்: | தொடக்கம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் | பயண வரத்து |
---|---|---|---|---|---|
1. | 76553/76554 | பெங்களூர் | தருமபுரி | பயணிகள் தொடருந்து | தினமும் |
2. | 56421/56422 | சேலம் | யஷ்வந்த்பூர் | பயணிகள் தொடருந்து | தினமும் |
3. | 56513/56514 | காரைக்கால் | பெங்களூர் | பயணிகள் தொடருந்து | தினமும் |
4. | 06591/06592 | யஷ்வந்த்பூர் | ஓசூர் | பயணிகள் தொடருந்து | ஞாயிறு தவிர ஏனைய நாட்கள் |
சான்றுகள்
தொகு- ↑ இரா. இராமகிருட்டிணன் (2008). தகடூர் மாவட்ட வரலாறும் பண்பாடும். ராமையா பதிப்பகம். p. 507.
- ↑ ஒசூர் - பெங்களூரு இடையே விரைவில் மின்சார ரயில் தொடக்கம்: ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் நிறைவு, இந்து தமிழ் (நாளிதழ்), 2020 நவம்பர் 5
- ↑ ஓசூர் - பெங்களூரு மின்சார ரயில் சேவை துவக்கம்: அறிவிப்பு இல்லாததால் 10 பேர் மட்டுமே பயணம், தினமலர், 2020 திசம்பர் 8
- ↑ http://indiarailinfo.com/departures/hosur-hsra/1578