ஒடிசா வரலாறு

ஒடிசா (முன்னர் ஒரிசா) என்ற பெயர், இந்தியாவில் இப்பகுதி தற்போது உள்ள நிலையைக் குறிக்கிறது. ஆனால் இந்த பிராந்தியம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படது. பிராந்தியத்தின் எல்லைகளும் பல்வேறு காலகட்டங்களில் மாறுபட்டு வந்துள்ளது.

ஒடிசாவில் மனித வரலாறு பழங் கற்காலம் முதல் தொடங்குகிறது, இங்கு பழங்கால தழும்பழி கருவிகள் பல்வேறு இடங்களில் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் வரலாறு துவக்கக் காலப் பகுதி பெரும்பாலும் தெளிவாக இல்லை, இப்பிராந்தியத்தைப் பற்றி சில குறிப்புகள் மகாபாரதம், மகா கோவிந்த சுதா மற்றும் சில புராணங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ.மு. 261 இல் இப்பகுதி, மவுரிய பேரரசின் அசோகரால் கலிங்கப் போரின் ரத்த வெள்ளத்தில் கைப்பற்றப்பட்டது. இப்போரின் அழிவுகள் அசோகரை மனதளவில் பெரும் பாதிப்பை உள்ளாக்கியது. இதனால் அமைதிவழிக்கு திரும்பிய அசோகர் புத்த மதத்தைத் தழுவினார். இதன் பிறகு அவர் பல்வேறு அயல் நாடுகளுக்கு அமைதித் தூதுவர்களை அனுப்பினான். இவ்வாறு இவர் செயல்பட்டதில் ஒரு மறைமுக விளைவாக, ஆசியாவில் புத்த மதம் பரவியது.

மேலும் இப்பகுதியில் நடந்த கடல்சார் வர்த்தக உறவுகளின் காரணமாக இப்பகுதி கிழக்கிந்தியத் தீவுகள் பகுதியின் மற்றொரு அரசாட்சியாக அறியப்பட்டது.

பொ.ஊ. 1568 ஆம் ஆண்டு இப் பிராந்தியத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது. பொ.ஊ. 1568 இல், இப் பிராந்தியம் வங்காள சுல்தான்களின் படைத் தளபதியான கலபஹாட் தலைமையிலான படைகளால் வெற்றி கொள்ளப்பட்டது. இதனால் பிராந்தியம் தனது அரசியல் அடையாளத்தை இழந்து. இப் பகுதியில் பின்வந்த ஆட்சியாளர்கள் உண்மையான அரசர்கள் என்றாலும் அவர்களின் கிளை நதிபோன்ற பிரபுக்கள் கட்டுப்பாட்டிலேயே பிராந்தியம் இருந்தது. 1751 ஆண்டுக்குப் பின், மராட்டியர்கள் கிட்டத்தட்ட அரை தசாப்தங்கள் இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1803 ஆம் ஆண்டு, பிரித்தானியப் பேரரசின் கீழ் வந்தது. பிரித்தானியர் இப்பிராந்தியத்தை மற்ற பிரதேசங்களின் பகுதிகளாக பிரித்தனர். 1936 ஆம் ஆண்டு, ஒடியா மொழி பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டு ஒடிசா மாகாணம் உருவாக்கப்பட்டது.

ஒடிசாவின் வரலாற்றுகாலப் பெயர்கள் தொகு

தற்கால ஒடிசா பகுதியை உள்ளடக்கிய பிராந்தியம் வரலாற்றுக்காலப் பகுதி முழுக்க அதே பெயரில் அறியப்படாமல் இருந்தது. அதன் பகுதிகள் வேறு சகாப்தங்களில் வெவ்வேறு பெயர்களால் குறிக்கப்பட்டு வந்துள்ளது.

  • கலிங்கம்: என்ற பெயர் சில பழைய நூல்களில் குறிப்பிடப்படுகிறது (மகாபாரதம் மற்றும் சில புராணங்கள்), ஒரு அரசனான பாலி என்பவர் பிளைகள் இல்லாமல் இருந்தார். இதனால் முனிவர் திர்காத்தமா என்பரிடம் தன் மகன்களுடன் தன்னை ஆசிர்வதிக்குமாறு வேண்டினார். இதனால் முனிவர் இவரது மனைவிக்கு ஐந்து பிள்ளைகளை அருளினார், இந்த அரசியின் பெயர் சுதேசனா.[1] இவளுக்கு பிறந்த இளவரரசர்களின் பெயர்கள் அங்கா, வங்கா, கலிங்கா, சுக்மா, பௌண்டரா.[2][3] ஆகும். பிறகு இந்த இளவரசர்களால் அவர்களின் பெயர்களாலேயே அரசாட்சிகள் நிறுவப்பட்டன. இளவரசர் வங்கா வங்க நாட்டை, நிறுவினார் இது தற்கால வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்கப் பகுதியாகும். இளவரசர் கலிங்கா கலிங்க நாட்டை நிறுவினார, இதுவே தற்கால ஒடிசா பகுதி, வடக்கு சர்கார் பகுதி ஆகும்.[4] தொலெமி, மூத்த பிளினி, கிளாடியஸ் அயிலியன்ஸ் ஆகியோர் கலிங்கம் என்ற பெயரைத் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.[5]
  • உத்கலா: உத்கலா என்பது கலிங்கத்தின் ஒரு பகுதியாகும் இது மகாபாரதத்தின் சில பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது. கர்ணன் மற்றவர்கள் மத்தியில் உத்கல இராஜ்ஜியத்தை வெற்றி கொண்டதுபோல கூறப்படுகிறது.[6] ஆனால், இரகுவம்சம் மற்றும் பிரம்ம புராணம் போன்ற மற்ற நூல்களின்படி, அங்கு தனி அரசாட்சி நிலவியதாக கூறுகிறது.[7] இந்த உத்கலப் பிரதேசம் கலிங்கத்தில் எந்த இடத்தைச் சேர்ந்தது என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன (உத்கல) பகுதி கலிங்க நாட்டின் ஒரு பகுதியாகவோ அல்லது உத்-கலிங்கா. என்ற சொல்லைக் குறிப்பதாகவோ இருக்கலாம். உத்கல தேசம் என்பது "மிகச் சிறந்த கலைகள்" (உட்கர்ஷ கலா) நிறைந்த நிலம் என்ற பொருள் இருக்கலாம்.[8] பெயர் தோற்றம் தொடர்பாக இதுபோன்ற மற்ற வாதங்களும் உள்ளன.
  • மகாகண்டரா: இந்தப் பெயர் சில குப்தர் கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. இச்சொல் "பெருங்காடு" என்ற பொருளை தருகிறது. மற்றும் இது பொதுவாக தற்கால களாஹாண்டி மாவட்டம் மற்றும் ஜேய்பூர் பகுதியைக் குறிக்கிறது.[9] மகாபாரதத்திலும் கண்டரா என்ற பெயர் குறிப்பிடுகிறது, இது இப்பகுதியைக் குறிப்பதாகவோ அல்லது அல்லாததாகவோ இருக்கலாம்.[10]
  • உத்ரா: உத்ரா ( உர்தா-தேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது) இச்சொல் முதலில் உத்ரா என்ற ஒரு இன குழு அல்லது பழங்குடி மக்களைக் குறிக்க பயன்பட்டிருக்கலாம். ஆனால் பின்னர் ஒடிசா கடற்கரை பகுதியைச் சுற்றி, உத்ர ராஜ்யம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.[11]
  • ஒர்டா: ஒட்ரா ( ஒட்ரா-தேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது) எளிமையாக உத்ரா என்று குறிப்பிடும் சொல் ஒரு பழங்குடி மக்களை குறிக்கும் சொல்லாக இருக்கலாம், ஆனால் பின்னர் இது ஒட்ரா தேசத்தை குறிப்பிடும் சொல்லாகவும் வந்தது.
  • ஒட்டியானா: ஒட்டியானா, என்ற பெயரை சில பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன, இதை சில அறிஞர்கள்ஒடிசாவை குறிப்பிடப்படுவதாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
  • கமலா மண்டலா: அதாவது "தாமரை பிராந்தியம்", என்ற பொருள் கொண்ட இந்தச் சொல் 13 ஆம் நூற்றாண்டின் கலாஹந்தியின் களாஹாண்டி மாவட்டம் நர்லா கல்வெட்டுகளில் இந்த பெயர் குறிப்பிடப்படுகிறது.[12]
  • தென் கோசலை: (தக்‌ஷின கோசலை) என்பது தற்கால சத்தீசுகர் மற்றும் மேற்கு ஒடிசாவை குறிப்பதாகும். இதை தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோசலையையோடு, குழப்பிக் கொள்ளக்கூடாது. இராமாயணத்தின்படி, இராமனின் மகனான இலவன் உத்தர கோசலையை ஆண்டான் மற்றும் இன்னொரு மகனான குசன் இதே பகுதியை ஆண்டான்.
  • கொங்கோடா: கஞ்சம் மாவட்டத்தில் கிடைத்த ஒரு செப்பேடு கொங்கோடம் என்ற பகுதியை குறிக்கிறது (இது கன்கோடம் என்றும் படிக்கப்படுகிறது).[13]
  • திரிகலிங்கா: இந்தப் பெயர் சில செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. திரி-கலிங்கா என்பது "மூன்று கலிங்கர்கள்" என்ற பொருள் குறிப்பதாக இருக்கலாம் இது கலிங்க நாட்டின் மூன்று மாநிலங்களாக கலிங்ம், தென் கோசலை, கொங்கோடா ஆகியவற்றை குறிப்பிடப்படுவதாக இருக்கலாம்.[14]
  • சேடி: சேடி (சேடிராஷ்ட்ரா என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது aகாரவேலனின் நாட்டைக் குறிப்பதாகும். இந்த பெயர் அவனது மறைவுக்குப் பிறகு அவனது பேரரசை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. (சேடி பேரரசு என்பது மகாமேகவாகன வம்சத்தையும் குறிப்பிடப்படுகிறது). இதனுடன் மேற்கு இந்தியாவின் தேதி நாட்டுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.
  • தோசலி: தோசலி (தோஷாலி என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது ஒரு நகரத்தையும், அதைச்சுற்றிய பிராந்தியத்தையும் குறிக்கப் தோஷாலா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது அசோகர் காலத்தில் கலிங்கத்தின் ஒரு உட்பிரிவாக இருக்கலாம். தோசா நகரம் தற்கால தௌளி நகரத்தைக் குறிக்கிறது. பிற்காலத்தில் (பொ.ஊ. 600), வட தோசாலி (உத்ர தோசாலி) மற்றும் தெற்கு தொசாலிand (தக்‌ஷின தோசாலி) என கூறப்பட்டது, இந்த பகுதியை வடக்கு தெற்காக மகாந்தி பிரித்திருக்கலாம்.
  • உரன்ஷின்: இந்த பெயர் 10 ஆம் நூற்றாண்டு அரபு புவியியலாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.[15]
  • ஜாஜ்நகர்: இந்நப் பெயரைக் கொண்டு ஒடிசாவை தபாகத்-இ-நசிரி (1357), தாரிக்-இ-பிரோஸ் ஷாஹி ( 1357.), மற்றும் மற்றும் சில நூல்களில் இக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[16][17]
  • ஒடிவிஸ்சா: இந்தப் பெயர் தாராநாத் உள்ளிட்ட சில பௌத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[18]

பழங்கால ஒடிசா தொகு

பழங்கால நூல்கள் தொகு

சில நூல்களின்படி (மகாபாரதம் மற்றும் சில புராணங்கள்), ஒரு அரசனான பாலி என்பவர் பிளைகள் இல்லாமல் இருந்தார். இதனால் முனிவர் திர்காத்தமா என்பரிடம் தன் மகன்களுடன் தன்னை ஆசிர்வதிக்குமாறு வேண்டினார். இதனால் முனிவர் இவரது மனைவிக்கு ஐந்து பிள்ளைகளை அருளினார். இதன்படி அரசிக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர் இவர்களின் பெயர் அங்க, வங்க, கலிங்க, சும்ஹ , பௌண்டரா. பிறகு இந்த இளவரசர்களால் அவர்களின் பெயர்களாலேயே அரசாட்சிகள் நிறுவப்பட்டன. இளவரசர் வங்கா வங்க நாட்டை, நிறுவினார் இது தற்கால வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கப் பகுதியாகும். இளவரசர் கலிங்கா கலிங்க நாட்டை நிறுவினார், இதுவே தற்கால ஒடிசா பகுதி.

மகாபாரதத்தில் கலிங்க நாடு குறித்து பல இட்களில் குறிப்படப்பட்டுள்ளது. கலிங்க மன்னனான ஸ்ருதயுதா, இவனது பெற்றோர் வருணன் மற்றும் பர்நசா ஆறு ஆவர். இவன் குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியில் இணைந்து போரிட்டார். இவரது தாயாரின் கோரிக்கையே ஏற்று இவரது தந்தை ஒரு தெய்வீக தண்டாயுதத்தை ஸ்ருதாயுதாவுக்கு வழங்கப்பட்டிருந்தது, இது இவரைக் காக்கும் என்றும், ஆனால் போரில் ஈடுபடாதவரை இதைக்கொண்டு தாக்கினால் இந்த ஆயுதம் திரும்பிவந்து இவரையே அழித்துவிடுமென்று எச்சரித்தார். அர்சுனனின் அம்பு மழையில் போர் தீவிரமானது, போரின்போது தனது ஆயுதத்தை போரில் ஈடுபடாத நிராயுதபாணியாக தேரோட்டிக்கொண்டிருந்த கிருட்டிணனின் மீது ஏவினார் இதனால் தண்டாயுதம் திரும்பிவந்து ஸ்ருதாயுதாவையதாக்கிக் கொன்றது.[19] கிருஷ்ணனைக் கொன்ற வில்லாளனான ஜர சவரா மற்றும் ஏகலைவன் ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.[20][21]

பௌத்த நூலான, மஹாகோவிந்த சுதண்டா, கலிங்க நாட்டையும் அதன் அரசியான சத்தாபு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.[22] 6 ஆம் நூற்றாண்டில் சூத்ரகராவில், பவுத்தியனா, கலிங்க நாட்டு இன்னும் வேத மரபினால் பாதிக்கப்படாதிக்கப்படாமல் உள்ளது என்று குறிப்பிடுகிறார். மேலும் இவர் கலிங்க நாட்டிற்கு மக்கள் வர (பிற நாட்டு மக்கள்) தவம் செய்திருக்கவேண்டும் என்று கூறுகிறார்.[23]

மௌரியர்களுக்கு முற்பட்ட காலம் தொகு

மகாபத்ம நந்தர் என்னும் மகத ஆட்சியாளர் பொ.ஊ.மு. 350 இல் தனது ஆட்சிக்காலத்தில் கலிங்க நாட்டை வெற்றி கொண்டதாக கருதப்படுகிறது. பொ.ஊ.மு 350. ஹத்திகும்பா கல்வெட்டுகளில் கலிங்க நாட்டுப் பகுதியை நந்தர் வெற்றி கொண்டதைக் குறிப்பிடுகிறது.[24] இந்தக் கல்வெட்டுகளில் அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் நந்த அரசர்களால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது.[25]

அசுர்கா என்ற இடத்தில், மணிகள் மற்றும் அச்சுகுத்திய காசுகள் கண்டறியப்பட்டன. இவை மவுரியர் காலத்துக்கு முற்பட்ட பெயர் தெரியாத அரசரின் காலத்தைச் சேர்ந்தவையாகும்.[26]

மௌரியரின் ஆக்கிரமிப்பு தொகு

மௌரிய மரபின் அசோகரால் கலிங்கப் போரினால் ரத்த வெள்ளத்தில் பொ.ஊ.மு. 261 இல் கலிங்க நாடு கைப்பற்றப்பட்டது.[27] அசோகர் ஆட்சிக்கு வந்த எட்டாவது ஆண்டில் இப்போர் நிகழுந்தது. இவரது சொந்த பிரகடனங்களின்படி, இப்போரில் 1,000,000 மக்கள் கொல்லப்பட்டனர், மற்றும் 1,500,000 கைப்பற்றப்பட்டனர் மற்றும் இன்னும் பலர் பாதிப்புகளுக்கு ஆளாயினர்.[27] இப்போரின் அழிவுகள் அசோகரை மனதளவில் பெரும் பாதிப்பை உள்ளாக்கியது. இதனால் அமைதிவழிக்கு திரும்பிய அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்.

 
கலிங்கப்போர் நடந்த தயா ஆற்றுப் படுகை
 
அசோகா் படையெடுப்புக்கு முந்தைய கலிங்க நாடும் மவுரியப் பேரரசும்

காரவேலன் தொகு

காரவேலன் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட மகாமேகவாகன வம்சத்தின் மூன்றாவதும் மிகச் சிறந்தவனுமான பேரரசன் ஆவான். காரவேலன் குறித்த முக்கியமான தகவல்கள் அவனது 17 வரிகளைக்கொண்ட ஆத்திகும்பா கல்வெட்டில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு, ஒடிசாவின் புபனேசுவருக்கு அருகில் உள்ள உதயகிரிக் குன்றில் காணும் குகையொன்றில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இம்மரபை சேடி (செட்டி என்றும் படிக்கப்படுகிறது.) என்று குறிப்பிடுகிறது.[25] ஆனால் இது மேற்கு இந்தியாவில் இருந்த செடி ராஜ்ஜியம் அல்ல. இக்கல்வெட்டு இவரது 13 வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

குஷானர்கள், சாதவாகனர்கள், முருந்தர்கள் தொகு

சாதவாகனர் மரபின் கவுதமிபுத்ரா சத்கரனி கலிங்கத்தின் சாத்தியமான சில பகுதிகளில் செல்வாக்கு செலுத்தியனார்.

குஷானர்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளில் கலிங்க நாட்டை அடைந்திருப்பர்கள் அல்லது ஒரு பகுதியைக் கைப்பற்றி இருக்கலாம் குஷானர்களின் பல நாணயங்கள் கலிங்க நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளது, குறிப்பாக ஜவுகடா, சிசுபால்கர், மாணிக்கப்பட்டணத்தின் (புரி) குர்பாணி ஆகிய இடங்களாகும். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த நாணயங்கள் உண்மையானதைப் போன்ற சாயல் நாணயங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இக்காசுகள் குஷானர்களுக்கு பிந்தைய உள்ளூர் ஆட்சியாளர்கள் காலத்தில் அவர்களால் விநியோகிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். சிசுபால்கரில் கண்டறியப்பட்ட காசு மகாராஜா ராஜாதிராஜா தர்மதாமோதரா நாணயமாக உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் ஒரு மனித தலையும் மறு பக்கத்தில் குஷானர் அடையாளத்தையும் கொண்டு உள்ளது.[28] மூன்றாம் நூற்றாண்டில், முருந்தர் என்னும் ஒரு இனத்தவர் பாடலிபுதிரத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்திருக்காலம் என ஊகிக்கப்படுகிறது. அவர்கள் குஷானர் நாணயங்களை ஒத்த நாணயங்களை வெளியிட்டு பயன்படுத்தப்படுத்தினர்.[29] ஆனால் இவர்களைப் பற்றி பெரும்பாலும் நாணயவியல் ஆதாரங்களைத் தவிர வேறு ஆதாரங்கள் காணப்படாமையால், இவர்களின் வரலாறு இந்த காலகட்டத்தில் பெரும்பாலம் இருண்ட காலமாக இருக்கிறது.

குப்தர், மத்தறை, சரபாபுரியா தொகு

பொ.ஊ.மு. 313 இல் கலிங்க இளவரசி ஹேமாமாலா என்பவர், புத்தரின் புனிதப் பல்லை எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறி, இலங்கைக்கு மறைமுகமாக சென்று இலங்கை அரசனான சிறிமேகவண்ணனிடம் ஒப்படைத்தார்.[30] ஒரு புராணத்தின்படி புத்தரின் சிதையிலிருந்து புத்தரின் பெண் சீடரான கேமா ஒரு புனிதப்பல்லை எடுத்து ஒரு மன்னனான பிரம்மதத்தனிடம் அளித்தார். இந்த மன்னர் கலிங்க நாட்டின் தண்டபுரம் என்னும் நகரில் ஒரு கோயிலைக் கட்டி புனிதப்பல்லை அங்கே வைத்தார். பல தலைமுறைகள் கழித்து அங்கு குகசிவனின் ஆட்சியின் போது, உஜ்ஜைன் இளவரசர் புனிதப்பயணம் வந்தார். அவர் குகசிவனின் மகளான இளவரசி ஹேமாமாலாவை திருமணம் செய்துகொண்டார், இவர் பின்னர் தந்தகுமாரா (பல் இளவரசர்) என அழைக்கப்பட்டார். ஒரு மன்னர் கலிங்கத்தை தாக்கிய போது, தந்தகுமாரன் ற்றும் ஹேமாமாலா ஆகியோர் பினிதப்பல்லை பாதுகாக்க அதை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.[31][32]

சமுத்திரகுப்தர் (ஆட்சிக்காலம் பொ.ஊ. 335–375) இந்தப்பகுதியைக் கைப்பற்றினார் என்பது அவரது அலகாபாத் கல்வெட்டு வழியாகத் தெரியவருகிறது, மேலும் இதில் அவர் கைப்பற்றிய பகுதிகளாக மகாந்திரனின் கோசலை, வயாகர்ராஜனின் மகாகண்டரா, மந்தரராஜனின் கேரளம், மகேந்திரனின் பிஸ்தபுரம், சுவாமிதாதாவின் கொத்தூரா மலைப்பகுதிகள், தமனாவின் இரண்டபள்ளா, விஷ்ணூகோபனின் காஞ்சிபுரம், நில்லராஜனின் அவமுக்தா, அஸ்திவர்மனின் வேங்கி, உக்ரசேனனின் பலக்கா, குபேரனின் தேவராஸ்ட்ரம், தன்மஜயாவின் குஸ்தலபுரம், மற்றும் பிற. பிஸ்தபுரம் (தற்கால பிட்தபுரம்) என்பது கலிங்கத்தின் தலையகராக யூகிக்கப்படுகிறது. மகாகண்டரா மேற்கு ஒரிசாவின் பகுதியாக யூகிக்கப்படுகிறது. கொத்தூரா தற்கால கஞ்சாம் மாவட்டம் என கண்டறியப்பட்டுள்ளது.[9]

சமுத்திரகுப்தர் காலத்திற்குப்பிறகு, தென் கலிங்கத்தை மத்தறை மரபினர் ஆண்டனர், இவர்கள் பிஸ்தபுரத்தில் இருந்து ஆட்சி செய்தனர் ஆனால் சிம்ம்புரத்திலிருந்தும் செப்பேடுகளை வெளியிட்டனர்.[33] இவர்களின் அரசு மகாந்தியிலிருந்து கோதாவரிவரை பரவியிருந்த்து.[34]

குப்தர் காலத்திற்கு பிந்தைய காலத்தில் இன்னொரு அரசமரபான சரபபுரியா மரபினர் மேற்கு ஒடிசவை ஆண்டனர். இவர்களைப் பற்றி மிகுதியாக அறிய இயலவில்லை. இவர்களை பற்றி செப்பு தகடுகள், நாணயங்கள் கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இவர்கள் அமர்ராயகுல மரபினர் என அழைக்கப்பட்டோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.[35] இந்த மரபில் இருந்து சரபா துவங்கி இருக்கவேண்டும், அவர்கள் குப்தர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்களால் தற்கால ராய்ப்பூர், பிலாஸ்பூர், களாஹாண்டி போன்ற பகுதிகளை ஆட்சி செய்தனர்.[35] இவர்களது ஆட்சி பொ.ஊ. 499 முதல் 700 வரை நீடித்தது.

கீழைக் கங்கர் தொகு

 
கீழ கங்கர் காலத்தில் கட்டப்பட்ட ஜகந்நாதர் கோயில்.
 
முதலாம் நரசிம்ம தேவனால் கட்டப்பட்ட கொனாராக் கோயில்.

முதலாம் இந்திரவர்மன்தான் கீழை கங்க மரபில் அறியப்பட்ட துவக்கக்கால மன்னராவார். இவரது ஜிர்ஜங்கி சாசணம் பொ.ஊ. 537 இல் இவரது 39 வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.[36] இவரது தலைநகராக தண்டபுரம் இருந்துள்ளது. இன்னொரு செப்பேட்டில் இவரைப்பற்றி குறிப்படப்படுகிறது இதில் விஷ்ணுகுந்தினப் பேரரசின் மன்னரான இந்திர பத்தரக்கா இவரை தோற்கடித்ததாக உள்ளது.[37] இம்மரபின் பல அரசர்கள் திரிகலிங்காதிபதி என பட்டம் பூண்டிருந்தனர்.[38] இவர்களின் தலைநகரம் பிற்காலத்தில் முதலாம் தேவாந்திர வர்மனான் (ஆ.கா 652–682) காலத்தில் கலிங்கநகரத்திற்கு மாற்றப்பட்டது.

இவர்கள் காலத்தில், பொ.ஊ. 639 இல் சீனப்பயணியான சுவான்சாங் இந்தப் பிரதேசத்துக்கு வந்தார், இவர் தன் குறிப்புகளில் இந்தப் பகுதியில் புத்த மதம் பரவலாக நடைமுறையில் இருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் புபுஹகிரி என்ற மடம் இருந்ததை குறிப்பிட்டுள்ளார். இந்த தளம் அண்மைக் காலத்தில் அழிவுற்றது. புதிய அகழ்வாய்வுகளில் இக்காலகட்டத்தைச் சேர்ந்த பல புத்த நினைவுச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[39][40][41] 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒடிசாவை சோழப் பேரரசின் ராஜேந்திர சோழனால் கைப்பற்றப்பட்டது.[42][43][44][45][46]

பொ.ஊ. 1135 இல் அனந்தவர்மன் சோடகங்கனால் தலைநகரம் கட்டக்குக்கு மாற்றப்பட்டது.[47] இவர் காலத்தில்தான் புரி ஜெகன்நாதர் கோயில் கட்டும் பணி தொடங்கியது என்று கூறப்படுகிறது.[48] கோயில் பனிகள் பின்னர் அவரது வாரிசான மூன்றாம் அனகபீமவர்மனால் முடிக்கப்பட்டது. முதலாம் நரசிம்மதேவனால் கொனார்க் சூரியக் கோயில் கட்டப்பட்டது என அறியப்படுகிறது.

பொ.ஊ. 1187 இல் இலங்கை அரியனையை கலிங்கத்திலிருந்து சென்ற நிசங்க மல்லன் கைப்பற்றினார். இவர் கலிங்கத்தின் தலைநகரான சிங்கபுரத்தில் (தற்போதய ஆந்திராவின் உள்ள ஸ்ரீகாகுளம்) 1157 ல் பிறந்தவராக இருக்கலாம்.[49] 1215 ஆம் ஆண்டில், கலிங்கத்திலிருந்து இலங்கைக்கு படைகளுடன் சென்ற, கலிங்க மாகன் 21 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததார்.[50]

12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கலிங்க நாட்டை முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய தளபதி கருணாகரத் தொண்டைமான் மூலம் படையெடுத்து கைப்பற்றியதை. ஒட்டக்கூத்தர் தன் கலிங்கத்துப் பரணி இலக்கிய நூலில் புகழ்ந்து எழுதி உள்ளார்.[51]

தபாக்-இ.நசிரி என்ற நூலில் உள்ள குறிப்பில் 1243 இல் கலிங்கத்தின் ஜெய்நகர் ஆட்சியாளருக்கு வங்காள ஆட்சியாளரால் துன்பம் ஏற்பட்டது. தில்லி சுல்தானகத்தின் கீழ் அதன் வாங்காள ஆளுநராக இருந்த டுக்ரல் டுகான் கான் என்பவர் கலிங்கத்தின் ஜெய்நகரின்மீது 1244 மார்ச்சில் படையெடுத்தார். இந்தப் படைகளை ஒரு மாதத்திற்குப் பிறகு கலிங்கப்படைகள் கத்தசின் கோட்டையின் முன்பு எதிர்கொண்டன போரில் இழப்புகளை அடைந்த கலிங்கப்படைகள் கோட்டைக்குள் பின்வாங்கின. பின்னர் கானின் படைகள் மதிய உணவு உண்டு கொண்டிருந்த நேரத்தில் கலிங்கப்படைகள் அதிரடியாக கானின் படைகளை சூழ்ந்து தாக்கின. இதனால் நிலை குளைந்த கானின் படைகள் பின்வாங்கிச் சென்றன.[17]

மத்தியகால ஒடிசா தொகு

கஜபதி பேரரசு தொகு

கஜபதி பேரரசு என்பது 1435 இல் கபிலேந்திர தேவனால் நிறுவப்பட்டது.[28] இது கீழைக் கங்க கடைசி மன்னனான நான்காம் பானுதேவனின் வீழ்ச்சிக்குப் பின்னர் நிறுவப்பட்டது. இந்த மரபு சூர்யவம்சி மரபு என்ற பெயராலும் அறியப்படுகிறது. 1450 இல் கபிலேந்திர தேவன் தன் மூத்தமகன் ஹமிராவை இராஜமுந்திரி மற்றும் கொண்டவீடு ஆகிபகுதிகளுக்கு ஆளுநராக நியமித்தார்.[52][53] கபிலேந்திர தேவன் தனது பேரரசை வடக்கில் கங்கை முதல் தெற்கில் பீதர் வரை 1457 இல் விரிவாக்கினார்.[54]

கபிலேந்திர தேவனின் ஆட்சியின்போது, சரளா தாசா என்னும் ஒடியா கவிஞர், ஒடியா மொழியில் மகாபாரதம் மற்றும் அவரது மற்ற படைப்புகளை எழுதினார்.[55]

1467 இல் கபிலந்திர தேவன் இறந்த போது, அவரது மகன்களுக்கு இடையில் அரியனையைக் கைப்பற்ற உள்நாட்டு போர் ஏற்பட்டது. இறுதியில், புருசோத்தம தேவின் ஹம்வீரனை தோற்கடித்து 1484 இல் அரியனையக் கைப்பற்றினார்.[53] ஆனால், இந்த குழப்ப காலத்தில் பேரரசின் குறிப்பிடத்தக்க தெற்கு பகுதிகளை விசயநகரப் பேரரசின் ம்ன்னான சாளுவ நரசிம்மனிடம் இழந்தனர். அவர் இறந்த நேரத்தில், இழந்த சில பிரதேசங்களை மீட்டார்.

இவர் தனது மகனான, பிரதாபருத்ர தேவனுக்கு 1497 ஆம் ஆண்டு முடிசூட்டினார். பதவிக்கு வந்த உடனே, அவர் வங்காள அலாவுதீன் ஹுசைன் ஷாவின் சேனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 1508 இல் அலாவுதீன் ஹுசைன் ஷா மீண்டும் படையெடுத்து வந்தார், இந்த நேரத்தில் முஸ்லீம் இராணுவம் பூரி வரை அணிவகுத்துச் சென்று தாக்கியது. 1512 ஆம் ஆண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் கலிங்கத்தின் மீது படையெடுத்து கஜபதி பேரரசின் படைகளைத் தோற்கடித்தார். [69] 1522 ஆம் ஆண்டு, கோல்கொண்டாவின் குலி குதுப் ஷாவின் படைகளை கிருஷ்ணா கோதாவரி பகுதியிலிருந்து ஒடியா படைகள் அகற்றியது.[54]

கஜபதி பேரரசின் அரசராக பிரதாபருத்ராவைத் தேவன் இருந்தபோது அவரது அமைச்சராக இருந்த கோவிந்த வித்யாதரர் இருந்தார்.[53] இந்நிலையில், பிரதாபருத்ரத் தேவனுக்கு எதிராக கலகம் செய்த அமைச்சர் கோவிந்த வித்யாதரர் பிரதாபருத்ராவைத் தேவனையும் அவரது இரு மகன்களை கொலை செய்த பின்னர், 1541 இல் தானே அரியணை ஏறினார்.[54]

போய் அரசு தொகு

போய் வம்சமானது [56] 1541 இல், ஒரு இரத்தக்களரியான ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் அரியணைக்கு வந்த கோவிந்தா வித்யாதரனால் நிறுவப்பட்டது.[54] இந்த மரபினரின் ஆட்சி குறுகிய காலமே நீடித்தது மேலும் இவர்கள் காலத்தில் ராஜ்யத்தின் அண்டை அரசர்கள் மோதலுக்கு வந்ததனர், அதுமட்டுமல்லாது உள்நாட்டுப் போர்களால் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டது. முதலில், கோவிந்த வித்யாதரனின் மருமகனான இரகுபஞ்ச்சோத்ராய் கலகம் செய்தார். கோவிந்த வித்யாதரன் செல்வாக்கற்ற ஆட்சியாளராக இருந்தார் இவரது மகனான சக்ரபிரதாபன் அரியனையைக் கைப்பற்றினார். இவர் 1557 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், முகுந்தா தேவா என்ற ஒரு அமைச்சர் கலகம் செய்தார். இவர் போய் மரபின் இரு அரசர்களைக் கொன்று, இரகுபஞ்ச்சோத்ராயின் கலகத்தை ஒடுக்கி தன்னை ஒடிசாவின் அரசராக அறிவித்துக் கொண்டார்.[54]

முகுந்த தேவன் தொகு

முகுந்த தேவன் ( முகுந்த அரிச்சந்திரன் எனவும் அழைக்கப்படும்) [56] 1559 இல், ஒரு இரத்தக்களரியான ஆட்சி கவிழ்ப்பு செயலைச் செய்து ஆட்சிக்கு வந்தவராவார். மதள பஞ்சி கோவிலின் கல்வெட்டுகள் முகுந்த தேவனை ஒரு சாளுக்கியர் என்று கூறுகிறது.[56] இந்த காலகட்டத்தில், ஒடிசாவில் பல உள் முரண்பாடுகள் ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் முகுந்த தேவன் அக்பருடன் கூட்டணி அமைத்தார், இதனால் வங்காள ஆட்சியாளரான சுலைமான் கான் கரானியின் பகையை சம்பாதிக்கிறார். சுலைமான் 1567 ஆம் ஆண்டில், ஒடிசாவைக் கைப்பற்றும் நோக்குடன் அவரது மகனான பையாசுடு கான் கரானி மற்றும் அவரது மோசமான தளபதியான களாபகாத் ஆகியோர் தலைமையில் படைகளை அனுப்பினார்.

முகுந்த தேவன் வடக்கில் படைகளுடன் எதிர்கொண்டார், சுல்தானின் மகனுடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிறகு கிளர்ச்சியை நிறுத்திவிட்டு விலக்கிக் கொண்டார்.[56] பின்னர் முகுந்தா ராமச்சந்திர பஞ்சா தலைமையிலான எதிர்ப்புப் படைகளால் முகுந்த தேவன் போரில் கொல்லப்பட்டார். கலகம் செய்த இந்த ராமச்சந்திர பஞ்சா முகுந்த தேவனின் கீழ் இருந்த ஒரு சிற்றரசனாவார். பின்னர் இவர் மோதலில் சிக்கியதால் பயாசுடு கானால் கொலை செய்யப்பட்டார்.[57] அக்பர் சித்தூர் படையெடுப்பு தயாராகிக் கொண்டு இருந்ததார், அதனால் அவரால் இவ்விசயத்தில் எதிர் செயல் செய்ய முடியவில்லை. தளபதி களாபகத் நாடு முழுவதும் கொள்ளை வெறியாட்டத்துடன் சுற்றி பல கோவில்களை அழித்தார்.[56] 1568 ஆம் ஆண்டின் இறுதியில், ஒடிசா சுலைமான் கான்கரானியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இந்தக் காலகட்டத்தில், முகுந்த தேவனினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு தளபதியின் மகனான முதலாம் இராமச்சந்திர தேவன் சிறையில் இருந்து விசாகப்பட்டனத்துக்கு தப்பியோடினர்.[55]

1568 தொகு

1568 என்பது ஒடிசா வரலாற்றில் முதன்மையான ஆண்டாக கருதப்படுகிறது. முகுந்த தேவன் ஒடிசாவின் கடைசி தன்னாட்சியுடைய அரசராக கருதப்படுகிறார். 1568 ஆம் ஆண்டுக்குப்பின் இந்த பிராந்தியம் சரிவு கண்டது. ஒடிசா மீண்டும் ஒரு இறைமையுள்ள பேரரசாக இயலாமல் போனது.[56]

பின்னர் 1920 இல் ஒடிய நாடகாசிரியர் அஸ்வின் குமார் கோஷ் முகுந்த தேவனின் துயர மரணத்தையும் வங்காள சுல்தானின் தளபதி காலபகடின் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டு, கால பகடா என்ற ஒரு நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் ஒடிய இலக்கியத்தில் மிகப் பெரும் துன்பியல் நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[58]

வங்காள (கரானி) ஆட்சியில் தொகு

1568 இல், ஒடிசா வங்காள சுல்தான் ஆட்சியாளர்களான கரானி வம்சத்தின் சுலைமான் கான் கரானியின், கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்றைய பாலசூர் பகுதியில் நடந்தத துகாரோய் போரில், தாவுத் கான் ஒடியப் படைகளை தோற்கடித்தார். இதனால் ஒடிசா மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. போருக்குப் பிறகு, தாவுத் வங்காளம் மற்றும் பீகாரை முழுமையாக கடாகுக்கு விட்டுக்கொடுத்தார். இந்த உடன்படிக்கையின்படி ஒடிசாவை மட்டும் தனக்கு தக்கவைத்துக் கொண்டார். இறுதியில் ஒப்பந்தம் முனிம கான் (வங்காளம் மற்றும் பீகார் ஆளுநர்) 80 வயதில் இறந்த இறந்த பிறகு முடிவுக்கு வந்துது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாவுத் வங்கத்தின் மீது படையெடுத்தார். இது ராஜ்மகால் போருக்கு வழிவகுத்தது, இந்தப் போரில் தாவுத் தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.[59][60]

முகலாயர் ஆட்சியில் தொகு

1590 ஆம் ஆண்டில், குத்தூ கான் லொகானி என்னும் தாவுத்தின் ஒரு அதிகாரி,[61] தன்னை சுதந்திரமான ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டு "குத்தூ ஷா" என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார். பீகாரின் முகலாய ஆளுநராக இருந்த ராஜா மான் சிங், அவருக்கு எதிராக ஒரு பயணம் தொடங்கினார். மான் சிங்கை எதிர்கொள்ளும் முன்னர் குத்தூ ஷா காலமானார். குத்தூ கானின் மகன் நசீர் கான், சிறு எதிர்ப்புக்குப் பிறகு, முகலாய மேலாட்சியை ஏற்று 1590 ஆகத்து 15 அன்று மான் சிங்கிடம் கப்பத்தை செலுத்தினார். பின்னர் நசீர் கான் ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு பூரி பகுதியை விட்டுக் கொடுத்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நசீர் கான் இரண்டு ஆண்டுகள் முகலாயப் பேரரசு விசுவாசமாக இருந்தார் ஆனால், அதன் பிறகு அவர் ஒப்ந்தத்தை மீறி புரி ஜகன்னாதர் கோயிலை முற்றுகையிட்டார். இதனால் மான் சிங் நசீர் கானை தாக்கி இன்றைய மிட்னாபூர் நகரம் அருகில் நடைபெற்ற யுத்தத்தில் 1592 ஏப்ரல் 18 அன்று அவரை தோற்கடித்தார்.[62] இதன் மூலம் 1593 முதல் ஒடிசா முற்றிலும் முகலாயப் பேரரசுக்கு உட்பட்டது மற்றும் வங்காள சுபஹ்வின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

அக்பரின் காலம் தொகு

ஒடிசாவின் குர்தா பகுதி அரசர் ராஜா ராமச்சந்திரா தேவா, அக்பரின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டுடார்.[61] அக்பர் பெரும்பாலும் உள்ளூர் தலைவர்கள் விஷயங்களில் தலையிடாக் கொள்கையை பின்பற்றினார். அக்பர் தனது மகன், ஜஹாங்கிர் ஆகியோர் காலங்களிலும் அதற்கு பின்பும் இந்தக் கொள்கை தொடர்ந்து அவரகளின் கீழ், ஒடிசா ஒரு தனி சுபஹ்வாக சுபாதார் என்ற பெயரிலான கவர்னரின் கீழ், முகலாயப் பேரரசரின் பெயரில் ஆட்சி செய்யப்பட்டது.

ஜகாங்கீரின் காலம் தொகு

குவாசிம் கான் 1606 ஆம் ஆண்டு ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில், குர்தா அரசர், புருசோத்தம தேவா கிஷோ தாஸ் தலைமையிலான மொகலாய படைகளால் தாக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டார், மேலும் அமைதிக்கு பரிசாக வரதட்சணையை சேர்ந்து அவரது சகோதரி மற்றும் மகளை வழங்க வேண்டியிருந்தது.[61] 1611 ஆம் ஆண்டில், தோடர் மால் மகனான கல்யாண் மால், ஒடிசா ஆளுநராக ஆனார். கல்யாண் மாலும் புருசோத்தம தேவாவை தாக்கி தோற்கடிக்கப்பட்டார், அமைதிக்காக இவர் முகலாய மகளிர் குழுவுடன் தனது மகளை அனுப்ப வேண்டியானது.[61] In 1617, Kalyan was recalled to the court. 1617 ம் ஆண்டு, கல்யாண் அரசவைக்கு அழைக்கப்பட்டார். 1617 ம் ஆண்டு, முகராம் கான் ஒடிசா ஆளுனராக ஆனார். அவரும் புருசோத்தம தேவாவைத் தாக்க முயன்றார். ஆனால், புருசோத்தம தேவா குர்தாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். 1621 இல், அகமது பெக் ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டார். புருசோத்தம தேவா 1622 தப்போயோடிய நிலையில் இறந்தார். அதன்பிறகு அவரது மகன் நரசிம்ம தேவா முடிசூடிக்கொண்டார். இளவரசர் சாஜகான் 1623 இல் ஒடிசாவின் மதல பஞ்சிக்கு வந்தார். அதற்கு முன் கலகம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.[63] அகமது பெக் 1628 வரை ஆளுநராக இருந்தார்.

சாஜகானின் காலம் தொகு

1628 ஆம் ஆண்டில், சாஜகான் முகலாயப் பேரரசர் ஆனார் மற்றும் முஹம்மது பக்கியர் கான் ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கோல்கொண்டா பேரரசுக்குள் தனது செல்வாக்கை நீட்டித்தார். சாஜகான் ஷா ஷுஜாவை வங்காள ஆளுநராக நியமித்தார் இவர் ஆளுநராக 1639 முதல் 1660 வரை இருந்தார். 1647 ஆம் ஆண்டில், நரசிம்ம தேவா ஃபதே கான் என்ற ஒரு முகலாய தளபதியால் தலை துண்டிக்கப்பட்டு மரணமடைந்தார்.[61]

அவுரங்கசீப் காலம் தொகு

1658 ஆம் ஆண்டில், ஷாஜகான் உடல் நிலை மோசமானதை அடுத்து சாஜகானின் மகன்களில் ஒருவரான தாரா சிக்கோ அரச பிரதிநிதி பதவிக்குயை கைப்பற்றினார். இது அவுரங்கசீப்புக்கும் அவரின் உடன்பிறந்தவர்களுக்கும் இடையில் போருக்கு வழிவகுத்தது. இறுதியில் 1659 இல் அவுரங்கசீப் வெற்றி பெற்றார். பின்னர் அவர் தன் தந்தையான சாஜகானை சிறையில் வைத்திருக்க அவர் 1666 ஆம் ஆண்டு சிறையிலேயே மரணமடைந்தார். இக்காலகட்டத்தில் முகலாயப் பேரரசு உறுதியற்ற தன்மையை கொண்டிருந்ததால், ஒடிசாவில் உள்ள பல குறுநில தலைவர்கள் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். அவுரங்கசீப் ஆட்சியில் கான்-இ-துரன் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இவர் 1660 இருந்து 1667 வரை இருந்தார். இந்த காலகட்டத்தில், இவர் முதலாம் முகுந்த தேவா மற்றும் குர்தா அரசர் போன்ற பல கிளர்ச்சித் தலைவர்களை அடங்கி நசுக்கினார்.[61]

முர்ஷித் குலி கான் காலம் தொகு

1707 இல், அவுரங்கசீப் இறந்தார் அதன்பிறகு ஒடிசா மீது முகலாயர்களின் கட்டுப்பாடு பலவீனமடைய ஆரம்பித்தது. முர்ஷித் குலி கான் 1714 இல் ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின் 1717 இல் அவர் வங்காள நவாப் ஆனார். அவர் முகலாயப் பேரரசர்ருக்கு விசுவாசமாக இருப்பதற்கு உறுதி எடுத்தவர் ஆனால் அவர் ஒரு சுயாட்சி கொண்ட மன்னராக இருந்தார். அவர் வருவாயை அதிகரிக்க பல புதிய ஜாகிர்களை உருவாக்க பல நடவடிக்கைகளை எடுத்ததார். 1727 ஆம் ஆண்டில், அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மருமகன், சுஜா-உத்-தின் வங்காள நவாபாக ஆனார். அதற்கு முன் அவர் ஒடிசாவின் துணை முர்ஷிதாக இருந்ததார். அவரது காலத்தில், அருகிலுள்ள பல அரசாட்சிகள் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை இழந்தனர்.[61]

மராத்தியர் காலம் தொகு

சுவர்ணரேகா ஆறு வங்காளம் மற்றும் மராத்திய கட்டுப்பாட்டில் இருந்த ஒடிசாவுக்கு இடைப்பட்ட பகுதியில் எல்லையாக பாய்ந்தது.[64] மராட்டியர்களால் புரி யாத்ரை செல்பவர்களிடம் வரி சேகரித்தனர், பிச்சைக் காரர்களுக்கு விலக்கு அளிதனர்.[63] 1803 ஆம் ஆண்டு, பிரித்தானியர் இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரின் முடிவில் வெற்றிபெற்றனர். இதனால் மராட்டியர் வசமிருந்த ஒடிசா உள்ளிட்டப் பகுதிகளும் ஆங்கிலேயரின் கீழ்வந்தது.[64]

பிரித்தானிய இந்தியா காலம் தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஒடிசா பகுதிகள் 1912-ஆம் ஆண்டு முதல் 1936வது ஆண்டு வரை பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்துடன் இணக்க்கப்பட்டது. பின்னர் 1936-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது.

விடுதலையான இந்தியாவின் தொகு

மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Devendrakumar Rajaram Patil (1946). Cultural History from the Vāyu Purāna. Motilal Banarsidass Pub.. பக். 46. https://books.google.com/books?id=Jmnm-smZm6oC&lpg=PA46&dq=bali%20sudesna&pg=PA46#v=onepage&q=bali%20sudesna&f=false. 
  2. J.P. Mitta (2006). History of Ancient India: From 7300 BC to 4250 BC. Atlantic Publishers & Dist.. https://books.google.com/books?id=b7gOBW8oDFgC&lpg=PA293&dq=Dirghatamas%20Kalinga%20Vanga&pg=PA293#v=onepage&q=Dirghatamas%20Kalinga%20Vanga&f=false. பார்த்த நாள்: 28 October 2012. 
  3. V. R. Ramachandra Dikshitar (1999). War in Ancient India. Genesis Publishing Pvt Ltd. பக். 53. https://books.google.com/books?id=YlWHFXbU2rsC&lpg=PA53&dq=Bali%20Kalinga%20Vanga%20mahabharata&pg=PA53#v=onepage&q=Bali%20Kalinga%20Vanga%20mahabharata&f=false. 
  4. Gaṅgā Rām Garg (1992). Encyclopaedia of the Hindu World, Volume 1. Concept Publishing Company. https://books.google.com/books?id=w9pmo51lRnYC&lpg=PA18&dq=Bali%20Kalinga%20Vanga&pg=PA18#v=onepage&q=Bali%20Kalinga%20Vanga&f=false. பார்த்த நாள்: 28 October 2012. 
  5. Josiah Conder (1828). The modern traveller: a popular description, geographical, historical, and topographical of the various countries of the globe, Volume 1. James Duncan. பக். 140, 158. https://books.google.com/books?id=7-7NE6b7uzoC&lpg=PA140&ots=zDaGQjumHt&dq=The%20modern%20traveller%3A%20a%20popular%20description%2C%20geographical%2C%20historical%2C%20and%20topographical%20of%20the%20various%20countries%20of%20the%20calinga&pg=PA140#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 29 October 2012. 
  6. Mahabharata Book Seven (Volume 1): Drona, Volume 1; Volume 7. NYU Press. 2007. பக். 58. https://books.google.com/books?id=RIRZz_coCSgC&lpg=PA57&dq=karna%20utkala&pg=PA59#v=onepage&q=karna%20utkala&f=false. பார்த்த நாள்: 28 October 2012. 
  7. Subodh Kapoor, தொகுப்பாசிரியர் (2002). The Indian Encyclopaedia, Volume 1. Genesis Publishing Pvt Ltd. பக். 7311. https://books.google.com/books?id=3Bt6WTrErH0C&lpg=PA7311&dq=utkala%20mahabharata&pg=PA7311#v=onepage&q=utkala%20mahabharata&f=false. பார்த்த நாள்: 28 October 2012. 
  8. Narayan Miśra (2007). Annals and Antiquities of the Temple of Jagannātha. Sarup & Sons. பக். 20. https://books.google.com/books?id=WKUkLzqNv64C&lpg=PA20&dq=kala%20utkala&pg=PA20#v=onepage&q=kala%20utkala&f=false. பார்த்த நாள்: 28 October 2012. 
  9. 9.0 9.1 R. C. Majumdar, A. S. Altekar (1986). Vakataka – Gupta Age Circa 200-550 A.D.. Motilal Banarsidass Publ.. பக். 146. https://books.google.com/books?id=OswUZtL1_CUC&lpg=PA146&dq=Kantara%20orissa&pg=PA146#v=onepage&q=Kantara%20orissa&f=false. 
  10. Pranab Kumar Bhattacharyya. Historical Geography of Madhya Pradesh from Early Records. Motilal Banarsidass Pub.. பக். 139 ,278. https://books.google.com/books?id=njYpsvmr2dsC&lpg=PA278&dq=Kantara%20mahabharata&pg=PA278#v=onepage&q=Kantara%20mahabharata&f=false. பார்த்த நாள்: 29 October 2012. 
  11. D.C. Sircar (1990). Studies In The Geography Of Ancient And Medieval India. Motilal Banarsidass Publ. பக். 167, 175. https://books.google.com/books?id=AqKw1Mn8WcwC&lpg=PA176&dq=udra%20orissa&pg=PA175#v=onepage&q=udra%20orissa&f=false. பார்த்த நாள்: 29 October 2012. 
  12. Prasad, தொகுப்பாசிரியர் (2008). Environment, Development and Society in Contemporary India:An Introduction. Macmillan. பக். 134. https://books.google.com/books?id=Xt9KHerkrkAC&lpg=PA134&dq=kamala%20mandala&pg=PA134#v=onepage&q=kamala%20mandala&f=false. பார்த்த நாள்: 29 October 2012. 
  13. Snigdha Tripathy (1998). Inscriptions of Orissa: Circa 5th-8th centuries A.D, Volume 1. f Motilal Banarsidass Publ.. பக். 31. https://books.google.com/books?id=XUiYu3XByNgC&lpg=PA31&dq=Kongoda&pg=PA31#v=onepage&q=Kongoda&f=false. பார்த்த நாள்: 29 October 2012. 
  14. Ajay Mitra Shastri (1995). Inscriptions of the Śarabhapurīyas, Pāṇḍuvaṁśins, and Somavaṁśins: Introduction. Motilal Banarsidass Publ.. பக். 169, 179. https://books.google.com/books?id=Idd9i5nP160C&pg=PA179&dq=trikalinga+kalinga+kosala&hl=en&sa=X&ei=ojaOUOmeJIyeiAeilYHYAw&redir_esc=y#v=onepage&q=trikalinga%20kalinga%20kosala&f=false. பார்த்த நாள்: 29 October 2012. 
  15. Brajadulal Chattopadhyaya (2009). A Social History of Early India. Pearson Education India. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1958-9. https://books.google.com/books?id=0tX4wzIUY3QC&pg=PA151. பார்த்த நாள்: 3 February 2015. 
  16. Dineschandra Sircar. Studies in the religious life of ancient and medieval India. Motilal Banarsidass Publ.. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-2790-5. https://books.google.com/books?id=mh1y1eMgGBMC&pg=PA70. பார்த்த நாள்: 3 February 2015. 
  17. 17.0 17.1 Royal Asiatic Society of Great Britain and Ireland (1834). Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland. Cambridge University Press for the Royal Asiatic Society. பக். 106. https://books.google.com/books?id=3MIsAAAAIAAJ&pg=PA106. பார்த்த நாள்: 3 February 2015. 
  18. Thomas E. Donaldson (2001). Iconography of the Buddhist Sculpture of Orissa: Text. Abhinav Publications. பக். 11–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-406-6. https://books.google.com/books?id=DbxE8zOuRbUC&pg=PA11. 
  19. Subodh Kapoor, தொகுப்பாசிரியர் (2004). An Introduction to Epic Philosophy: Epic Period, History, Literature, Pantheon, Philosophy, Traditions, and Mythology, Volume 3. Genesis Publishing. பக். 784. https://books.google.com/books?id=uwHj-Z-dMcsC&lpg=PA784&dq=Srutayudha&pg=PA784#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 10 November 2012. "Finally Srutayudha, a valiant hero, was son Varuna and of the river Parnasa." 
  20. "Dance bow (1965.3.5)". Pitt Rivers Museum.
  21. Rabindra Nath Pati (1 January 2008). Family Planning. APH Publishing. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-313-0352-8. https://books.google.com/books?id=_5seKkk3GkIC&pg=PA97. பார்த்த நாள்: 2 February 2015. 
  22. Raychaudhuri, Hemchandra (2006). Political History Of Ancient India. Genesis Publishing. பக். 75. https://books.google.com/books?id=h1KObc_qaXYC&lpg=PA75&dq=Mahagovinda%20Suttanta%20kalinga&pg=PA75#v=onepage&q=Mahagovinda%20Suttanta%20kalinga&f=false. பார்த்த நாள்: 25 October 2012. 
  23. Suhas Chatterjee (1 January 1998). Indian Civilization And Culture. M.D. Publications Pvt. Ltd.. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7533-083-2. https://books.google.com/books?id=KItocaxbibUC&pg=PA68. பார்த்த நாள்: 11 February 2013. 
  24. K. Krishna Reddy. Indian History. Tata McGraw-Hill Education. பக். A-149, C-39. https://books.google.com/books?id=X4j7Nf_MU24C&lpg=SL1-PA149&dq=Mahapadma%20nanda%20kalinga&pg=SL1-PA149#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 12 November 2012. 
  25. 25.0 25.1 "Hathigumpha Inscription of Kharavela of Kalinga". Epigraphia Indica XX: 86–89. 1933. http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf. பார்த்த நாள்: 12 November 2012. 
  26. Prabhas Kumar Singh. "Asurgarh – An Early Urban Centre Of Orissa". Orissa Historical Research Journal 3 (XLVII). http://orissa.gov.in/e-magazine/Journal/journalvol3/pdf/49-54.pdf. பார்த்த நாள்: 12 November 2012. 
  27. 27.0 27.1 Hermann Kulke; Dietmar Rothermund (2004). A History of India. Routledge. பக். 66. https://books.google.com/books?id=TPVq3ykHyH4C&lpg=PA66&dq=ashoka%20261%20BC%20history&pg=PA66#v=onepage&q=ashoka%20261%20BC%20history&f=false. பார்த்த நாள்: 12 November 2012. 
  28. 28.0 28.1 Nihar Ranjan Patnaik (1997). Economic History of Orissa. Indus Publishing. பக். 71–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-075-0. https://books.google.com/books?id=1AA9W9_4Z9gC&pg=PA71. பார்த்த நாள்: 1 December 2012. 
  29. Ravi Kalia (1994). Bhubaneswar: From a Temple Town to a Capital City. SIU Press. பக். 17, 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8093-1876-6. https://books.google.com/books?id=F2YSPiKbmHkC&pg=PA17. பார்த்த நாள்: 1 December 2012. 
  30. Anuradha Seneviratna; Benjamin Polk (1 January 1992). Buddhist Monastic Architecture in Sri Lanka: The Woodland Shrines. Abhinav Publications. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-281-9. https://books.google.com/books?id=zdKhuDerQsgC&pg=PA49. பார்த்த நாள்: 3 February 2015. 
  31. Harvey Rachlin (1 January 2000). Jumbo's Hide, Elvis's Ride, and the Tooth of Buddha: More Marvelous Tales of Historical Artifacts. Garrett County Press. பக். 1201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-939430-09-0. https://books.google.com/books?id=sawOqp33f-MC&pg=PA1201. பார்த்த நாள்: 3 February 2015. 
  32. Prabhat Mukherjee (1981). The History of Medieval Vaishnavism in Orissa. Asian Educational Services. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0229-8. https://books.google.com/books?id=7LFzfbhmJcMC&pg=PA16. பார்த்த நாள்: 3 February 2015. 
  33. A. K. Warder R.C. Majumdar (1977). Ancient India. Motilal Banarsidass Publ.. பக். 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0436-4. https://books.google.com/books?id=XNxiN5tzKOgC&pg=PA389. பார்த்த நாள்: 18 November 2012. 
  34. Majumdar R. C. (1996). Outline of the History of Kaliṅga. Asian Educational Services. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1194-8. https://books.google.com/books?id=LNCcpkqesJ0C&pg=PA7. பார்த்த நாள்: 18 November 2012. 
  35. 35.0 35.1 Ajay Mitra Shastri (1995). Inscriptions of the Sarabhapuriyas Panduvamsins and Somavamsins. Motilal Banarsidass Publ.. பக். 96, 108, 112. https://books.google.com/books?id=7cyQ8BxzR4kC&dq=Inscriptions+of+the+Sarabhapuriyas+Panduvamsins+and+Somavamsins&source=gbs_navlinks_s. 
  36. D. C. Sircar (1 January 1996). Indian Epigraphy. Motilal Banarsidass Publ.. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1166-9. https://books.google.com/books?id=hXMB3649biQC&pg=PA290. பார்த்த நாள்: 18 November 2012. 
  37. Vasudev Vishnu Mirashi (1 January 1975). Literary And Historical Studies In Indology. Motilal Banarsidass Publ.. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0417-3. https://books.google.com/books?id=X0JUwf2BXVAC&pg=PA138. பார்த்த நாள்: 29 November 2012. 
  38. M. Krishna Kumari (1 January 1990). Social And Cultural Life In Medieval Andhra. Discovery Publishing House. பக். 17–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7141-102-3. https://books.google.com/books?id=B5SaAGpGNbAC&pg=PA17. பார்த்த நாள்: 30 November 2012. 
  39. Sally Hovey Wriggins (2004). The Silk Road Journey with Xuanzang. Westview Press. பக். 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8133-6599-2. https://books.google.com/books?id=fz2rB4lK1DMC&pg=PA141. பார்த்த நாள்: 3 February 2015. 
  40. Charles Allen (writer) (21 February 2012). Ashoka: The Search for India's Lost Emperor. Little, Brown Book Group. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4087-0388-5. https://books.google.com/books?id=K4vHjbUtf_4C&pg=PT158. பார்த்த நாள்: 3 February 2015. 
  41. Lars Fogelin (9 February 2006). Archaeology of Early Buddhism. AltaMira Press. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7591-1444-9. https://books.google.com/books?id=3WAnAAAAQBAJ&pg=PA31. பார்த்த நாள்: 3 February 2015. 
  42. A Brief History of India by Alain Daniélou p.177
  43. The Dancing Girl: A History of Early India by Balaji Sadasivan p.133
  44. Social and Cultural Life in Medieval Andhra by M. Krishna Kumari: p.18
  45. Ancient India by Ramesh Chandra Majumdar p.390
  46. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.482
  47. Rabindra Nath Chakraborty (1985). National Integration in Historical Perspective: A Cultural Regeneration in Eastern India. Mittal Publications. பக். 17–. GGKEY:CNFHULBK119. https://books.google.com/books?id=PItbvfAvVggC&pg=PA17. பார்த்த நாள்: 30 November 2012. 
  48. "Jagannath Temple Architecture". Shree Jagannath Temple Administration, Puri. பார்க்கப்பட்ட நாள் 29 November 2012.
  49. H. W. Codrington (1 January 1994). Short History of Ceylon. Asian Educational Services. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0946-4. https://books.google.com/books?id=tqpdlaPiOyEC&pg=PA65. பார்த்த நாள்: 3 February 2015. 
  50. G.C. Mendis (1 December 1996). The Early History of Ceylon and Its Relations with India and Other Foreign Countries. Asian Educational Services. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0209-0. https://books.google.com/books?id=PVrUcdi4ZikC&pg=PA58. பார்த்த நாள்: 3 February 2015. 
  51. A History of Indian Literature, 500-1399: From Courtly to the Popular by Sisir Kumar Das p.209
  52. Hermann Kulke; Dietmar Rothermund (2004). A History of India. Taylor & Francis Group. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-32919-4. https://books.google.com/books?id=TPVq3ykHyH4C&pg=PA189. பார்த்த நாள்: 2 December 2012. 
  53. 53.0 53.1 53.2 Dipti Ray (1 January 2007). Prataparudradeva, the Last Great Suryavamsi King of Orissa: (A.D. 1497 to A.D. 1540). Northern Book Centre. பக். 18–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7211-195-3. https://books.google.com/books?id=to_U9I6Ol9wC&pg=PA18. பார்த்த நாள்: 2 December 2012. 
  54. 54.0 54.1 54.2 54.3 54.4 L.S.S. O'malley (1 January 2007). Bengal District Gazetteer : Puri. Concept Publishing Company. பக். 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7268-138-8. https://books.google.com/books?id=pwD0-YV2LCYC&pg=PA30. பார்த்த நாள்: 2 December 2012. 
  55. 55.0 55.1 O. M. Starza (1993). The Jagannatha Temple at Puri: Its Architecture, Art, and Cult. BRILL. பக். 146–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-09673-8. https://books.google.com/books?id=v4bV3beb0n8C&pg=PA146. பார்த்த நாள்: 2 December 2012. 
  56. 56.0 56.1 56.2 56.3 56.4 56.5 Durga Prasad Patnaik (1 January 1989). Plam-Leaf Etchings Of Orissa. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-248-2. https://books.google.com/books?id=90_qAeMT1bwC. பார்த்த நாள்: 2 December 2012. 
  57. Orissa General Knowledge. Bright Publications. பக். 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7199-574-5. https://books.google.com/books?id=hMCbjkhA_ncC&pg=PA27. பார்த்த நாள்: 2 December 2012. 
  58. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature: devraj to jyoti. Sahitya Akademi. பக். 1092. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1194-0. https://books.google.com/books?id=zB4n3MVozbUC&pg=PA1092. பார்த்த நாள்: 2 December 2012. 
  59. Rabindra Nath Chakraborty (1985). National Integration in Historical Perspective: A Cultural Regeneration in Eastern India. Mittal Publications. பக். 22. GGKEY:CNFHULBK119. https://books.google.com/books?id=PItbvfAvVggC&pg=PA22. பார்த்த நாள்: 10 February 2013. 
  60. Mountstuart Elphinstone, Edward Byles Cowell (1866). The History of India: The Hindú and Mahometan Periods (Public Domain). Murray. https://books.google.com/books/about/The_History_of_India.html?id=1VgOAAAAQAAJ&redir_esc=y. 
  61. 61.0 61.1 61.2 61.3 61.4 61.5 61.6 Mohammed Yamin (1 July 2009). Impact of Islam on Orissan Culture. Readworthy. பக். 34–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89973-96-4. https://books.google.com/books?id=AN5KebBJxzcC&pg=PA34. பார்த்த நாள்: 10 February 2013. 
  62. The Cambridge History of India. CUP Archive. பக். 660. GGKEY:96PECZLGTT6. https://books.google.com/books?id=yoI8AAAAIAAJ&pg=PA660. பார்த்த நாள்: 10 February 2013. 
  63. 63.0 63.1 Narayan Miśra (1 January 2007). Annals and Antiquities of the Temple of Jagannātha. Sarup & Sons. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-747-3. https://books.google.com/books?id=WKUkLzqNv64C&pg=PA156. பார்த்த நாள்: 10 February 2013. 
  64. 64.0 64.1 Bandita Devi (1 January 1992). Some Aspects Of British Administration In Orissa (1912–1936). Academic Foundation. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7188-072-0. https://books.google.com/books?id=lBQQHizn788C&pg=PA14. பார்த்த நாள்: 10 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா_வரலாறு&oldid=3786632" இலிருந்து மீள்விக்கப்பட்டது