ஒரியென்டல் மின்டோரோ

ஒரியென்டல் மின்டோரோ (Oriental_Mindoro) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மம்புராவோ ஆகும். இது 1955 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 426 கிராமங்களும், 14 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அல்பொன்சோ உமலி, ஜேர். (Alfonso Umali, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,238.38 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ஒரியென்டல் மின்டோரோ மாகாணத்தின் சனத்தொகை 844,059 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 28ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 32ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 200 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 47ஆம் மாகாணம் ஆகும்.

ஒரியென்டல் மின்டோரோ
மாகாணம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மிமரோபா
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்தொகு

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 11 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |https://www.webcitation.org/6DpMOBTiK?url= ignored (உதவி)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. 2017-01-08 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரியென்டல்_மின்டோரோ&oldid=3546976" இருந்து மீள்விக்கப்பட்டது