ஒருதுணை மணம்
ஒருதுணை மணம் (Monogamy) என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் மண உறவில் இணைந்து வாழ்வதைக் குறிக்கின்றது. சில சமுதாயங்களில், ஒருவர் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும், ஒருவரை மட்டுமே கணவனாகவோ அல்லது மனைவியாகவோ கொண்டு வாழும் ஒருதுணை மணமுறை உள்ளது. வேறு சில சமுதாயங்களில், எந்தவொரு காலகட்டத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டு வாழும் முறை உள்ளதாயினும், காலத்துக்குக் காலம் துணைவர்களை மாற்றிக்கொண்டு வாழ்வதையும் காணலாம். இது, கணவனோ, மனைவியோ இறந்து போவதனாலும், விவாகரத்தினாலும் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மணத் தொடர்புகளை ஒரு துணைவருடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளும், இத்தகைய மணமுறை தொடர் ஒருதுணை மணம் என அழைக்கப்படுகின்றது.[1][2][3]
தற்காலத்தில் பெரும்பாலான நவீன சமுதாயங்களில் ஒருதுணை மணமுறையே பின்பற்றப்பட்டு வந்தாலும், மனித வரலாற்றில், மிகப் பெரும்பாலான சமுதாயங்களில், பலதுணை மண முறையே பின்பற்றப்பட்டு வந்ததைக் காணமுடியும்.
ஒரு காலத்தில் மனித இனத்தின் கூர்ப்பில் (பரிணாமம்) உயர்ந்தநிலை ஒருதுணை மண முறையே எனக்கருதப்பட்டு வந்த போதிலும், தற்காலத்தில் மானிடவியலாளர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. நவீன சமுதாயங்களில் இது விரும்பிப் பின்பற்றப்படும் ஒரு முறை என்ற அளவிலேயே இதில் சிறப்புக் காணமுடியும். இந்து சமயம், கத்தோலிக்க சமயம் முதலான பல சமயங்கள் பலதுணை மணத்தைப் பொதுவாக ஏற்பதில்லை. இதுவும் ஒருதுணை மணமுறை பரவி வருவதற்கான காரணங்களில் ஒன்றாகும். பல சமுதாயங்களில் பலதுணை மணத்துக்குத் தேவையை ஏற்படுத்துகின்ற பொருளாதாரக் காரணங்கள், நவீன சமுதாயங்களில் ஒருதுணை மணமுறைக்கே சாதகமாக உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Cf. "Monogamy" in Britannica World Language Dictionary, R.C. Preble (ed.), Oxford-London 1962, p. 1275:1. The practice or principle of marrying only once. opp. to digamy now rare 2. The condition, rule or custom of being married to only one ஆள் at a time (opp. to polygamy or bigamy) 1708. 3. விலங்கியல் The habit of living in pairs, or having only one mate; The same text repeats The Shorter Oxford English Dictionary, W. Little, H.W. Fowler, J. Coulson (ed.), C.T. Onions (rev. & ed.,) Oxford 1969, 3rd edition, vol.1, p.1275; OED Online. March 2010. Oxford University Press. 23 Jun. 2010 Cf. Monogamy பரணிடப்பட்டது 2015-06-23 at the வந்தவழி இயந்திரம் in Merriam-Webster Dictionary
- ↑ Reichard, Ulrich H. (2003). "Monogamy: past and present". In Reichard, Ulrich H.; Boesch, Christophe (eds.). Monogamy: Mating Strategies and Partnerships in Birds, Humans and Other Mammals. Cambridge University Press. pp. 3–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52577-0. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.
- ↑ Low B.S. (2003) Ecological and social complexities in human monogamy பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம். Monogamy: Mating Strategies and Partnerships in Birds, Humans and Other Mammals:161–176.