ஒரு ஓடை நதியாகிறது

1983 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு ஓடை நதியாகிறது என்ற திரைப்படம் ரகுவரன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, ஸ்ரீதரால் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டு 1983 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்[1] புகழ் பெற்ற நடிகர் டி.எஸ். பாலையாவின் மகள் மனோசித்ராவும் நடிகை சுமலதாவும் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு ஓடை நதியாகிறது
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசி.வி.ஶீதர்
கதைசி.வி.ஶீதர்
இசைஇளையராஜா
நடிப்புரகுவரன்
சுமலதா
மனோசித்ரா
பிரதாபசந்திரன்
கலையகம்சித்ராலயா மூவீஸ்
விநியோகம்சித்ராலயா மூவீஸ்
வெளியீடு1983
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ 35 லட்சம்

கதைச்சுருக்கம்தொகு

ரகுவரன் தனது நண்பருடன் வெளியூர் சென்று விருந்து முடிந்து இரவு திரும்பி வருகையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்.அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பெண்ணை கண்டவுடன் மோகித்த ரகுவரன் அவளை கற்பழித்துவிட்டு,அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். ரகுவரன் இச்சம்பவத்தைப் பற்றி தனது நண்பரிடம் பேசுகிறார். அவருடைய நண்பரும் அவளும் இச்சம்பவத்தை மறந்திருப்பாள் எனவும் அந்தப் பெண்ணைத் தேட வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார். ஆனால் குற்ற உணர்ச்சியால் தாக்கப்பட்ட ரகுவரன் அப்பெண்ணை தேடி வருகிறார். ஆனால் அவளை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதற்கிடையில் அப்பெண்(சுமலதா) கர்ப்பமடைகிறாள். இச்சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்லமுடியாத நிலையில் மிகவும் வேதனையுடன் அவளுடைய தந்தையுடன் (பிரதாப்சந்திரன்) அந்த ஊரிலிருந்து வேறு புதிய இடத்திற்கு இடம் மாறுகிறாள். அங்கே அவள் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த தீராத மழைக்கால இரவில் அவள் கண்ட முகத்தை நினைவுபடுத்த முயற்சிக்கிறாள். இதற்கிடையில், அனைவருடைய வற்புறுத்தலின் பேரில் ரகுவரன் மனோசித்ராவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் கூட ரகுவரன் தன்னால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய நினைவாகவே இருக்கிறார்.

இதன் பிறகு சுமலதா, ரகுவரன் மற்றும் மனோசித்ராவிற்கு என்ன நடக்கிறது என்பதும் ரகுவரன் தனது மகனை எவ்வாறு அடையாளம் காண்கிறார் என்பதை படத்தின் முடிவின் மூலம் காணலாம்.

நடிகர்கள்தொகு

ஒலிப்பதிவுதொகு

ஒரு ஓடை நதியாகிறது
சினிமா
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்26:38
இசைத்தட்டு நிறுவனம்Echo

இது எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர், சசிரேகா மற்றும் எஸ்.ராஜேஸ்வரி ஆகியோரால் பாடப்பட்டு இசையமைப்பாளர் இளையராஜாவால் மிகவும் வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டத் திரைப்படமாகும்.[4][5] இதில் இடம் பெற்ற "தென்றல் என்னை முத்தமிட்டது" என்ற பாடல் மலயமாருத ராகத்தில் இசைக்கப்பட்டுள்ளது.[6].அதே போல "கனவு ஒன்று" என்ற பாடல் ரேவதி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[7] மேலும் "தலையைக் குனியும் தாமரையே" என்ற பாடல் ரீதிகவுளா ராகத்தின் அடிப்படையில் இசையமைக்கப்பட்டுள்ளது.[8]

# Track Singers Lyrics
1 "என் தேகம் அமுதம்" எஸ். ஜானகி வைரமுத்து
2 "தலையைக் குனியும் தாமரையே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ராஜேஸ்வரி வைரமுத்து
3 "தென்றல் என்னை முத்தமிட்டது" கிருஷ்ணசந்தர், பி. ௭ஸ். சசிரேகா வைரமுத்து
4 "கனவு ஒன்று " எஸ். ஜானகி வைரமுத்து
5 "ராத்திரி பொழுது" பி. ஜெயச்சந்திரன், எஸ். பி. சைலஜா கங்கை அமரன்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_ஓடை_நதியாகிறது&oldid=3180856" இருந்து மீள்விக்கப்பட்டது