ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி

(ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி (One Laptop Per Child - OLPC) (ஓஎல்பிசி) என்பது எம் ஐ டி மீடியா லேப் என்னும் அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் குழுவால் நிக்கொலசு நெக்ரொபாண்டே என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி
LaptopOLPC a.jpg
உருவாக்கம்சனவரி 2005
வகைஇலாப நோக்கில்லா நிறுவனம்
தலைமையகம்கேம்பிரிட்சு
தலைவர்
நிக்கொலசு நெக்ரொபாண்டே
முக்கிய நபர்கள்
Jim Gettys, Seymour Papert, Alan Kay
வலைத்தளம்www.laptop.org

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், குறைந்த விலையில் (நூறு அமெரிக்க டாலர்) குழந்தைகள் பலரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு மடிக்கணினியை உருவாக்குவதாகும். எக்ஸ்-ஓ (XO) என்னும் லினக்சு இயங்குதளத்துடன் கூடிய ஒரு மடிக்கணி உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி அமைப்பு அமெரிக்காவில் இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு. ஏஎம்டி, ஈபே, கூகுள், நோர்ட்டெல், ரெட் ஹேட், போன்ற பல வணிக நிறுவனங்கள் நிதி ஆதரவை அளிக்கின்றன.

குறிக்கோள்தொகு

இந்தத் திட்டத்தின் குறிக்கோள் உலகம் முழுதும் இருக்கும் குழந்தைகளுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளில் இருப்போருக்கு, புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதும், அவர்களின் கல்வி மற்றும் சோதனை முயற்சிகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் வழி ஏற்படுத்தித் தருவதுமாகும். இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் வண்ணம் ஒரு மடிக்கணி, கல்வி மென்பொருட்கள், போன்றவற்றை வடிவமைப்பதிலும் இவ்வமைப்பு ஈடுபட்டுள்ளது.

ஓஎல்பிசி ஐந்து முக்கிய கொள்கைகளைக் கொண்டுள்ளது. அவை

  1. குழந்தைகளுக்கு உரியது.
  2. இளவயதினர் பாவிக்க முடிவது (ஆறு முதல் பன்னிரண்டு வயது குழந்தைகள்)
  3. பற்றாக்குறையின்றி பரப்ப முடிவது (Saturation?)
  4. தொடர்பு
  5. தளையறு திறமூல மென்பொருட்கள்

நிக்கொலசு நெக்ரொபாண்டே இத்திட்டத்தை மடிக்கணித்திட்டம் அல்ல, ஒரு கல்வித்திட்டம் என்கிறார்.

புகைப்பட தொகுப்புதொகு