ஒரேமைய அமைப்பு
ஒரேமைய அமைப்பு ( Isocentric Mount ) என்பது தொலைக்கதிர் மருத்துவத்திற்கான கிளினாக், லினாக் மற்றும் கோபால்ட் 60 கொண்ட கருவிகளில் உள்ள ஒரு சிறப்பான எந்திரவியல் அமைப்பாகும். இங்கு ஒரே மையம் என்பது எந்திரத்தின் தலை சுழலும் அச்சும் (Axis of rotation of the head), புலத்தேர்வியிலிருந்து வெளிப்படும் கற்றையின் மைய அச்சுக் கோடும், (Axis of rotation of the collimator) நோயாளி இருக்கும் மேசையின் சுழல் அச்சும் (Axis of rotation of the couch) ஆக இந்த மூன்று அச்சுகளும் இணையும் ஒரு புள்ளியாகும். இப்புள்ளி கதிர்மூலம்-அச்சுத் தொலைவில் (SAD) இருக்கிறது. புற்றுத்திசு இப்புள்ளியில் இருக்குமாறு சீராக நோயாளியினை இருக்கச்செய்து, பின் கருவியின் தலைப்பகுதியினையோ புலத்தேர்வியினையோ அல்லது மேசையினையோ திருப்பினாலும் வெளிப்படும் கதிரின் மைய அச்சு புற்றுவழியாகவே செல்லும். இந்த அமைப்பே ஒரே மைய அமைப்பு எனப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mayles, P.; Nahum, A.; Rosenwald, J.C. (2007). Handbook of radiotherapy physics. Boca Raton: Taylor & Francis. p. 692. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420012026.
- ↑ Greene, David; Peter C., Williams (1997). Linear accelerators for radiation therapy (2 ed.). New York: CRC Press. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780750304764.
- ↑ Klein, Eric E.; Hanley, Joseph; Bayouth, John; Fang-Fang Yin; Simon, William; Dresser, Sean; Serago, Christopher; Aguirre, Francisco et al. (17 August 2009). "Task Group 142 report: Quality assurance of medical acceleratorsa)". Medical Physics 36 (9): 4197–4212. doi:10.1118/1.3190392. பப்மெட்:19810494.