ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Olympic Stadium) ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் முதன்மை விளையாட்டரங்கத்திற்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் துவக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும். பெரும்பாலான ஒலிம்பிக் விளையாட்டரங்கங்கள் தங்கள் பெயரில் ஒலிம்பிக் விளையாட்டரங்கம் என்பதைக் கொண்டிருக்கும் எனினும் விதி விலக்குகள் உள்ளன.

ஒலிம்பிக் விளையாட்டரங்கம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தும் பல்துறை அரங்கமாகவும் வரையறுக்கப்படுகின்றது.[1]

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது, தடகள விளையாட்டுப் போட்டிகள் வழமையாக ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் நடத்தப்படுகின்றது. 1900, 2016 கோடை ஒலிம்பிக் போட்டிகளும் 2010, 2018 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களும் இதற்கு விதிவிலக்காக உள்ளன.

துவக்க கால குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சறுக்கணி சறுக்குப் போட்டிகளுக்கு முதன்மை வழங்கப்பட்டது. இவை நடத்தப்படும் அரங்கங்களே ஒலிம்பிக் விளையாட்டரங்கங்களாக அறிவிக்கப்பட்டன. வழமையாக இங்கு துவக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும்.

பல விளையாட்டரங்கங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒலிம்பிக்கை ஒன்றுக்கு மேற்பட்டு நடத்திய நகரங்களில் உள்ளன.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு