ஒலிவாங்கி (ஆங்கிலத்தில் மைக்ரோபோன் என்றும், பேச்சுவழக்கில் இது மைக் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒலியலையை மின்னலையாக மாற்றும் ஒரு மின்னியல் ஆற்றல்மாற்றி அல்லது உணரி ஆகும். இது ஒலியை மின் அலையாக மாற்றுகிறது. 1876ஆம் ஆண்டு, ஈமைல் பெர்லினர் முதன்முதலில் ஒலிவாங்கியைக் கண்டறிந்தார். இது தொலைபேசியில் குரலொலியை மின்னலையாக மாற்றி அனுப்ப பயன்படுத்தப்பட்டது. தொலைபேசிகளிலும், ஒலிபதிப்பான்களிலும், கரோக்கி ஒலிஅமைப்புகளிலும், காதுகேளாதோருக்கான கருவிகளிலும், திரைப்படத் தயாரிப்புகளிலும், நேரடி மற்றும் பதிவுசெய்வதற்கான ஒலியியலிலும், எஃப்.ஆர்.எஸ் ரேடியோக்களிலும், மெகாபோன்களிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி/ஒளிபரப்புகளிலும் ஒலிவாங்கி பயன்படுத்தப்படுகிறது. மேலும் கணினிகளில் குரலொலி பதிவு செய்வதற்கும், குரலொலியை கண்டறியும் வசதியிலும், இணையத்திலிருந்தே பேசுவதற்கும், மற்றும் புற ஊதாக்கதிர்கள் பரிசோதனை அல்லது பூட்டு உணர்விகள் போன்றவற்றில் பேச்சொலியற்ற பயன்பாடுகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

அதிர்வு தாங்கியுடன் பொருத்தப்பட்ட ஒரு Neumann U87 மின்தேக்கி ஒலிவாங்கி

இன்றிருக்கும் பல ஒலிவாங்கிகள் அதிர்வுகளில் இருந்து மின்னியல் மின்னழுத்தங்களை உருவாக்க மின்காந்த தொடர்புமுறையை (டைனமிக் ஒலிவாங்கி), மின்தேக்க மாற்று முறையை (மின்தேக்கி ஒலிவாங்கி, வலதுபுறம் படத்தில் காட்டப்பட்டுள்ளது), பீஜோ-மின் உற்பத்தியை அல்லது ஒளி பண்பேற்ற முறையைப் பயன்படுத்துகின்றன.

வகைகள்

தொகு

ஒலிவாங்கியின் நுண்மையான ஆற்றல்மாற்றி ஆக்கக்கூறு , அதன் மூல ஆதாரபாகம் அல்லது உள்ளுறை என்றழைக்கப்படுகிறது. ஒரு முழுமையான ஒலிவாங்கியானது, கேப்சூலின் வெளியீட்டை சாதனத்திற்குக் கொண்டு செல்ல முற்றிலுமாக மூடப்பட்ட அமைப்பையும், ஒரு மின்னணு மின்சுற்றையும் கொண்டிருக்கும். இந்த மூடிய அமைப்பு ஏதோவொரு வகையில் ஆதார உட்பாகத்திலிருந்து சமிக்ஞையை பிற சாதனங்களுக்கு எடுத்து வரும். ஒலிவாங்கிகள் அவற்றின் ஆற்றல்மாற்றி கோட்பாட்டின் அடிப்படையிலும் மற்றும் அவற்றின் பயன்பாட்டுதிசை பண்புகளின் அடிப்படையிலும் குறிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இடைப்படலத்தின் அளவு, பயன்படுத்தப்படும் முறை போன்ற பிற தன்மைகளைக் கொண்டும், அல்லது ஒலிவாங்கியின் முதன்மை அச்சிற்கு ஒலி உள்ளீட்டு கோட்பாட்டின் நிலைநோக்கு பயன்படுத்தப்படும் முறையைக் கொண்டும் ஒலிவாங்கியின் வகை வரையறுக்கப்படுகிறது.

மின்தேக்கி ஒலிவாங்கி

தொகு
 
ஒக்டாவா 319 மின்தேக்கி ஒலிவாங்கியின் உள்பாகம்

ஆங்கிலத்தில் கெபாசிட்டர் மைக்ரோபோன் என்றழைக்கப்படும் மின்தேக்கி ஒலிவாங்கி யில்,[1] இடைப்படலம் மின்தேக்கியின் ஒரு தகடாக செயல்படுகிறது. உருவாகும் அதிர்வுகள் தகடுகளுக்கு இடையிலான தூரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது நிலைமின் ஒலிவாங்கி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறான ஆற்றல்மாற்றிகளில் இருந்து வெளியாகும் ஒலியலைகளைப் பிரித்தெடுக்க இரண்டு முறைகள் உள்ளன: ஒன்று நேரோட்ட மின்சாரத்தில் செயல்படும் ரேடியோ அலைவரிசை (RF), மற்றொன்று உயர் அலைவரிசை (HF) மின்தேக்கி ஒலிவாங்கிகள். நேரோட்ட மின்னூட்டம் செய்யப்பட்ட ஓர் ஒலிவாங்கியில், தகடுகள் ஒரு நிலையான மின்னூட்டத்தைச் (Q ) சார்ந்திருக்கும். மின்தேக்கியின் தகடுகளுக்கு இடையில் இருக்கும் மின்னழுத்தம், காற்றில் இருக்கும் அதிர்வுக்கு ஏற்ப மாறுபடும். மின்தேக்க சூத்திரத்தின்படி, (C= Q / V), இதில் Q என்பது மின்னூட்டம். இது கொலம்ப்ஸ் என்ற அலகால் அளக்கப்படுகிறது. C என்பது மின்தேக்கத்திறன். இது ஃபாரட் என்ற அலகால் அளக்கப்படும். V என்பது மின்னழுத்த வேறுபாடாகும். இது வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது. ஒரு இணைத்தகடு மின்தேக்கியில் தகடுகளின் மின்தேக்கத்திறன் ஆனது அவற்றிற்கு இடையிலிருக்கும் தூரத்திற்கு நேர்எதிராக இருக்கும். (மேலும் விபரங்களுக்கு மின்தேக்கத்திறன் என்பதைப் பார்க்கவும்). இந்த பொருத்தப்பட்ட அசையும் தகடுகளின் அமைப்பு ஒரு "ஆக்கக்கூறு பாகம்" அல்லது "உள்ளுறை" என்றழைக்கப்படுகிறது.

மின்தேக்கியில் ஓரளவிற்கு நிலையான மின்னூட்டம் நிர்வகிக்கப்படும். மின்தேக்கம் மாறுபடுகையில், மின்தேக்கிக்குள் இருக்கும் மின்னூட்டம் மிக குறைந்தளவிற்கே வேறுபடும். ஆனால் ஒலியலைவரிசைகளில் இது மிகவும் நுண்மையுடன் நிலையாக இருக்கும். கேப்சூலின் மின்தேக்கமும் (சுமார் 5 முதல் 100 pF வரை), கோடல் மின்தடையின் மதிப்பும் (100 மெகா ஓம்களில் இருந்து ஜிகா ஓம்களின் பத்து மடங்குகளில் இருக்கும்) ஒரு வடிகட்டியாக செயல்படுகின்றன. இந்த வடிகட்டியானது, ஒலி சமிக்ஞையின் உயர் அலைவரிசையையும், கோடல் மின்னழுத்தத்தின் குறைந்த அலைவரிசையையும் அனுமதிக்கக்கூடியதாகும். ஒரு ஆர்.சி. மின்சுற்றின் கால அளவானது, மின்தடை மற்றும் மின்தேக்கத்தின் பெருக்கல் மதிப்புக்கு இணையாக இருக்கிறது.

மின்தேக்க மாற்றத்தின் கால அளவிற்குள்ளேயே, மின்னூட்டம் நடைமுறைரீதியாக நிலையாக இருக்கிறது. மின்தேக்கிக்கு இடையில் இருக்கும் மின்னழுத்தம், மின்தேக்கத்தின் மாற்றத்தை பிரதிபலிக்க உடனடியாக மாறுகிறது. மின்தேக்கிக்கு இடையிலிருக்கும் மின்னழுத்தம், கோடல் மின்னழுத்த அளவிற்கு குறைவாகவும், அதிகமாகவும் மாறுகிறது. கோடலுக்கும், மின்தேக்கிக்கும் இடையிலான மின்னழுத்த வேறுபாட்டை, தொடர் மின்தடையின் குறுக்காக காணலாம். மின்தடையின் மின்னழுத்தம் செயல்திறனுக்காகவோ அல்லது பதிவு செய்வதற்காகவோ அதிகரிக்கப்படுகிறது.

 
AKG C451B சிறிய இடைப்படல மின்தேக்கி ஒலிவாங்கி

ரேடியோ அலைவரிசை மின்தேக்கி ஒலிவாங்கியானது, ஒப்பீட்டளவில், ஒரு குறைந்த-இரைச்சல் அலையியற்றியால் உருவாக்கப்பட்ட குறைந்த ரேடியோ அலைவரிசை மின்னழுத்தத்தைப் பயன்படுத்துகிறது. ஒலி அலைகளால் இடைப்படம் அசைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மின்தேக்க மாற்றங்களால், அலையியற்றியானது அலைவீச்சு பண்பேற்றம் செய்யப்படலாம், அல்லது அலையியற்றி சமிக்ஞையின் அலைவரிசையைப் பண்பேற்றம் செய்யும் ஒரு ஒத்ததிர்வு மின்சுற்றின் ஒரு பாகமாக இருக்கலாம். பண்பிறக்கமானது ஒரு குறைந்த-இரைச்சல் ஒலி அலைவரிசை சமிக்ஞையை ஒரு மிகக்குறைந்த ஆதார மின்மறுப்புடன் வெளியிடுகிறது. உயர்ந்த கோடல் மின்னழுத்தம் இல்லாமல் இருப்பதால் இறுக்கிக் கட்டப்படாத ஓர் இடைப்படலம் பயன்படுவதையும் இது அனுமதிக்கிறது. ரேடியோ அலைவரிசை கோடல் நிகழ்முறையானது, குறைந்த மின்னியல் மின்மறுப்பு கேப்சூலை அனுமதிக்கிறது. இதனால் ரேடியோ அலைவரிசை மின்தேக்கி ஒலிவாங்கிகளைப் பனிக்காலங்களிலும் பயன்படுத்த முடியும். ஆனால் இதுவே நேரோட்ட மின்சார மின்னூட்டம் செய்யப்பட்ட ஒலிவாங்கிகளை, சரியாக மூடப்படாத தலைபாகங்களுடன் பயன்படுத்தும் போது அவை பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். சென்ஹெய்செர் "MKH" ஒலிவாங்கிகள் ரேடியோ அலைவரிசை மின்னூட்ட தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றன.

தொலைபேசி ஒலிபரப்பிகளிலும், மலிவுவிலை கரோக்கி ஒலிவாங்கிகளாகவும், பதிவு செய்வதற்கான ஒலிவாங்கிகளாகவும் மின்தேக்கி ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவை உயர்ந்த தரத்திலான ஒலியலைகளையே உருவாக்குகின்றன என்பதால், தற்போது ஆய்வகங்களிலும், அரங்க ஒலிப்பதிப்பு பயன்பாடுகளிலும் இவை பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. சிறிய ஒலியலையால் நகர்த்தப்படுமளவிற்கு மிக குறைந்த நிறையே தேவைப்படுவதால் இந்த தொழில்நுட்பம் இதற்கு பொருத்தமாக அமைகிறது. இவற்றிற்குத் தேவைப்படும் சிறியளவிலான சக்தி, ஒலிவாங்கியின் வெளியீடுகளின் வழியாக புனைவு மின்சாரமாகவோ அல்லது ஒரு சிறிய மின்கலத்தின் மூலமாகவோ அளிக்கப்படும். மின்தேக்கியின் தகடு மின்னழுத்தத்தை உருவாக்க மின்சாரம் கட்டாயம் தேவைப்படுகிறது. மின்தேக்கி ஒலிவாங்கிகள் இரண்டு இடைப்படலங்களுடனும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் படம் கீழே காட்டப்பட்டுள்ளது. சில ஒலிவாங்கிகளின், ஒலியலை உள்வாங்கும் வடிவத்தை மாற்றுவதும் சாத்தியமாகும்.

மின்னம் மின்தேக்கி ஒலிவாங்கி

தொகு
 
ஜி.எம். செஸ்லெரினால் மென்தகடு மின்ம ஒலிவாங்கியின்மீது பெறப்பட்ட முதல் காப்புரிமை (பக்கம் 1-இல் இருந்து 3 வரை)

ஒரு மின்னம் ஒலிவாங்கி (Electret microphone) என்பது மற்றவைகளோடு ஓப்பிடும்போது, ஒரு புதிய வகை மின்தேக்கி ஒலிவாங்கியாகும். இது 1962ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தில் ஜெர்ஹார்டு செஸ்லர் மற்றும் ஜிம் வெஸ்ட் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.[2] மின்தேக்கி ஒலிவாங்கிகளில் வெளிப்புறத்தில் இருந்து அளிக்கப்படும் மின்னூட்டம் போல, இதில், இதிலிருக்கும் ஒரு மின்னம் பொருளில் ஒரு நிலையான மின்னூட்டம் அளிக்கப்படுகிறது. ஒரு மின்னம் என்பது ஓர் அயமின் பொருளாகும். அது நிலையாக மின்னியல் மின்னூட்டம் செய்யப்பட்டிருக்கும் அல்லது துருவமுனைப்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் electromagnetic என்றழைக்கப்படும் வார்த்தை electr ostatic மற்றும் magnet ஆகிய இரண்டு வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளில் இருந்தே electret (மின்னம்) என்ற வார்த்தை பெறப்படுகிறது.

இவற்றின் செயல்திறன் சிறப்பாக இருப்பதாலும், உற்பத்தி செய்வதற்கும் எளிமையாக இருப்பதால், மலிவாகவும் இருப்பதால், இன்று பெருமளவிற்கு இந்த மின்னம் ஒலிவாங்கிகளே தயாரிக்கப்படுகின்றன. ஒரு செமிக்கண்டக்டர் உற்பத்தி நிறுவனம்,[3] ஆண்டுக்கு ஒரு பில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையில் இவற்றை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து கைபேசிகளும், கணினிகளும் மற்றும் தலைபொருத்தி ஒலிவாங்கிகளும் இந்த மின்னம் வகைகளைச் சேர்ந்தவைகளே ஆகும். இவை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது உயர்-தர ஒலிப்பதிவுகளிலும், சிறிய ஒலிப்பதிவு சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளிலும் இவை விரலளவுஒலிவாங்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஒருகாலத்தில் இந்த மின்னம் ஒலிவாங்கிகள் தரம் குறைந்தவையாக கருதப்பட்டன. ஆனால் தற்போது மிகச் சிறந்த ஒலிவாங்கிகளுக்கும் கூட இவை போட்டியாக திகழ்கின்றன. ஏனைய மின்தேக்கி ஒலிவாங்கிகளைப் போன்றே, இவற்றிற்கும் துருவமுனைப்பாட்டு மின்னழுத்தம் தேவைப்படுவதில்லை. பொதுவாக இவை ஓர் ஒருங்கிணைந்த முன்நிலை-ஒலிபெருக்கியைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த முன்நிலை-ஒலிபெருக்கிகளுக்கு மின்சாரம் தேவைப்படும். இந்த முன்நிலை-ஒலிபெருக்கிக்கு அரங்க பயன்பாடுகளில் பெரும்பாலும் மறைமுக மின்சாரம் (phantom power) அளிக்கப்படுகிறது. கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒலிவாங்கிகள், ஓர் இசைப்பிரிப்பு 3.5 மி.மீ. செருகியைக் கொண்டிருக்கும். இதற்கு கணினியிலிருந்து 5 வோல்ட் மின்சாரம் அளிக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, பல பொருத்தமற்ற ஆற்றல்மிகு ஒலிவாங்கிகளும் இந்த 3.5 மி.மீ. செருகிகளுடன் பயன்படுத்தப்படுகின்றன. இரைச்சல் அளவைப் பொறுத்த வரையில், வெகுசில மின்னம் ஒலிவாங்கிகள் சிறந்த நே.ஓ.-துருவமுனைப்பாட்டு ஒலிவாங்கிகளுக்குப் போட்டியாக விளங்குகின்றன. மலிவு விலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் போது, உயர்-தர ஒலிவாங்கிகளின் துல்லியத்தைப் பெற முடியாது. ஏனென்றால், உயர்-தர ஒலிவாங்களின் உள் அளவுகள் மிக துல்லியமாக இருக்க வேண்டும். இந்த துல்லியம் நே.ஓ. அல்லது ரேடியோ அலைவரிசை அல்லது மின்னம் என்று எந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் மின்தேக்கி ஒலிவாங்கிகளில் ஒரேமாதிரியாக தான் இருக்கின்றன.

ஆற்றல்மிகு ஒலிவாங்கி

தொகு
 
ஷூர் SM58 ஒலிவாங்கியைக் கொண்டு பாடும் பட்டி ஸ்மித்

டைனமிக் ஒலிவாங்கிகள் அல்லது ஆற்றல்மிகு ஒலிவாங்கிகள் என்றழைக்கப்படுபவை மின்காந்த தூண்டல் மூலமாக வேலை செய்கின்றன. இவை மிக துல்லியமாக இருக்க கூடியவை. அத்துடன் குறைந்த விலைகளில் கிடைக்கும் இவை தூசிகளாலும் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. பின்னூட்டத்திற்கு முன்னதாக உயர்ந்த சக்தியை உருவாக்கக்கூடிய அவற்றின் தன்மையால், அவை மேடை பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக அமைகின்றன.

அசையும்-சுருள் ஒலிவாங்கிகள் (Moving-coil microphones) ஒலிஎழுப்பிகளில் (loudspeaker) இருப்பதைப் போல, ஆனால் தலைகீழாக இதே ஆற்றல்மிகு கோட்பாட்டைப் பயன்படுத்துகின்றன. ஒரு நிலையான காந்தத்தின் காந்த புலத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய அசையும் தூண்டுச் சுருள், இடைப்படலத்துடன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒலிவாங்கியின் பரந்த திரையின் மூலமாக ஒலி உள்ளே நுழையும் போது, ஒலியலையானது இடைப்படலத்தை அசைக்கிறது. இடைப்படலம் அதிர்வுறும் போது, கம்பிச்சுருள் காந்த புலத்தில் நகர்கிறது. இதனால் மின்காந்த தூண்டல் மூலமாக கம்பிச்சுருளில் ஒரு மாறும் மின்சாரம் உருவாகிறது. ஒரேயொரு ஆற்றல்மிகு மென்படலம் அனைத்து ஒலி அலைவரிசைகளுக்கும் நேர்கோட்டில் விளைவை ஏற்படுத்துவதில்லை. இந்த காரணத்தால் சில ஒலிவாங்கிகள் ஒலி அலைவரிசையின் வெவ்வேறு பாகங்களை உள்வாங்குவதற்காகவும், பின்னர் கிடைக்கும் சமிக்ஞைகளை ஒருங்கிணைக்கவும் பல மென்படலங்களைப் பயன்படுத்துகின்றன. பல சமிக்ஞைகளை முறையாக ஒருங்கிணைப்பது சிக்கலானதாகும். மேலும் இதை செய்யக்கூடிய அமைப்புகள் அரிதாகவும், மிக விலையுயர்ந்தவைகளாகவும் உள்ளன. ஆனால் மற்றொருபுறம், மிக குறிப்பாக ஒலியின் விடுபட்ட அலைவரிசைகளை ஒருங்கிணைப்பதற்காகவே பல வடிவமைப்புகள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, AKG D 112 என்பது மேல் அதிர்வொலியை விட கீழ் அதிர்வொலிக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.[4] ஒலியியல் பொறியியலில் பெரும்பாலும் உயர்ந்த வெளிப்பாட்டைப் பெறுவதற்காக ஒரே நேரத்தில் பல வகையான ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

 
ஒரு நாடா ஒலிவாங்கியைப் பயன்படுத்தும் எட்மண்ட் லோவ்

நாடா ஒலிவாங்கி

தொகு

ஒரு காந்த புலத்திற்குள் ஒரு மெல்லிய, பொதுவாக மடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்ட உலோக நாடா ஒன்றை நாடா ஒலிவாங்கிகள் பயன்படுத்துகின்றன. இந்த நாடாவானது, மின்னியல்முறையில் ஒலிவாங்கியின் வெளியீட்டோடு இணைக்கப்பட்டிருக்கும். காந்த புலத்திற்குள்ளாக அதன் அதிர்வு மின்சார சமிக்ஞையை உருவாக்குகிறது. நாடா ஒலிவாங்கிகளும் அசையும் கம்பிச்சுருள் ஒலிவாங்கிகளைப் போலவே, ஒருவகையில் காந்த தூண்டலைக் கொண்டு ஒலியை உருவாக்குகின்றன. நாடாவானது ஒலியைப் பெறுவதற்காக முன்னாலும், பின்னாலும் இரண்டு பக்கமும் தடையின்றி என்பதால், ஒலி அழுத்தத்தை விட அழுத்த மாறல் விகிதத்தில் பிரதிபலிப்பைக் காட்டுவதால், நாடா ஒலிவாங்கி இருதிசை வடிவத்தில் (எட்டின் வடிவம் என்றும் இது அழைக்கப்படும்) ஒலியை உள்ளெடுக்கிறது. சாதாரண இசைப்பிரிப்பு பதிவின்போது ஒரேசமயத்தில் முன்னாலும், பின்னாலும் ஒலியை உள்ளெடுப்பதென்பது ஒரு சிக்கலாக இருக்கும் என்பதால், நாடா ஒலிவாங்கியை கிடைமட்டமாக வைப்பதன் மூலம் அதிகளவிலான இரைச்சல் நிராகரிப்பு செய்து பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக கிணிகளின் மேலே வைத்து பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஒலிப்பகுதியின் அடிபாகம் மட்டும் கிணியின் ஒலியை உள்ளெடுக்கும். எட்டு வடிவம் அல்லது ஃப்ரும்லீன் ஜோடி என்ற இது இசைப்பிரிப்பு பதிவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அத்துடன், எட்டு வடிவ ஒலி ஈர்ப்பின் ஆதாயத்தைக் கொண்டிருக்கும் நாடா ஒலிவாங்கியானது, அந்த பயன்பாட்டிற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.

நாடாவின் ஒரு முனையை ஒரு ஒலி பொறி அல்லது தகடினால் முடுவதால் மற்றொரு திசையில் ஒலிவடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் ஒரேயொரு திசையிலிருந்து மட்டும் ஒலி உள் நுழையும். பழக்கத்தில் இருக்கும் RCA வகை 77-DX ஒலிவாங்கியின் உள் தகடை வெளிப்புறத்தில் இருந்து பல நிலைகளில் மாற்றி அமைக்கலாம். இதன்மூலம் "எட்டு வடிவத்திலிருந்து" "ஒரேதிசை" ஒலி உள்ளெடுப்பு முறைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். இன்றும் உயர்ந்த ஒலித்தரத்தை உருவாக்கி அளிக்கும் இதுபோன்ற பழைய நாடா ஒலிவாங்கிகள், இந்த காரணத்திற்காக ஒருகாலத்தில் மிகவும் மதிக்கப்பட்டன. ஆனால் நாடா தளர்வாக தொங்கவிடப்பட்டிருந்தால், அருமையான குறைந்த அலைவரிசை வெளியீட்டை மட்டுமே பெற முடியும். இது இந்தவகையில் அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுகின்றன. புதிய நானோமூலப்பொருட்கள்[5] உட்பட நவீன நாடா மூலப்பொருட்கள் இந்த சிக்கல்களையும் தீர்க்கும் வகையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி குறைந்த அலைவரிசையிலும் கூட நாடா ஒலிவாங்கிகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்தி அளிக்கின்றன. பாதுகாப்பான காற்று திரைகள் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் நாடா பாதிப்படையாமல் இருப்பதிற்கான ஆபத்தைக் குறைப்பதுடன், பதிவு வேலை நடக்கும் போது கைகளால் பாதிப்படைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளையும் குறைக்கின்றன. முறையாக வடிவமைக்கப்பட்ட காற்று திரைகள் ஓரளவிற்கு குறையதிர்வெண் அலைவரிசைக்குத் தடையை உருவாக்குகின்றன. ஏனைய ஆற்றல்மிகு ஒலிவாங்கிகளின் பிற பிரிவுகளுடன் பொதுவாக ஒப்பிடும் போது, நாடா ஒலிவாங்கிகளுக்கு மறைமுக சக்தி தேவைப்படுவதில்லை; உண்மையில், இந்த மின்னழுத்தம் சில பழைய நாடா ஒலிவாங்கிகளைப் பாதிப்படையச் செய்யக்கூடும். சில புதிய நவீன நாடா ஒலிவாங்கி வடிவங்கள் முன்னிணைப்பு-ஒலிபெருக்கியையும் உட்கொண்டிருக்கும். இதனால் அவற்றிற்கு மறைமுக சக்தியும், நவீன முடக்கமின் நாடா ஒலிவாங்கிகளின் மின்சுற்றுகளும் தேவைப்படும். அதாவது குறிப்பிட்ட முன்னிணைப்பு-ஒலிபெருக்கி இல்லாதவை, தேவைக்காகவே நாடாவின் பாதிப்பைத் தடுக்கவும், மறைமுக சக்தியைக் கொண்டு மாற்றவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் தற்போது கிடைக்கும் புதிய நாடா பொருட்கள், காற்று வேகத்தையும் மற்றும் மறைமுக சக்தியையும் தாங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.

கரிம ஒலிவாங்கி

தொகு

பெர்லினெர் மற்றும் எடிசன் ஒலிவாங்கிகளைப் போலவே ஒரு கரிம ஒலிவாங்கி அல்லது கார்பன் ஒலிவாங்கியானது, இரண்டு உலோக தகடுகளுக்கு இடையில் அழுத்தப்பட்ட நிலையிலிருக்கும் கரிம துகள்களைக் கொண்டிருக்கும் ஒரு பொட்டலத்தை அல்லது பொத்தானைப் பயன்படுத்தும். உலோக தகடுகளுக்கு இடையில் அளிக்கப்படும் ஒரு மின்னழுத்தம், கார்பனில் ஒரு சிறிய மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த தகடுகளில் ஒன்றான இடைப்படலம், கிடைக்கும் ஒலி அலைகளுக்கு ஏற்ப அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதனால் கார்பனுக்கு மாறி மாறி அழுத்தம் கிடைக்கிறது. இவ்வாறு மாறும் அழுத்தத்தால் கரித்துகள்கள் சிதைகின்றன. இது அந்த கரித்துகள்களின் ஒட்டுமொத்த மின்தடையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மின்தடையில் ஏற்படும் மாற்றம், அதற்கொத்த வகையில் ஒலிவாங்கியின் மின்சார ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, மின் சமிக்ஞையை உருவாக்குகிறது. ஒருகாலத்தில் கார்பன் ஒலிவாங்கிகளே பொதுவாக தொலைபேசிகளில் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் ஒலித்தரம் மிகக் குறைவாக இருக்கும். கார்பன் பந்துகளைப் பயன்படுத்திய 1880ஆம் ஆண்டின் பௌடிட் ஒலிவாங்கியும், கரித்துகள் பொத்தான் ஒலிவாங்கியைப் போன்றதே ஆகும்.[6]

ஏனைய ஒலிவாங்கி வகைகளைப் போலவே, கார்பன் ஒலிவாங்கிகளையும் ஒலிபெருக்கியின் ஒரு வகையாக பயன்படுத்தலாம். அதாவது குறைந்தளவிலான ஒலிச்சக்தியை அதிகளவிலான மின்சக்தியாக மாற்ற பயன்படுத்தலாம். ஆரம்பகால தொலைபேசி மீட்டுரைகளில் கார்பன் ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. காற்றில்லாகுழாய்களுக்கு முந்தைய காலத்தில் இதன்மூலம் நீண்டதூர தொலைபேசி அழைப்புகளைச் செய்ய சாத்தியப்பட்டது. இந்த மீட்டுரைகள் இயந்திரரீதியாக ஒரு தொலைபேசி காந்த அலைவாங்கியை ஒரு கார்பன் ஒலிவாங்கியோடு இணைத்ததன் மூலமாக வேலை செய்தது. அலைவாங்கியிலிருந்து வந்த மெல்லிய சமிக்ஞை, ஒலிவாங்கியிடம் அனுப்பப்பட்டு, அதிலிருந்து கிடைத்த வலிமையான மின் சமிக்ஞை இணைப்பு கம்பிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதிலிருந்த பிரச்சினை என்னவென்றால், இந்த ஒலிவாங்கியின் அருகில் ஒலிஎழுப்பி வைக்கப்பட்டால், அதிலிருந்து கிடைத்த பின்னூட்டம் ஒலிபெருக்கியை பாதித்தது. கார்பன் பந்துகளைப் பயன்படுத்திய, 1881ஆம் ஆண்டின் பௌடெட் ஒலிவாங்கி, கார்பன் துகள்களால் ஆன பொத்தான் ஒலிவாங்கிகளுக்குப் பின்னால் வந்தவை ஆகும்.

அழுத்தமின் ஒலிவாங்கி

தொகு

படிக ஒலிவாங்கி அல்லது அழுத்தமின் ஒலிவாங்கி யானது, அழுத்தமின் விளைவைப் பயன்படுத்துகிறது. அதாவது அழுத்தமின்விளைவு என்பது அழுத்தப்படும் போது மின்சாரத்தை உருவாக்கும் சில பொருட்களின் தன்மையாகும். இது அதிர்வுகளை மின் சமிக்ஞையாக மாற்ற பயன்படுகிறது.

அழுத்தமின் படிகமான ரோசெல்லி உப்பு (பொட்டாஷியம் சோடியம் டார்ட்ரேட்), இந்த வகை பொருளுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இது ஓர் ஆற்றல்மாற்றியாக இருந்து ஓர் ஒலிவாங்கியாகவும், அதேபோல ஒரு ஒலிஎழுப்பியாகவும் வேலை செய்கிறது. படிக ஒலிவாங்கிகள் ஒருசமயங்களில் உள்நாட்டு ஒலிபதிப்பான்கள் போன்ற வெற்றிட குழாய் உபகரணங்களுடன் பொதுவாக வினியோகிக்கப்பட்டு வந்தன. அவற்றின் வெளியீட்டு உயர்-மின்மறிப்பானது, வெற்றிடக்குழாய்களின் உள்ளீட்டு உயர்-மின்மறிப்பிற்கு (ஏறத்தாழ இது 10 மெகா ஓம்கள் இருக்கும்) சிறப்பாக பொருந்தியது. இவை ஆரம்பகால டிரான்சிஸ்டர் உபகரணத்துடன் பொருந்துவதற்குச் சிரமமாக இருந்தன. மேலும் விரைவிலேயே ஒருகாலகட்டத்தில் இவை ஆற்றல்மிகு ஒலிவாங்கிகளாலும், பின்னர் சிறிய மின்னம் மின்தேக்கி சாதனங்களாலும் தூக்கி எறியப்பட்டன. படிக ஒலிவாங்கியின் உயர் மின்மறிப்பு, இரச்சலைக் கையாள்வதில் அவற்றின் நம்பகத்தன்மையைக் குறைத்தன.

அழுத்தமின் ஆற்றல்மாற்றிகள் பொதுவாக, இசைக்கருவிகளில் இருந்து வரும் ஒலியை ஒலிப்பெருக்கம் செய்ய தொடு ஒலிவாங்கிகளாகவே பயன்படுத்தப்படுகின்றன. டிரம்களின் ஒலியை உணரவும், சவாலான சூழ்நிலைகளிலும் (அதாவது நீருக்கடியில் இருக்கும் உயர்ந்த அழுத்தத்தை அளவிடவும்) இது பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவியான கிடாரில் கம்பி அதிர்வுகளைப் பொதுவாக இந்த அழுத்தமின் சாதனங்கள் தான் பெறுகின்றன. இந்தவகை ஒலிவாங்கிகள் பொதுவாக மின் கிடார்களில் காணப்படும் காந்த சுருள் அதிர்வேற்றிகளில் இருந்து வேறுபட்டவை. அவை அதிர்வுகளைப் பெற காந்தத் தூண்டுதலைப் பயன்படுத்தும்.

ஒளியிழை ஒலிவாங்கிகள்

தொகு
 
ஒளியிழை ஒலிவாங்கியான Optoacoustics 1140

ஓர் ஒளியிழை ஒலிவாங்கியானது, ஏனைய ஒலிவாங்கிகளைப் போல மின்தேக்கத்திலோ அல்லது காந்த புலங்களிலோ ஏற்படும் மாற்றங்களை உணர்வதற்கு மாறாக, ஒளியின் தன்மையை ஏற்படும் மாற்றங்களை உணர்வதன்மூலம் ஒலி அலைகளை மின் அதிர்வுகளாக மாற்றுகிறது.[7][8]

இதில், ஒரு சிறிய ஒலி-உணர்ந்து பிரதிபலிக்கும் இடைப்படலத்தின் மேற்பரப்பை ஒளிரச் செய்ய ஒரு ஒளியிழை வழியாக ஒளி லேசர் ஒளி பாய்ச்சப்படுகிறது. ஒலியானது இந்த இடைப்படலத்தை அதிரச் செய்யும் போது, ஒளியின் தன்மையில் சிறு மாற்றம் ஏற்பட்டு அது பிரதிபலிப்படுகிறது. பண்பேற்றம் செய்யப்பட்ட ஒளி, பின்னர் இரண்டாவது ஒளியிழை வழியாக ஒரு ஒளிஉணர்கருவிக்கு அனுப்பப்படுகிறது. அது பண்பேற்றம் பெற்ற ஒளியின் தன்மையை அலைமருவி ஒலியாகவோ அல்லது எண்மருவி ஒலியாகவோ மாற்றுகிறது. ஒளி நூலிழை ஒலிவாங்கிகள் உயர்ந்த ஆற்றலையும், அலைவரிசை தொகுப்பையும் கையாளக்கூடியதாகும்.

இந்த ஒளியிழை ஒலிவாங்கிகள் எவ்வித மின்சார, காந்த, நிலைமின்சார அல்லது கதிரியக்க புலங்களால் பாதிக்கப்படுவதில்லை. (இது EMI/RFI தாங்கும்திறன் என்றழைக்கப்படுகிறது) பழைய ஒலிவாங்கிகளால் துல்லியமாக செயல்பட முடியாத இடங்களிலும், தொழில்சாலைகளுக்கு உள்ளிருக்கும் உலைகள் போன்ற ஆபத்தான இடங்களிலும் அல்லது காந்த ஒத்ததிர்வு படமாக்கல் சாதனங்கள் நிறைந்த சுற்றுச்சூழல்களிலும் இந்த ஒளியிழை ஒலிவாங்கியைப் பயன்படுத்தலாம்.

ஒளியிழை ஒலிவாங்கிகள் மிகவும் வேகமாக செயல்படக்கூடியவை. அத்துடன், வெப்பம் பற்றும் தூசிகள் நிறைந்த சுற்றுச்சூழல் மாற்றங்களாலும் பாதிக்கப்படுவதில்லை. மேலும் எந்த திசைக்கு ஏற்றதாகவும், பொருத்தமான மின்மறிப்புக்கு ஏற்றதாகவும் உற்பத்தி செய்ய முடியும். எவ்வித முன்நிலை-பெருக்கியோ அல்லது வேறு ஏதேனும் மின் உபகரணமோ இல்லாமல், ஒலிவாங்கியின் ஒளிமூலத்தையும், அதன் ஒளி உணர்கருவியையும் பல கிலோமீட்டர் தூர இடைவெளியிலும் பொருத்த வைக்கலாம். ஆகவே இது தொழில்துறை பயன்பாட்டிற்கும், ஒலி கண்காணிப்பிற்கும் ஏற்றதாக அமைகிறது.

அகவொலி கண்காணிப்பு மற்றும் இரைச்சல் குறைப்பு போன்ற மிக சிறப்பார்ந்த பயன்பாட்டு பகுதிகளில் இந்த ஒளியிழை ஒளிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இவை மருத்துவ பயன்பாட்டு சாதனங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகின்றன.[9]) அதுமட்டுமின்றி, தொழில்துறை சாதனங்கள் கண்காணிப்பு மற்றும் உணர்தலுக்கும், ஒலித்திருத்தல்களுக்கும் மற்றும் அளவீட்டிற்கும், உயர்-தர ஒலிபதிவுகளுக்கும் மற்றும் சட்ட ஒழுங்கு பயன்பாட்டிற்கும் இது பயன்படுகிறது.

லேசர் ஒலிவாங்கி

தொகு

லேசர் ஒலிவாங்கிகள் பொதுவாக திரைப்படங்களில் ஒற்றறியும் சாதனமாக காட்டப்படுகின்றன. ஒலியால் பாதிக்கப்படும் தளத்திலோ அல்லது ஒரு ஜன்னல் மேற்பரப்பிலோ ஒரு லேசர் கற்றை செலுத்தப்படும். இந்த தளத்தில் ஏற்படும் லேசான அதிர்வுகள் திரும்பி வரும் லேசர் கற்றையை இடம் பெயர்க்கிறது. அது ஒலியலைகளை அறிய உதவுகிறது. இந்த அதிர்வுறும் லேசர் ஒளி பாய்ச்சப்பட்ட இடம் பின்னர் ஒலியாக மாற்றப்படுகிறது. மிக விரைவான மற்றும் செலவுமிக்க ஒரு அமைப்பாக இது விளங்குகிறது. திரும்பி வரும் ஒளி பிரிக்கப்பட்டு, ஓர் இன்டெர்ஃபெரோமீட்டருக்குள் அனுப்பப்படும். இது டாப்ளர் விளைவின் காரணமாக அலைவரிசை மாற்றங்களைக் கண்டறிகிறது. இது மிக துல்லியமாக இருக்கும் நிலையான லேசர் கற்றையும், பிற சாதனங்களும் தேவைப்படும்.

லேசர் ஒலிவாங்கியின் ஒரு புதிய வகை, காற்றில் இருக்கும் ஒலி அதிர்வுகளைக் கண்டறிய, லேசர் கற்றையையும், புகையையோ அல்லது நீராவியையோ பயன்படுத்துகிறது. லேசர் கற்றை பாதையில் ஓர் அசையும் நீராவியுடன் அல்லது புகையுடன் ஒரு லேசன்-ஒளிசெல்லின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அசைவு கண்டறியும் ஒலிவாங்கிக்கு, 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி, அமெரிக்க காப்புரிமை 7,580,533 வழங்கப்பட்டது. ஒலி அழுத்தம் புகையில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தும். அது ஒளிஉணர்க்கருவிசை எட்டும் லேசர் ஒளியின் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். 2009ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை நியூயார்க் நகரத்தில் 127வது ஒலி பொறியியல் சமூக மாநாட்டில் இந்த சாதனத்தின் முன்மாதிரி வெளியிட்டுக் காட்டப்பட்டது.

திரவ ஒலிவாங்கி

தொகு

ஒரு மாறும் மின்தடை ஒலிவாங்கி/ஒலிபரப்பி உட்பட அலெக்சாண்டர் கிரஹாம்பெல் அபிவிருத்திகளை உருவாக்கி அளிக்காத வரையில், ஆரம்பகால ஒலிவாங்கிகள் சரியான ஒலியை உருவாக்கித் தரவில்லை. நீருடன் சிறிதளவு சல்ஃப்ரிக் அமிலம் சேர்க்கப்பட்ட ஒரு திரவம் நிரப்பப்பட்ட ஓர் உலோக கோப்பையை பெல்லின் திரவ ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. இதில் ஒலியலையானது, நீரில் மேலும் கீழுமாக ஒரு முள்ளை அழுத்தியதன் மூலமாக, இடைப்படலத்திற்கு ஒலியலை அசைவை அளித்தது. கோப்பைக்கும், கம்பிக்கும் இடையிலான மின்தடையானது, நீரில் மூழ்காத முள்ளைச் சுற்றியிருந்த நீரின் அளவிற்கு நேர் எதிராக இருந்தது. எலிஷா கிரே முள்ளுக்குப் பதிலாக, ஒரு பித்தளைக் கம்பியை பயன்படுத்தி அந்த பதிப்பிற்கு எச்சரிக்கையை அளித்தார். மஜோரண்ணா, சேம்பர்ஸ், வன்னி, ஸ்கிஷ், மற்றும் எலிஷா கிரே ஆகியோரால் பிற சிறிய மாற்றங்களும், அபிவிருத்திகளும் கொண்டு வரப்பட்டன. 1903ஆம் ஆண்டு ரெஜினால்டு பெஸ்சென்டென்னால் ஒரு பதிப்பு காப்புரிமை பெறப்பட்டது. இவை தான் முதன்முதலாக வேலை செய்த ஒலிவாங்கிகள். ஆனால் அவை பொதுவான பயன்பாட்டிற்கு நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. பெல்லுக்கும், வாட்சனுக்கும் இடையிலான பிரசித்தி பெற்ற முதல் தொலைபேசி உரையால் ஒரு திரவ ஒலிவாங்கியின் மூலமாக தான் நடந்தது.

மெம்ஸ் ஒலிவாங்கி

தொகு

மெம்ஸ் ஒலிவாங்கியானது (MEMS - MicroElectrical-Mechanical System) , ஓர் ஒலிவாங்கி சில்லு அல்லது சிலிகான் ஒலிவாங்கி என்று அழைக்கப்படுகிறது. இந்த மெம்ஸ் தொழில்நுட்பம் மூலமாக ஒரு சிலிக்கான் சில்லுக்குள் அழுத்தம் உணரும் இடைப்படலம் நேரடியாக திணிக்கப்படுகிறது. இது பொதுவாக முன்நிலை-ஒலிபெருக்கியுடன் சேர்ந்து இருக்கும். பெரும்பாலான மெம்ஸ் ஒலிவாங்கிகள், மின்தேக்கி ஒலிவாங்கி வடிவத்தின் மாற்று வடிவங்களாகவே இருக்கின்றன. இந்த மெம்ஸ் ஒலிவாங்கிகள் ஒரே சிமாஸ் (CMOS) சில்லில் அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றும் மாற்றியில் உருவாக்கப்பட்டிருக்கும். இது அந்த சில்லை ஓர் எண்மருவி ஒலிவாங்கியாக மாற்றிவிடுகிறது. பல நவீன எண்மருவி தயாரிப்புகளில் இது ஒருங்கிணைத்து வைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். வோஃப்சன் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் (WM7xxx), அனலாக் டிவைசஸ், அகுஸ்டிகா (AKU200x), இன்ஃபீனியன் (SMM310 தயாரிப்பு), கோனஸ் எலெக்ட்ரானிக்ஸ், மெம்ஸ்டெக் (MSMx), என்.எக்ஸ்.பீ. செமிகண்டக்டர்ஸ், சோனியன்னf மெம்ஸ், எ.எ.சி. அகோஸ்டிக் டெக்னாலஜீஸ்,[10] மற்றும் ஓம்ரன் ஆகியவை மெம்ஸ் சிலிக்கான் ஒலிவாங்கிகளைத் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்களாகும்.[11]

ஒலிஎழுப்பிகளே ஒலிவாங்கிகளாக

தொகு

மின்சார சமிக்ஞையை ஒலியலையாக மாற்றும் ஓர் ஆற்றல்மாற்றியான ஒலிஎழுப்பியின் செயல்பாடானது, ஒலிவாங்கியின் செயல்பாட்டிற்கு நேர் எதிர்விதத்தில் அமைந்திருக்கும். ஒரு வழக்கமான ஒலிஎழுப்பி, ஓர் ஆற்றல்மிகு ஒலிவாங்கியைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது (அதாவது ஓர் இடைப்படலம், சுருள் மற்றும் காந்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்). ஒலிஎழுப்பிகள் உண்மையில் "தலைகீழாக" ஒலிவாங்கிகளைப் போன்றும் செயல்படக்கூடியவையே. ஆனால், தரங்குறைந்த, மோசமான அலைவரிசை வெளியீடுகளும், குறைந்த உணர்திறனுமே இதில் விளைவாக ஏற்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில், உள்நிலை தொலைபேசிகள், வாக்கி-டாக்கிகள் அல்லது ஒளிப்பட விளையாட்டு குரல் பேசி சாதனங்கள் போன்ற பயன்பாடுகளில் உயர்ந்த தரமும், உயர் உணர்திறனும் தேவையில்லை என்கிற போதோ அல்லது வழக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒலிவாங்கிகளில் சந்தையில் கிடைக்காத போதோ சில நேரங்களில் ஒலிஎழுப்பிகளே ஒலிவாங்கிகளாக பயன்படுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும், குறைந்தபட்சம் இந்த முறையில் பயன்படுத்துவதற்கு மற்றொரு நடைமுறை பயன்பாடும் உள்ளது: அதாவது, ஒரு நடுத்தர-அளவிலான குறை அதிர்வெண் ஒலிஎழுப்பிகளை, டிரம்களின் மிகை அதிர்வெண் ஒலிஎழுப்பி டிரம்களின் முன்னால் வைக்கும் போது, அது ஒலிவாங்கியாக செயல்படுகிறது. குறைந்த அலைவரிசை ஒலிகளை ஆற்றல்மாற்றுவதற்கு, குறிப்பாக இசை தயாரிப்பு அரங்கங்களில், பொதுவாக பெரிய ஒலிஎழுப்பிகள் பயன்படுத்தப்படுவதுண்டு. யமஹா சப்கிக் என்பது இந்த வகை உபகரணங்களுக்கான ஓர் உதாரணமாகும். இதில் ஒரு 12-அங்குலம் (300 mm) வகையான குறை அதிர்வெண் ஒலிஎழுப்பி கிக் டிரம்களின் முன்னால் பயன்படுத்தப்படும். ஒரு பருத்த மென்படலம் உயர் அலைவரிசைகளை ஆற்றல்மாற்றம் செய்ய முடியாது என்பதால், பொதுவாக ஒரு கிக் டிரம்களின் முன்னால் ஓர் ஒலிஎழுப்பி வைக்கப்படும். மிக குறைவான பயன்பாடுகளில், ஒலிவாங்கிகளும் ஒலிஎழுப்பிகளாகப் பயன்படுத்தப்படும். ஏறத்தாழ பெரும்பாலும் இவை உயர்தொனிக்கருவிகளாக பயன்படுத்தப்படும். ஒலிஎழுப்பிகளின் உட்பாகங்களுக்கு மின்சாரம் அளிக்கும் அளவிற்கு ஒலிவாங்கிகள் வடிவமைக்கப்படவில்லை என்பதால், ஒலிவாங்கிகள் மிகக் குறைவாகவே ஒலிஎழுப்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எஸ்.டி.சி. ஒலிவாங்கியைப் பயன்படுத்தும் 4001 சூப்பர்-ட்வீட்டர் உபகரணம் இந்த வகை பயன்பாட்டடிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். போவர்ஸ் & வெல்கின்ஸ் டி.எம்.2.எ மாதிரி இதற்கொரு நன்கறியப்பட்ட எடுத்துக்காட்டாகும்.

உள்ளுறை வடிவமைப்பும், ஒலித்திசையும்

தொகு

ஒலிவாங்கியின் உட்பாகங்கள், ஒலித்திசையை அளிப்பதில் முதன்மை ஆதாரமாக இருக்கிறது. ஓர் அழுத்த ஒலிவாங்கியானது, சுற்றுச்சூழலின் மற்றும் காற்றின் ஒரு நிலையான உள் கொள்ளளவிற்கும் இடையில் ஓர் இடைப்படலமாக பயன்படுகிறது. மேலும் அது அனைத்து திசைகளில் இருந்து வரும் அழுத்தங்களுக்கும் ஒரேசீராக பிரதிபலிப்பைக் காட்டுகிறது. ஆகவே இதை வட்டஒலித்திசை என்றழைக்கப்படுகிறது. ஓர் அழுத்த-சாய்வு ஒலிவாங்கியானது, இருபுறமும் குறைந்தபட்சம் சிறிதாவது சிறந்திருக்கும் ஓர் இடைப்படலத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு பக்கங்களிலிருந்தும் உருவாக்கப்படும் அழுத்த வேறுபாடு, அதன் ஒலித்திசை பண்புகளைத் தீர்மானிக்கிறது. ஒலிவாங்கியின் புற வடிவம் போன்ற பிற ஆக்கக்கூறுகளும், இடையுறு குழாய்கள் போன்ற புறச்சாதனங்களும் கூட ஒலிவாங்கியின் ஒலித்திசையை மாற்றி அமைக்கும். ஒரு துல்லியமான அழுத்த-சாய்வு ஒலிவாங்கியானது, முன்னாலும், பின்னாலும் இரண்டு திசைகளில் இருந்து வரும் ஒலிகளுக்குச் சமமான உணர்திறனைக் கொண்டிருக்கும். ஒரு துல்லியமான அழுத்த-சாய்வு ஒலிவாங்கியின் ஒலித்திசை பண்பு வடிவம் எட்டு போன்ற வடிவத்தில இருக்கும். ஏனைய முனைவு வடிவங்கள், வெவ்வேறு பாதைகளில் இந்த இரண்டு விளைவுகளையும் ஒருங்கிணைக்கும் ஓர் உள்ளுறையை உருவாக்குவதன் மூலம் பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இதயவடிவ ஒலிவாங்கியானது, ஓரளவிற்கு மூடிய பின்பகுதியைக் கொண்டிருக்கும். இதனால் அழுத்தம் மற்றும் அழுத்த-சாய்வு பண்புகளின் ஓர் ஒருங்கிணைந்த விளைவு உண்டாகிறது.[12]

ஒலிவாங்கியின் முனைவு வடிவங்கள்

தொகு

(இடைப்படலத்தில் ஒலிவாங்கி பக்கத்தின் மேல்நோக்கி பார்த்தவாறும், பக்கத்திற்கு இணையாகவும் இருக்கிறது):

ஓர் ஒலிவாங்கியின் ஒலித்திசை அல்லது முனைவு வடிவம் என்பது அதன் மைய அச்சிற்கு வெவ்வேறு கோணங்களில் இருந்து வரும் ஒலிகளுக்கு அது எந்தளவிற்கு துல்லியமாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு காட்டுகிறது. மேலே காட்டப்பட்டிருக்கும் முனைவு வடிவங்கள், ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து ஓர் ஒலி அழுத்த அளவு உருவாக்கப்படும் போது, ஒலிவாங்கியிலும் அதே ஒலி அளவை வெளியிடக்கூடிய புள்ளிகளின் நியமப்பாதைக் குறிப்பிட்டு காட்டுகின்றன. இடைப்படலங்களைச் சார்ந்து ஒலிவாங்கியின் ஸ்தூல வடிவம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒலிவாங்கியின் வடிவமைச் சார்திருக்கும். ஆக்டாவா (மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது) போன்ற பருத்த-மென்படல ஒலிவாங்கிகளைப் பொறுத்த வரையில், முனைவு வடிவத்தில் இருக்கும் மேல்நோக்கு திசை பொதுவாக ஒலிவாங்கி வடிவத்திற்கு நேர் எதிராக இருக்கும். பொதுவாக இது "பக்க நெருப்பு" அல்லது "பக்க முகவரி" என்று அழைக்கப்படுகிறது. ஷூர் (இதுவும் மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது) போன்ற சிறிய இடைப்படல ஒலிவாங்கிகளில், பொதுவாக "இறுதி நெருப்பு" அல்லது "மேல்/இறுதி முகவரி" என்று அழைக்கப்படும் ஒலிவாங்கியின் அச்சிலிருந்து விரிவடைகிறது.

சில ஒலிவாங்கியின் வடிவங்கள், தேவையான முனைவு வடிவத்தை உருவாக்குவதில் பல்வேறு கோட்பாடுகளை ஒருங்கிணைத்து கொண்டிருக்கும். இது தாங்கும் வடிவமைப்பிலிருந்து தொடங்கி இரட்டை மென்படலங்கள் வரையில் இருக்கும்.

வட்டத்திசை ஒலிவாங்கி

தொகு

ஒரு வட்டதிசை (அல்லது திசையற்ற) ஒலிவாங்கியின் விளைவு, பொதுவாக மூன்று பரிமாணங்களில் ஒரு துல்லியமான வட்டமாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில், இவ்வாறு இருப்பதில்லை. திசையுடைய ஒலிவாங்கிகளில், ஒரு "வட்டத்திசை" ஒலிவாங்கிக்கான முனைவு வடிவமானது, அலைவரிசையின் செயல்பாடாக இருக்கிறது. இதன் விளைவாக ஒலிவாங்கியின் வடிவம் சிறியதாக இருப்பதில்லை. இதன் பின்னால் இருந்து வரும் ஒலி அதன் சொந்த போக்கில் அமைகிறது. இது முனைவு விளைவில் சிறிது பட்டையாக அமைந்துவிடுகிறது. இவ்வாறு பட்டையாக அமைவதால் ஒலிவாங்கியின் விட்டத்தையும் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அலைவரிசையின் அலைநீளம் கேள்விக்குள்ளாகிவிடுகிறது. ஆகவே, சிறிய விட்டத்தைக் கொண்ட ஒலிவாங்கிகளே உயர்ந்த அலைவரிசைகளில் சிறந்த வட்டத்திசை பண்புகளை அளிக்கின்றன.

ஒலியின் அலைநீளம் 10 கிலோஹெட்ஜில் சுமார் ஓர் இன்சிற்கும் குறைவாக இருக்கும். ஆகவே சிறிய ஒலியை உள்ளெடுக்கும் ஒலிவாங்கிகளின் விட்டம் பொதுவாக 1/4" (6 மி.மீ.) ஆக இருக்கும். இது உயர்ந்த அலைவரிசைகளிலும் கூட ஒலித்திசையை நடைமுறையில் நிராகரிக்கிறது. வட்டத்திசை ஒலிவாங்கிகள், இதயவடிவ ஒலிவாங்கிகள் போன்றில்லாமல், காலஇடைவெளிக்காக ஒத்ததிர்வு சுற்றுக்களைக் கொண்டிருப்பதில்லை. அழுத்த-உணர்வுகளைக் கொண்டிருப்பதால், அவை 20 ஹெட்ர்ஸ் அல்லது அதற்கும் கீழானதற்கு மிக தட்டையாக குறைந்த-அலைவரிசை பிரதிபலிப்பைக் காட்டும். அழுத்த-உணர் ஒலிவாங்கிகள், திசை ஒலிவாங்கிகளைவிட மிக குறைவாகவே காற்று இரைச்சலுக்கு விளைவுகளைக் கொடுக்கின்றன.

வட்டமான கருப்பு எட்டு-வடிவ பந்தை திசையற்ற ஒலிவாங்கிக்கு ஓர் எடுத்துக்காட்டாக கூறலாம்.[13]

ஒருதிசைசார் ஒலிவாங்கிகள்

தொகு

ஒருதிசைசார் ஒலிவாங்கியானது, ஒரேயொரு திசையிலிருந்து வரும் ஒலிகளுக்கு மிகவும் துல்லியமாக பிரதிபலிப்பைக் காட்டும். மேலே காட்டப்பட்டுள்ள படம் பல்வேறு இதன் வடிவங்களை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு படத்திலும் ஒலிவாங்கியானது மேல்நோக்கிய திசையில் பார்த்திருக்கும். ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கான ஒலித்துல்லியம், பூஜ்ஜியம் டிகிரி கோணத்திலிருந்து 360° கோணம் வரையில் இருக்கும். (தொழில்ரீதியான படங்கள் இந்த அளவீடுகளை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் வெவ்வேறு அலைவரிசைகளில் பல்வேறு படங்களையும் உட்கொண்டிருக்கின்றன. இங்கே அளிக்கப்பட்டிருக்கும் படங்கள், குறிப்பிடத்தக்க வடிவங்கள் மற்றும் அவற்றின் பெயர்களைப் பற்றிய மேலோட்டமான கருத்தை மட்டுமே அளிக்கும்.)

இதயவடிவ ஒலிவாங்கிகள்

தொகு
 
US664A பல்கலைக்கழக ஆற்றல்மிகு பரந்த இதயவடிவ அலைஈர்ப்புதிசை ஒலிவாங்கி

மிகப் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரேதிசைசார் ஒலிவாங்கிகள், இதயவடிவ ஒலிவாங்கிகளே ஆகும். இதன் உணர்திறன் வடிவம் இதயவடிவத்தில் இருப்பதால் இது இப்பெயரைப் பெற்றது. ஒரு பெரிய-இதயவடிவ ஒலிவாங்கியும் சாதாரணமானதைப் போன்றே இருந்தாலும் கூட, அதன் முன்பகுதி உணர்திறன் இறுக்கமான பகுதியையும், பின்பகுதி உணர்திறன் ஒரு சிறிய ஒலித்திசை வடிவத்தையும் கொண்டிருக்கும். ஒரு சிறப்பார்ந்த-இதயவடிவ ஒலிவாங்கி, ஒரு பெரிய-இதயவடிவ ஒலிவாங்கியைப் போன்றே இருக்கும் என்றாலும், முன்பக்கமிருந்தும் ஒலி உள்வாங்கும் திறன் அதிகமாகவும், பின்புறமிருந்து ஒலி உள்வாங்கும் திறன் குறைவாகவும் கொண்டிருக்கும். இந்த மூன்று ஒலிவாங்கிகளுமே, முன்புறம் தவிர்த்து ஏனைய திசைகளில் இருந்து வரும் ஒலியைச் சிறப்பாக நிராகரிக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன என்பதால், பொதுவாக மேடைகளிலும், பேசுவதற்கான வேறு இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஓர் இதயவடிவ ஒலிவாங்கியானது, ஒரு வட்டத்திசை மற்றும் ஒரு எட்டு-வடிவ ஒலிவாங்கிக்கும் மேலாக துல்லியமாக இருக்கிறது. பெரிய-இதயவடிவ ஒலிவாங்கியும், சாதாரண இதயவடிவ ஒலிவாங்கியைப் போலவே அமைந்திருக்கிறது. ஆனால் அதன் ஒலித்திசை சற்றே பெரிய எட்டு-வடிவத்தில் இருக்கிறது. அழுத்த-சாய்வு ஆற்றல்மாற்றி ஒலிவாங்கிகள் திசைசார் ஒலிவாங்கிகள் என்பதால், அவற்றை ஒலி உருவாக்கும் ஆதாரத்திற்கு மிக நெருக்கமாக வைக்கும் போது உயர்அதிர்வெண்ணை மேம்படுத்தி விடுகிறது. இது அண்மை விளைவு என்று அழைக்கப்படுகிறது.[14]

இருதிசைசார் ஒலிவாங்கிகள்

தொகு

"எட்டு-வடிவ" அல்லது இருதிசைசார் ஒலிவாங்கிகள், உட்பாகத்தின் முன்னும், பின்னும் ஆகிய இரண்டு திசைகளில் இருந்தும் ஒலிகளை ஏற்கும். பெரும்பாலான நாடா ஒலிவாங்கிகள் இந்த வடிவத்தைக் கொண்டிருக்கும்.

நீள்வடிவ ஒலிவாங்கிகள்

தொகு
 
ஒரு குரலொலி-நுட்பம் பெற்ற நீள்குழாய் ஒலிவாங்கி

நீள்வடிவ ஒலிவாங்கிகள் மிக மிக உயர்ந்த திசைசார் ஒலிவாங்கிகளாக இருக்கின்றன. இடது, வலது மற்றும் பின்புறங்களிலிருந்து வரும் ஒலியை மிக மிக குறைந்தளவே உள்ளெடுக்கின்றன. ஏனைய திசைசார் ஒலிவாங்கிகளோடு ஒப்பிடும் போது, பின்னாலிருந்தும், பக்கவாட்டிலிருந்தும் ஒலியை உள்ளெடுக்கும் தன்மை இதற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. இதில் ஒரு குழாயின் முனையில் ஒலிஉணர் கருவி வைக்கப்படும். இதன் பக்கவாட்டில் மூடப்பட்டிருக்கும். மேலும் அலை நீக்கம் பக்கவாட்டிலிருந்து வரும் ஒலியையும், பின்புறமிருந்து வரும் ஒலியையும் பெருமளவிற்கு நிராகரித்துவிடும். இவற்றின் உணர்திறன் பகுதி மிகவும் குறுகலாக இருப்பதால், நீளவடிவ ஒலிவாங்கிகள் பொதுவாக தொலைக்காட்சி மற்றும் திரைப்பட அரங்கங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும், காடுகளில் ஒலிப்பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

எல்லை அல்லது "பீ.இஜட்.எம்." ஒலிவாங்கி

தொகு

சிறப்பாக ஒலி உருவாகும் பகுதிகளில் மட்டுமின்றி ஏனைய இரைச்சலான பகுதிகளிலும் கூட ஒலிவாங்கியைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மிக இரைச்சலான பகுதிகளிலோ அல்லது ஒலி உருவாகும் ஆதாரத்திற்கு மிக நெருக்கமாகவோ ஒலிவாங்கியை வைக்கும் போது, அந்த மேற்பரப்பிலிருந்து வரும் பிரதிபலிப்புகளை ஒலிவாங்கி உணராத வகையிலும் இருக்கின்றன. மேற்பரப்புகளுக்கு இணையாக ஒரு சாதாரண ஒலிவாங்கியை வைப்பதன் மூலமாக முன்னர் இது சமாளிக்கப்பட்டது. சிலநேரங்களில் ஒலியைத் தடுத்தளிக்கும் ஊடகத்திற்குப் பின்னாலும் கூட வைத்து பயன்படுத்தப்பட்டது. ஒலி பொறியாளர்கள் எட் லாங்க் மற்றும் ரோன் வெக்கர்ஷம் இருவரும் இடைப்படலத்தை ஒலி உருவாகும் மேற்புறத்தைப் பார்த்தும், அதற்கு இணையாகவும் அமைக்கும் முறையை உருவாக்கினார்கள்.[15] காப்புரிமைகள் முடிந்துவிட்டிருந்தாலும் கூட, "அழுத்த பகுதி ஒலிவாங்கி" மற்றும் "பீ.இஜட்.எம்." ஆகியவை இன்றும் கிரௌன் இன்டர்நேஷனலின் முத்திரைஅடையாளங்களாகவே கருதப்படுகின்றன. மேலும் பொதுவான வார்த்தையான "எல்லை ஒலிவாங்கி" என்பதே எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுகிறது. எல்லை ஒலிவாங்கியில் தொடக்கத்தில் ஒரு வட்டதிசை உட்பாகத்தைப் பயன்படுத்தின என்றாலும், இந்த நுட்பத்தின் முழு பயனையும் பெற மேற்பரப்பின் மிக நெருக்கமாக ஓர் ஒரேதிசை ஒலிவாங்கியையும் பொறுத்தலாம். "PCC" என்பது இந்த அணுகுமுறையில் கிரௌன் முத்திரையாக இருக்கிறது. ஆனால் இதே நுட்பத்தைப் பயன்படுத்தும் வேறு உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள்.

பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்புகள்

தொகு

கைகளில் தொடாமல் பயன்படுத்துவதற்காக விரலளவு ஒலிவாங்கிகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறிய ஒலிவாங்கிகளை சட்டைகளில் பொருத்திக் கொள்ளலாம். உண்மையில், அவை கழுத்தைச் சுற்று சட்டை கழுத்துப்பட்டையில் செருகி வைக்கலாம். ஆனால் பொதுவாக அவை அணிந்திருக்கும் ஆடைகளில் செருகி வைக்கப்படுகின்றன. இந்த விரலளவு ஒலிவாங்கியிலிருந்து வரும் கார்டைத் துணிகளில் மறைத்துவிட முடியும். சிலநேரங்களில் பாக்கெட்டுகளில் இருக்கும் அல்லது இடுப்புபட்டையில் இணைக்கும் ரேடியோ அலைவரிசை ஒலிபரப்பிகளுடன் இவை இணைக்கப்பட்டிருக்கும் அல்லது நேரடியாக இவை ஒலிபெருக்கி உபகரணங்களுடன் இணைக்கப்பட்டு விடும்.

கம்பியில்லா ஒலிவாங்கியானது, ஒரு கம்பியின் மூலமாக அல்லாமல் ஒலியை ரேடியோ அல்லது ஒளி சமிக்ஞையாக மாற்றி அனுப்புகிறது. இது பொதுவாக ஒரு சிறிய பண்பலை ரேடியோ ஒலிபரப்பியைப் பயன்படுத்தி அதன் சமிக்ஞையை, ஒலி அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் அருகிலிருக்கும் ஒலிஈர்ப்பானுக்கு அனுப்பும். ஒலிபரப்பியும், ஒலிஈர்ப்பானும் பார்வைக்குட்பட்டு அருகில் இருக்கும் போது, அது அகச்சிவப்பொளியைக் கூட பயன்படுத்தும்.

ஒரு தொடு ஒலிவாங்கி ஒரு திட மேற்தளத்திலிருந்தோ அல்லது ஒரு திடப்பொருளில் இருந்தோ அதிர்வுகளை நேரடியாக பெறுகிறது. இந்த வகை ஒலிவாங்கியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று, மிக குறைந்த ஒலி அளவைக் கூட ஈர்ப்பது. அதாவது சிறிய பொருட்களின் ஒலியை அல்லது சிறிய பூச்சிகளின் ஒலியைக் கூட இது நுண்மையாக உணரும் தன்மை கொண்டது. இந்த ஒலிவாங்கிகள் பொதுவாக ஒரு காந்த (நகரும் சுருள்) ஆற்றல்மாற்றியையும், தொடு தகடையும், தொடு ஊசியையும் கொண்டிருக்கும். இந்த தொடு தகடு நேரடியாக இசை கருவியின் அல்லது பிற தளத்தின் அதிர்வுறும் பாகத்தின் மீது வைக்கப்படுகிறது. பின்னர் இந்த தொடு ஊசி அதிர்வுகளை சுருளுக்கு அனுப்புகிறது. நத்தையின் இதயஒலி, எறும்பின் கால் தடங்கள் போன்றவற்றை அறிய இந்த தொடு ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒலிவாங்கியின் சிறிய வடிவம் சமீபத்தில் தான் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு குரல்வளை ஒலிவாங்கி என்பது தொடு ஒலிவாங்கியின் மாற்று வடிவமாகும். குரல்வளையில் இணைக்கப்பட்டிருக்கும் இது ஒருவரின் குரல்வளையிலிருந்து நேரடியாக அவருடைய பேச்சை ஈர்த்தெடுக்கிறது. எல்லா திசைகளில் இருந்தும் சத்தம் வந்து கொண்டிருக்கும் பகுதிகளில் இந்த சாதனத்தைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால், பேசுபவர் மிகவும் சத்தமாக பேச வேண்டியதாக இருக்கும்.

ஒரு பரவளைய ஒலிவாங்கியானது, ஒலியலைகளை சேகரிக்கவும், ஒலிவாங்கியின் ஒலிஈர்ப்பானுக்குள் ஒன்று குவிக்கவும் ஒரு பரவளைய பிரதிபலிப்பானைப் பயன்படுத்துகிறது. ஒரு பரவளைய வானலைவாங்கியைப் போன்றே இது செயல்படுகிறது. (அதாவது ஒரு செயற்கைகோள் பரவளையம் ரேடியோ அலைகளைச் செய்வதைப் போலவே செய்கிறது) அசாதாரணமாக குவிக்கப்பட்ட முன் உணர்திறனையும், பல மீட்டர் தூரத்தில் கேட்கும் ஒலிகளையும் கூட ஈர்க்கக்கூடிய இந்த ஒலிவாங்கியின், இயற்கை ஒலிகளைப் பதிவு செய்வதற்காகவும், வெளிப்புற விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், ஒற்று கேட்பதிலும், சட்ட ஒழங்கைக் காப்பதிலும், ஒற்றறிவதிலும் பயன்படுகிறது. பரவளைவு ஒலிவாங்கிகள், குறைந்த அலைவரிசைகளில் சிறப்பாக செயல்படுவதில்லை என்பதால், அவை வழக்கமான ஒலிப்பதிவு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

ஓர் இசைப்பிரிப்பு ஒலிவாங்கியானது, ஓர் இசைப்பிரிப்பு சமிக்ஞையை உருவாக்க இரண்டு ஒலிவாங்கிகளை ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கிறது. ஓர் இசைப்பிரிப்பு ஒலிவாங்கியானது, பொதுவாக ஒலிபரப்பு பயன்பாடுகள் அல்லது வெளிப்புற ஒலிப்பதிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பாரம்பரிய X-Y உள்ளமைவில் இரண்டு தனித்தனி மின்தேக்கி ஒலிவாங்கிகளை உள்ளமைவு செய்வது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது. (பார்க்கவும்: இசைப்பிரிப்பு ஒலிபதிவிற்கான ஒலிவாங்கி பயிற்சி) இதுபோன்ற சில ஒலிவாங்கிகள் இரண்டு ஒலித்தடங்களுக்கு இடையில் ஆற்றலெல்லையின் மாற்றக்கூடிய கோணத்தைக் கொண்டிருக்கும்.

ஓர் இரைச்சல்-குறைக்கும் ஒலிவாங்கியானது, இரைச்சல் மிகுந்த சுற்றுசூழல்களில் பயன்படுத்துவதற்காக மிகச் சிறந்த ஒரேதிசையில் ஒலியை உள்வாங்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்வேறு பயன்பாடுகளில் ஒன்றாக இவை விமானங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இவை தலையணி ஒலிச்சாதனத்தில் பூம் ஒலிவாங்கிகளாக பொருத்தப்படும். இரைச்சல் மிகுந்த மேடைகளில் பாடகர்களாலும் இது பயன்படுத்தப்படும். பல்வேறு இரைச்சல்-குறைப்பு ஒலிவாங்கிகள் இரண்டு இடைப்படலங்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை ஒருங்கிணைக்கின்றன. இரட்டை இடைப்படல வடிவமைப்புகளில், முதன்மை இடைப்படலம் ஒலி உள்வரும் திசைக்கு மிக நெருக்கமாகவும், மற்றொருன்று தூரத்திலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு இடைப்படலங்களில் இருந்தும் பெறப்படும் ஒலியானது ஒருங்கிணைக்கப்படும். ஒரேயொரு இடைப்படலத்தைப் பயன்படுத்தும் பிற இரைச்சல்-குறைப்பு வடிவமைப்புகள், இரட்டை இடைப்படலங்கள் பயன்படுத்தும் ஒலிவாங்கிகள் குறைக்கும் அளவிற்கு இரைச்சலைக் குறைப்பதில்லை. ஒரேயொரு இடைப்படலத்தைப் பயன்படுத்தும் ஒரு இரைச்சல்-குறைப்பு தலையணி ஒலிச்சாதனத்தின் வடிவமைப்பு, கார்த் புரூக்ஸ் மற்றும் ஜனெட் ஜாக்சன் போன்ற பாடல் கலைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது.[16] ஒருசில இரைச்சல்-குறைப்பு ஒலிவாங்கிகள் குரல்வளை ஒலிவாங்கிகளாகும்.

இணைப்பான்கள்

தொகு
 
ஓர் ஒலிவாங்கியின் மின்னணு குறியீடு

ஒலிவாங்கிகளால் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இணைப்பான்களாவன:

  • தொழில்ரீதியான பயன்பாட்டு ஒலிவாங்கிகளில் ஆண்வகை XLR இணைப்பான் பயன்படுத்தப்படும்.
  • மலிவான நுகர்வோர் ஒலிவாங்கிகளில் கால் இன்ச் செருகும் செருகி (சிலவேளைகளில் இது 6.5 மி.மீ. செருகி என்றும் அழைக்கப்படுகிறது) அல்லது கால் இன்ச் டி.ஆர்.எஸ். இணைப்பான் என்றழைக்கப்படும் ஒருவகை இணைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல நுகர்வோர் ஒலிவாங்கிகள் சமநிலையற்ற கால் இன்ச் தொலைபேசி செருகிகளைப் பயன்படுத்துகின்றன. ஹார்மோனிக்கா ஒலிவாங்கிகள் பொதுவாக உயர் மின்மறிப்பு கால் இன்ச் டி.எஸ். இணைப்பானை கிடார் ஒலிபெருக்களில் பயன்படுத்துகின்றன.
  • மலிவுவிலை கணினி ஒலிவாங்கிகளில், 3.5 மி.மீ. சிறிய இசைப்பிரிப்பு தொலைபேசி செருகிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது சிலவேளைகளில் சிறிய 1/8 இன்ச் இணைப்பான் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சிறிய உபகரணங்களில் பயன்படுத்தப்படும் சில ஒலிவாங்கிகள், 5 முனை எக்ஸ்.எல்.ஆர் இணைப்பான், அல்லது சிறிய எக்ஸ்.எல்.ஆர். இணைப்பான்கள் போன்ற ஏனைய பிற இணைப்பான்களையும் பயன்படுத்துகின்றன. சில விரலளவு ஒலிவாங்கிகள் ஒரு கம்பியில்லா ஒலிபரப்பியுடன் இணைக்க பிரத்யேக சிறப்பு இணைப்பான்களைப் பயன்படுத்துகின்றன. 2005-ஆம் ஆண்டிலிருந்து, யூ.எஸ்.பி. இணைப்பான்களுடன் கூடிய தொழில்ரீதியான தரமுள்ள ஒலிவாங்கிகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவை கணினி அடிப்படையிலான மென்பொருள்களுக்கு நேரடியாக பதிவு செய்ய பயன்படுகின்றன.

மின்மறிப்பு-பொருத்தம்

தொகு

ஒலிவாங்கியானது, மின்மறிப்பு என்ற ஒரு மின்னியல் பண்பைக் கொண்டிருக்கும். வடிவமைப்பிற்கு ஏற்ப வேறுபடும் இது, ஓம்ஸ் (Ω) என்ற அலகால் அளக்கப்படும். ஓர் ஒலிவாங்கியின் இந்த மின்மறிப்பு அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.[17] 600 Ω-க்கு கீழே இருப்பது குறைவான மின்மறிப்பாகக் கருதப்படுகிறது. 600 Ω-க்கும் 10கிலோ ஓமிற்கும் இடையில் இருப்பது மத்திய மின்மறிப்பு அளவு என்று கருதப்படுகிறது. 10 கிலோ ஓமிற்கு மேலே இருப்பவை உயர் மின்மறிப்பு என்றறியப்படுகிறது. முன்நிலை-ஒலிபெருக்கிகளுக்குப் பின்னால் இருக்கும் மின்தேக்கி ஒலிவாங்கிகள், பொதுவாக 50 மற்றும் 200 ஓம்களுக்கு இடையில் வெளியீட்டு மின்மறிப்பைக் கொண்டிருக்கும்.[18]

ஓர் ஒலிவாங்கி குறைந்த மின்மறிப்பைக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது உயர் மின்மறிப்பைக் கொண்டிருந்தாலும் அது ஒரே அளவிலான சக்தியையே வெளியிடுகிறது. ஓர் ஒலிவாங்கி உயர்ந்த மற்றும் குறைந்த மின்மறிப்பில் உருவாக்கப்பட்டிருந்தால், அளிக்கப்படும் ஒலி அழுத்த உள்ளீட்டிற்கு ஏற்ப உயர் மின்மறிப்பு பதிப்பு உயர் வெளியீட்டு மின்னழுத்தத்தைக் கொண்டிருக்கும். இது வெற்றிட-குழாய் கிடார் ஒலிபெருக்கிகள் போன்றவற்றிக்கு மிக பொருத்தமான தேர்வாக அமைகின்றன. பெரும்பாலான தொழில்ரீதியான ஒலிவாங்கிகள் குறைந்த மின்மறிப்பையே கொண்டிருக்கும். அதாவது 200 அல்லது அதற்கு கீழான ஓம்களைக் கொண்டிருக்கும். தொழில்ரீதியான வெற்றிட-குழாய் ஒலி உபகரணங்கள் ஒரு மின்மாற்றியைக் கொண்டிருக்கும். இது ஒலிவாங்கி மின்சுற்றின் மின்மறிப்பை உயர் மின்மறிப்பிற்கு உயர்த்துகின்றன. இது வெற்றிட-குழாயின் இயக்கத்திற்குத் தேவையான மின்னழுத்தத்தை உருவாக்கி அளிக்கிறது. ஒரு குறைந்த மின்மதிப்பு ஒலிவாங்கிக்கும், ஓர் உயர் மின்மறிப்பு உள்ளீட்டிற்கும் இடையில் வெளியிலிருந்து பொருத்தம் அளிக்கும் மின்மாற்றிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

குறைந்த மின்மறிப்பு ஒலிவாங்கிகளுக்கு இரண்டு காரணங்களுக்காக முன்னுரிமை அளிக்கப்படுகிறது: ஒன்று ஓர் உயர் மின்மறிப்பு ஒலிவாங்கியை ஒரு நீண்ட கேபிளோடு பயன்படுத்தும் போது, கேபிளில் இருக்கும் மின்தேக்கத்தின் காரணமாக, உயர் அலைவரிசை சமிக்ஞையின் இழப்பு ஏற்படுகிறது. மற்றொரு காரணம், நீண்ட உயர் மின்மறிப்பு கேபிள்கள் அதிகளவிலான ஹம் ஒலிகளையும், சாத்தியப்படுமானால் ரேடியோ-அலைவரிசை குறுக்கீடுகளையும் (RFI) ஈர்க்கும். ஒலிவாங்கிக்கும், இணைக்கப்படும் சாதனத்திற்கும் இடையில் மின்மறிப்பு பொருத்தமாக இல்லை என்றால் எதுவும் சேதமடைந்து விடாது. அதிகபட்சமாக சமிக்ஞை அளவு குறையக்கூடும் அல்லது அலைவரிசை பிரதிபலிப்பு மாற்றம் அடையக்கூடும்.

பெரும்பாலான ஒலிவாங்கிகள் அவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும் சாதனத்தின் மின்மறிப்பிற்கு பொருத்தமான மின்மறிப்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதே இல்லை .[19] இவ்வாறு இருப்பதால், அவற்றின் அலைவரிசை பிரதிபலிப்பு மாறிவிடும்; குறிப்பாக உயர் ஒலி அழுத்த அளவுகளில் அவற்றின் அலைவரிசை குறுக்கீடுகளும் அதிகமாக இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட நாடா மற்றும் ஆற்றல்மிகு ஒலிவாங்கிகள் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன.[20][நம்பகமற்றது ]

எண்மருவி ஒலிவாங்கி இடைமுகம்

தொகு

ஒலி பொறியியல் கழகத்தால் அமைக்கப்பட்ட ஏ.ஈ.எஸ். 42 தரமுறை ஒலிவாங்கிகளுக்கான ஓர் எண்மருவி இடைமுகத்தை வரையறுக்கிறது. இந்த தரமுறையைக் கொண்டிருக்கும் ஒலிவாங்கிகள், ஓர் எண்மருவி ஒலியை நேரடியாக ஒரு எக்ஸ்.எல்.ஆர். ஆண் இணைப்பான் மூலமாக வெளிப்படுத்துகின்றன. எண்மருவி ஒலிவாங்கிகள், அவற்றிற்கு தோராயமான உள்ளீட்டு இணைப்பான்களுடன் புதிய உபகரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை எ.ஈ.எஸ். 42 தரமுறையைக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று, இந்த எ.ஈ.எஸ் 42 தரமுறையைக் கொண்டிருக்கும் இசையரங்க-தரத்திலான ஒலிவாங்கிகள் தற்போது பல்வேறு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன.

அளவுகளும், விபரக்குறிப்புகளும்

தொகு
 
ஒக்டாவா 319 மற்றும் ஷூர் SM58 ஆகிய ஒலிவாங்கிகளின் அச்சிலிருக்கும் தூர அலைவரிசை பிரதிபலிப்பின் ஓர் ஒப்பீடு

ஒலிவாங்கிகளின் உற்பத்தியில் இருக்கும் வேறுபாடுகள் காரணமாக, ஒலிவாங்கிகள் அவற்றிற்கேற்ப வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இவற்றின் வாகை ஒரேமாதிரியாக இருக்காது என்பதோடு, அவற்றின் அலைவரிசை பிரதிபலிப்புகளும் சீராக இருக்காது. மேலும், ஒலிவாங்கிகள் ஒலி அழுத்தங்களுக்கு ஏற்ப ஒரேமாதிரியான உணர்வுதிறனையும் கொண்டிருக்காது. விஞ்ஞான பயன்பாடுகளில் ஒலிவாங்கிகளின் மிக சீரான வெளிப்பாடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் இதுவே இசை ஒலிப்பதிவுகளில் அந்த அளவிற்கு தேவைப்படுவதில்லை. ஒலிவாங்கிகளுக்கென தொழில்நுட்ப விபரக்குறிப்புகள் சர்வதேச தரமுறையில் இருக்கிறது என்றாலும் கூட,[17] வெகுசில உற்பத்தியாளர்களே அதைக் கடைபிடிக்கிறார்கள். இதன் விளைவாக, வெவ்வேறு அளவீட்டு நுட்பங்கள் கையாளப்படுவதால், வெவ்வேறு உற்பத்தியாளர்கள் அளிக்கும் தொழில்நுட்ப விபரக்குறிப்புகளை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் சிரமமாக மாறிவிடுகிறது. ஒலிவாங்கி தரவு வலைத்தளம், ஒலிவாங்கி உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போதிருக்கும் ஒவ்வொரு ஒலிவாங்கியின் தொழில்நுட்ப விபரக்குறிப்புகளையும் படங்களுடனும், விளக்கங்களுடனும் தொகுத்துள்ளது.[3] பரணிடப்பட்டது 2007-02-10 at the வந்தவழி இயந்திரம். இருப்பினும், பிரசுரிக்கப்பட்டிருக்கும் எவ்வித தகவல்களில் இருந்தும் தீர்க்கமான முடிவுகளுக்கு வருவதற்கு முன் போதியளவிற்கு எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

அலைவரிசை பிரதிபலிப்பு வரைபடமானது, ஒலிவாங்கியின் உணர்வுத்திறனை டெசிபெலில் எடுத்துக்காட்டுகிறது. இது அலைவரிசைக்கேற்ப மாறுபட்டிருக்கும். அலைவரிசை பிரதிபலிப்பானது துல்லியமாக இல்லை என்றாலும், பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்: "30 Hz–16 kHz ±3 dB". அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இருந்து, இந்த வேறுபாடுகள் எந்தளவிற்கு மழுங்கலாக இருக்கும் என்பதை ஒருவரால் தீர்மானிக்க முடியாது. மாற்றம் ஏற்கும்தன்மையுடன் டெசிபில் அளவீடு இல்லாமல், வெறுமனே "20 ஹெட்ஸ் முதல் 20 கிலோ ஹெட்ஸ்" வரை என்று குறிப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதனால் எந்த பயனும் இல்லை. ஒரேதிசை ஒலிவாங்கிகளின் அலைவரிசை பிரதிபலிப்பு, ஒலி உள்ளீடுகள் இருக்கும் தொலைவிற்கு ஏற்ப மிக அதிகமாக மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும். ஐ.ஈ.சி. 60268-4 நெறிமுறைகளானது, அலைவரிசை பிரதிபலிப்பை தள முன்னேற்ற அலை சூழல்களில் தான் அளவிட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இது எப்போதும் நடைமுறைக்கு சாத்தியமாக இருப்பதில்லை. அண்மையில் வைத்து பேசும் ஒலிவாங்கிகளை, வெவ்வேறு ஒலி ஆதாரங்கள் மற்றும் தூரங்களைக் கொண்டு அளவிடலாம். ஆனால், அதில் எவ்வித தரமுறையும் இருப்பதில்லை. அளவீட்டு நுட்பங்கள் விவரிக்கப்பட்டால் ஒழிய, வெவ்வேறு மாதிரிகளில் இருந்து தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

ஒலிவாங்கி ஒலியில்லாத போது செய்வதைப் போல, சுய-இரைச்சல் அல்லது சம இரைச்சல் அளவானது ஒரேயளவிலான வெளியீட்டு மின்னழுத்தத்தை உருவாக்குகிறது. இது ஒலிவாங்கியின் ஆற்றல் அளவில் குறைந்த அளவை எடுத்துக்காட்டுகிறது. அளவீடு பொதுவாக dB (A) என்ற அலகால் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக: "15 dBA SPL" (இதில் SPL என்பது 20 மைக்ரோ பாஸ்கலைச் சார்பாக இருக்கும் ஒலி அழுத்த அளவைக் குறிக்கிறது). எந்தளவிற்கு இந்த அலகு குறைவாக இருக்கிறதோ, அந்தளவிற்கு சிறப்பாக இருக்கும். சில ஒலிவாங்கி உற்பத்தியாளர்கள், ஐ.டி.யூ.-ஆர். 498 இரைச்சல் அளவீட்டைப் பயன்படுத்தி இரைச்சல் அளவைக் குறிப்பிடுவார்கள். இது நாம் கேட்கும் இரைச்சலை மிக துல்லியமாக குறிப்பிட்டுக் காட்டும். அமைதி ஒலிவாங்கியானது, 20 dBA SPL அளவை அல்லது 32 dB SPL 468-அளவை மதிப்பிடுகிறது. Brüel & Kjaer 4179 போன்ற மிக அமைதியான ஒலிவாங்கிகள் சிறப்பு பயன்பாடுகளுக்காக பல ஆண்டுகளாக இருந்து வந்தன. அரங்க/பொழுதுபோக்கு சந்தையில் சமீபத்தில் குறைந்த இரைச்சல் தொழில்நுட்ப குறிப்புகளுடன் ஒலிவாங்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. Neumann மற்றும் Røde ஆகியவைகளில் இருந்து சில இவ்வாறான ஒலிவாங்கி மாதிரிகள் வெளியாகி உள்ளளன. இவை இரைச்சல் அளவுகள் 5-7 dBA வரையில் இருப்பதாக விளம்பரப்படுத்துகின்றன.

மொத்த அனுச்சுர உருத்திரிபின் குறிப்பிட்ட மதிப்புகளுக்கு, ஓர் ஒலிவாங்கி தாங்கக்கூடிய அதிகபட்ச SPL (ஒலி அழுத்த அளவு) அளவு மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது பொதுவாக 0.5 சதவீதமாக இருக்கும். இந்தளவு உருத்திரிபு பொதுவாக கேட்கக்கூடியதாக இருப்பதில்லை. ஆகவே இந்த எஸ்.பீ.எல். அளவுகளில், ஒலிவாங்கியை ஒருவரால் பாதுகாப்பாக, ஒலிப்பதிவில் எந்த பாதிப்பும் இல்லாமல், பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக: "0.5% THD-ல் அதிகபட்சம் 142 dB SPL" இருக்கும். அதிகபட்சமாக மிக உயர்ந்த எஸ்.பீ.எல். உடன் கூடிய ஒலிவாங்கிகள் தானே உயர்ந்த இரைச்சலைக் கொண்டிருக்கும் என்ற போதினும், இதன் மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஒலிவாங்கியின் தன்மை சிறப்பாக இருக்கும்.

ஒருவகையில், நறுக்கு அளவு அதிகபட்ச பயன்பாட்டு அளவின்[சான்று தேவை] குறியீடாக இருக்கிறது. ஒலிவாங்கிகளில் இருந்து வரும் அனுச்சுர உருத்திரிபு பொதுவாக குறைந்த-மட்ட அளவில் இருக்கும் என்பதால், மிக குறைந்த கேட்கும் ஒலியளவுகளே இருக்கும். மற்றொருபுறம், இடைபடலத்தை நகர்த்தும் அளவிற்கு அதன் நறுக்கு இருக்குமேயானால், அது சப்தமான ஒலியை அதிகபட்சமாக எழுப்பிவிடும். இதை சாத்தியப்பட்ட அளவிற்கு குறைத்து விட வேண்டிய தேவை இருக்கும். சில ஒலிவாங்கிகளில் நறுக்கு அளவு அதிகபட்ச ஒலி அழுத்த அளவைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

ஓர் ஒலிவாங்கியின் ஆற்றல்மிகு அளவுவிகிதம் என்பது, இரைச்சல் தளத்திற்கும் அதிகபட்ச ஒலி அழுத்த அளவிற்கும் இடையிலான ஒலி அழுத்த அளவிலிருக்கும் வேறுபாடாகும்.

ஓர் ஒலிவாங்கியானது, ஒலி அழுத்தத்தை எந்தளவிற்கு வெளியீட்டு மின்னழுத்தமாக மாற்றி அளிக்கிறது என்பதை உணர்திறன் குறிக்கிறது. ஓர் உயர்ந்த உணர்திறன் ஒலிவாங்கியானது, அதிக மின்னழுத்தத்தை உருவாக்கும். ஆகவே ஒலிக்கலவை அல்லது ஒலிப்பதிவு சாதனத்தில் குறைந்த ஒலிபெருக்கமே தேவைப்படுகிறது. இதுவொரு நடைமுறை பிரச்சினையாக இருக்கிறதே தவிர, நேரடியாக ஒலிவாங்கியின் தரத்தை எடுத்துக்காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவாக இரண்டு அளவீடுகள் உள்ளன. சர்வதேச தரமுறையானது, 1 கிலோ ஹெர்ட்ஸில் ஒரு பாஸ்கெலுக்கு இத்துணை மில்லிவோல்டுகள் என்று குறிப்பிடுகிறது. இதன் உயர்ந்த மதிப்பு உயர்ந்த உணர்திறனைக் குறிக்கும். பழைய அமெரிக்க முறையில், ஒரு பாஸ்கெலுக்கு ஒரு மின்னழுத்தம் (1 V/Pa) என்ற தரமுறையில் குறிக்கப்பட்டது. இதில் வெறும் டெசிபில் அலகுகளில் அளவிடப்பட்டது. இதனால் இதிலிருந்து கிடைக்கும் மதிப்பு எதிர்மறையாக இருந்தது. இதிலும், ஓர் உயர்மதிப்பு சிறந்த உணர்திறனைக் குறிக்கும். ஆகவே -60 dB என்பது -70 dB என்பதை விட உயர்ந்த உணர்திறனாகும்.

அளவீட்டு ஒலிவாங்கிகள்

தொகு

சில ஒலிவாங்கிகள் ஒலிஎழுப்பிகளைப் பரிசோதனை செய்வதற்காகவும், இரச்சல் அளவுகளை அளப்பதற்காகவுமே உருவாக்கப்படுகின்றன. இவை திருத்தஅளவுகளுக்கான ஆற்றல்மாற்றிகளாகும். பொதுவாக இவற்றுடன் திருத்தஅளவு சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்கும். இதில் அலைவரிசையோடு ஒப்பிட்டு துல்லியமான உணர்திறனைக் குறிப்பட்டிருக்கும். அளவீட்டு ஒலிவாங்கிகளின் தரம் பெரும்பாலும் "முதல் வகை", "இரண்டாம் வகை" என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த வகைப்பாடு ஒலிவாங்கியின் தொழில்நுட்ப குறிப்புகளை அடிப்படையாக கொண்டவையல்ல, மாறாக ஒலி அளவுமானிகளை அடிப்படையாக கொண்டிருக்கும்.[21] அளவீட்டு ஒலிவாங்கியின் செயல்பாட்டுத்திறனின் விளக்ககத்திற்காக ஒரு தரமுறை[22] சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அளவீட்டு ஒலிவாங்கிகள் வழக்கமாக அழுத்தத்தின் அளவீட்டு உணர்விகளாக இருக்கின்றன; அவை வட்டத்திசை பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. ஒலிச்செறிவு அல்லது ஒலியின் ஆற்றல் அளவீடுகளுக்கு அழுத்த-சாய்வு அளவீடுகள் தேவைப்படுகிறது. இது குறிப்பிடத்தக்களவில் குறைந்தபட்சம் இரண்டு ஒலிவாங்கிகளின் தொடரை அல்லது வெப்ப-கம்பி காற்றுவேகமானியைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கும்.

ஒலிவாங்கி அளவுதிருத்த நுட்பங்கள்

தொகு

ஓர் ஒலிவாங்கியைக் கொண்டு விஞ்ஞானப்பூர்வமான அளவீட்டை எடுக்க வேண்டுமானால், அதன் மதிப்புமிக்க உணர்வுத்திறன் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு பாஸ்கெலுக்கான மின்னழுத்தத்தில்) இது சாதனத்தின் ஆயுள்காலத்திற்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவீட்டு ஒலிவாங்கிகளை அளவுதிருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. சில ஒலிவாங்கி உற்பத்தியாளர்களும், சில தனியார் பரிசோதனை ஆய்வகங்களும் இந்த சேவையை அளிக்கின்றன. இங்கிலாந்தில் இருக்கும் என்.பி.எல்., ஜேர்மனியில் இருக்கும் பீ.டி.பி., அமெரிக்காவில் இருக்கும் என்.ஐ.எஸ்.டி. போன்ற தேசிய அளவீட்டு அமைப்புகளில் அனைத்து வகையான ஒலிவாங்கியின் அளவுதிருத்தத்தையும் அதன் முதன்மை தரமுறைகளோடு கண்டறிய முடியும். அளவுதிருத்தம் செய்யப்பட்ட அளவீட்டு ஒலிவாங்கிகளைக் கொண்டு பின்னர் ஒப்பீட்டு முறையில் ஏனைய ஒலிவாங்கிகளை அளவுதிருத்தம் செய்யலாம்.

பயன்பாடுகளைச் சார்ந்து, அளவீட்டு ஒலிவாங்கிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் (ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறிப்பிட்ட மாத இடைவெளியில்) பரிசோதிக்க வேண்டும்.

பிஸ்டோஃபோன் கருவி

தொகு

ஒரு பிஸ்டோஃபோன் என்பது ஓர் ஒலியியல் அளவுதிருத்தியாகும். இந்த அளவுதிருத்தம் ஓர் ஆடுதண்டைப் பயன்படுத்துகிறது. இதில் காற்று மாறாவெப்பத்தில் அழுத்தப்பட்டிருக்கும். அது வைக்கப்பட்டிருக்கும் அந்த அறையில் இருக்கும் ஒலி அழுத்த அளவை சாதனத்தின் உள் அளவுகளைக் கொண்டும், மாறாவெப்ப வாயு விதியைக் கொண்டும் கணக்கிட முடியும். இதற்கு   என்பது நிலையாக இருக்க வேண்டும்.   என்பது அந்த அறையில் இருக்கும் அழுத்தத்தைக் குறிக்கும்.   என்பது அறையின் கொள்ளளவைக் குறிக்கும்.   என்பது குறிப்பிட்ட கொள்ளளவில், குறிப்பிட்ட வெப்பத்திற்கு, நிலையான அழுத்தத்தில் இருக்கும் காற்றின் குறிப்பிட்ட வெப்ப விகிதத்தைக் குறிக்கும். பிஸ்டோஃபோன் முறை குறைந்த அலைவரிசைகளில் மட்டுமே வேலை செய்கிறது. பொதுவாக, வழக்கமான பரிசோதனை அலைவரிசை ஏறத்தாழ 250 ஹெட்ஸில் இருக்கும்.

நேர்எதிர்மை முறை

தொகு

இந்த முறையானது, ஒன்று அல்லது பல ஒலிவாங்கிகளின் நேர்எதிர்மையைச் சார்ந்திருக்கிறது. ஒரு நெருக்கமான இணையி அல்லது கட்டற்ற புலத்தில் இந்த நுட்பம் செயல்படுத்தப்படும். இதில் பயன்படுத்தப்படும், ஒலிவாங்கிகளில் ஒன்று மட்டும் நேர்எதிர்மையாக இருந்தாலே போதுமானதாகும்.

ஒலிவாங்கி வரிசையும், வரிசை ஒலிவாங்கிகளும்

தொகு

ஓர் ஒலிவாங்கி வரிசை என்பது பல ஒலிவாங்கிகள் தொடர்யிணைப்பாக செயல்படுவதாகும். இவை பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில:

குறிப்பாக, ஒரு வரிசை என்பது வட்டத்திசை ஒலிவாங்கிகளால் உருவாக்கப்பட்டிருக்கும். இது இடத்தின் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பின்னர் அவை பதிவு செய்யும் ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஒலிவாங்கியின் காற்றுத்திரைகள்

தொகு

காற்றுத்திரைகள்[note 1] ஒலிவாங்கிகளைப் பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்றால், காற்றால் அல்லது மொழியின் வல்லெழுத்துக்களால் ஒலியில் அதிர்வு ஏற்படக்கூடும். பெரும்பாலான ஒலிவாங்கிகள் அவற்றின் இடைப்படலத்தைச் சுற்றி ஓர் உள்ளார்ந்த காற்றுத்திரையைக் கொண்டிருக்கின்றன. ஒலிவாங்கியின் இடைப்படலத்திற்கு கவசம் போல, அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு பிளாஸ்டிக் திரையோ, கம்பி வலையோ வைக்கப்பட்டிருக்கும். காற்று அல்லது வேறெந்த இயந்திரத்தனமான பாதிப்புகளில் இருந்து இது பாதுகாக்கிறது. ஷூர் SM58 போன்ற சில ஒலிவாங்கிகள், கவசத்தின் பாதுகாப்புத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக, அந்த வலையின் உள்ளே மற்றொரு கூடுதலான பாதுகாப்பு அடுக்கைக் கொண்டிருக்கும். உள்அமைந்திருக்கும் ஒலிவாங்கி காற்றுத்திரைகளுக்குப் பின்னால், காற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பற்காக மேலும் மூன்று பிரிவுகள் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும்.

அனைத்து வகையான காற்றுத்திரை வகைகளிலும் இருக்கும் ஒரு குறைபாடு என்னவென்றால், இவற்றால் ஒலிவாங்கியின் உயர் அலைவரிசை பிரதிபலிப்பு ஓரளவிற்கு தடைப்படும். அதாவது, இந்த தடை பாதுகாப்பு அடுக்கின் அடர்த்தியைச் சார்ந்ததாகும். அடர்த்தி அதிகமாக இருக்கும் போது, உயர் அலைவரிசைக்கான தடையும் அதிகமாக இருக்கும்.

ஒலிவாங்கியின் மேற்பகுதிகள்

தொகு

ஒலிவாங்கியின் மேற்பரப்பு பொதுவாக மென்மையான பாலிஸ்டர் அல்லது பாலியுரிதேன் நுரையினால் செய்யப்பட்டிருக்கும். ஏனென்றால், இவை குறைந்த விலையில் கிடைப்பதுடன், இயற்கை அப்புறப்படுத்துவதற்கும் ஏற்றதாக உள்ளன. வேண்டுமானால் பொருத்திக் கொள்ள கூடிய காற்றுத்திரைகளும் கிடைக்கின்றன. ஷூர் நிறுவனத்தின் A2WS என்பது வேண்டுமானால் பொருத்திக்கொள்ளக்கூடிய காற்றுத்திரைக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றும் ஒலிவாங்கிகளில் ஒன்றான ஷூர் SM57 ஒலிவாங்கியிலும் இந்த வகை காற்றுத்திரை பயன்படுத்தப்படுகிறது.[23] பாலியுரிதேன் நுரை ஒலிவாங்கி மேற்பரப்புகளில் இருக்கும் ஒரு குறைபாடு என்னவென்றால், இவை காலப்போக்கில் அழியத் தொடங்குகின்றன. அதேபோல, காற்றுத்திரைகளின் திறந்த அறைப்பகுதிகளில் காலப்போக்கில் தூசிகளும், ஈரப்பதமும் குவிந்துவிடுவதால், உயர் அலைவரிசை இழப்பைத் தடுப்பதற்காக அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். மற்றொருபுறம், காற்றுத்திரைகளின் நன்மை என்னவென்றால், காற்றுத்திரைகளைச் சுத்தப்படுத்த ஒருவர் உடனடியாக அவற்றை மாற்றிவிட முடியும். அதிக செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளில், ஓர் ஒலிவாங்கியில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்கு, வெவ்வேறு நிறத்திலான காற்றுத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

பாப் வடிகட்டிகள்

தொகு

பாப் வடிகட்டிகள் அல்லது பாப் திரைகள் என்பவை ஒலிப்பதிவுகளின் போது வல்லெழுத்து அதிர்வைக் குறைக்க அரங்க சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாப் வடிகட்டி என்பது ஒலி ஊடுறுவக்கூடிய சல்லடைத்துணியின் ஒன்றோ அல்லது பல அடுக்குகளால் செய்யப்பட்டிருக்கும். பாப் கவசம் என்பது ஒலிவாங்கிக்கும் பேச்சாளருக்கும் இடையில் வைக்கப்படுவதாகும். பாப் வடிகட்டியை வைத்தால், பேசுபவரின் உதடுகளை ஒலிவாங்கிக்கு மிக அருகில் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பாடகர்களை அவர்களின் வல்லெழுத்துக்களை மென்மையாக உச்சரிக்கவும் அல்லது நேரடையாக காற்று ஒலிவாங்கியில்படாமல் தடுக்கவும் பயிற்றுவிக்க முடியும். இம்மாதிரியான சமயங்களில், பாப் வடிகட்டி தேவைப்படுவதில்லை.

ஒலிபெருக்கிகள் மீது எச்சில் தெறிப்பதிலிருந்தும் பாப் வடிகட்டிகள் பாதுகாக்கின்றன. பெரும்பாலான மின்தேக்கி ஒலிவாங்கிகள் எச்சில் உமிழ்வாலேயே பாதிப்படைகின்றன.

கொரம்புகள்

தொகு

இயற்கை சூழல்களில் ஒலிப்பதிவு, மின்னணு செய்திகள் சேகரிப்பு மற்றும் திரைப்பட மற்றும் ஒளிப்பட படப்பிடிப்புகள் போன்ற வெளிப்புற இடங்களில் பயன்படுத்தப்படும் ஒலிவாங்கிகளில் பெரியதாக சுற்றப்பட்ட காற்றுத்திரைகளே கொரம்புகள் ஆகும். இவை 25 dB வரையில் காற்று இரைச்சலை, குறிப்பாக குறைந்த அலைவரிசை இரச்சலைக் குறைக்கக் கூடியவை. முக்கியமாக, இந்த கொரம்பு ஒரு வெறுமையான குழாய் அல்லது கூடை போல இருக்கும். ஆனால் ஒலி ஊடுறுவக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கும். ஒலிவாங்கியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட கொள்ளளவில் நிலையான காற்றை உருவாக்குவதன் மூலம் இந்த கொரம்பு வேலைச் செய்கிறது. அதுமட்டுமின்றி, ஒலிவாங்கியானது கொரம்பிற்கும் அடுத்தபடியாக, அதை விலக்கி வைத்திருக்கும் நிலையில், ஓர் இழுப்புத்தன்மை கொண்ட அதிர்வால் பிரிக்கப்பட்டிருக்கும். இது காற்று அதிர்வுகளைக் குறைப்பதுடன், அந்த கூடையிலிருந்து வரும் இரைச்சலையும் கையாள்கிறது. வேகமான காற்று வீசும் நிலைமைகளில் கொரம்பு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. வழக்கமாக, ஒலி ஊடுறுவக்கூடிய ஒன்றாக விளங்கும் இது, மென்மையான நீண்ட ரோமங்களால் செய்யப்பட்டிருக்கும். இந்த முடிகள், கொரம்பைத் தாக்கும் எந்த காற்று வேகத்திற்கும், அதிர்வு தாங்கிகளாக செயல்படுகின்றன. இந்த மேலுரை கூடுதலாக 10 dB வரையில் காற்று இரைச்சலைக் குறைக்கும்.[24]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. ஓர் ஒலிவாங்கியின் காற்றுத்திரை ஒரு காற்று அடைப்பான் அல்லது இறந்த பூனை என்றும் சிலவேளைகளில் அழைக்கப்படுகிறது.

குறிப்புதவிகள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2007-05-22 at the வந்தவழி இயந்திரம் மின்தேக்கி ஒலிவாங்கியானது பெல் ஆய்வகத்தில் 1916ஆம் ஆண்டு ஈ.சி. வெண்டெ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. Sessler, G.M.; West, J.E. (1962). "Self-biased condenser microphone with high capacitance". Journal of the Acoustical Society of America 34: 1787–1788. doi:10.1121/1.1909130. https://archive.org/details/sim_journal-of-the-acoustical-society-of-america_1962-11_34_11/page/1787. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
  4. "AKG D 112 - Large-diaphragm dynamic microphone for bass instruments பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்"
  5. "Local firms strum the chords of real music innovation". Mass High Tech: the Journal of New England Technology. 8 February 2008. http://www.bizjournals.com/masshightech/stories/2008/02/11/story8.html. 
  6. [2] பரணிடப்பட்டது 2015-08-22 at the வந்தவழி இயந்திரம் Boudet Microphone
  7. Paritsky, Alexander; Kots, A. (1997). "Fiber optic microphone as a realization of fiber optic positioning sensors". Proc. of International Society for Optical Engineering (SPIE) 3110: 408–409. 
  8. US64,62,808 (PDF version) (2002-10-08) Alexander Paritsky and Alexander Kots, Small optical microphone/sensor. 
  9. "Case Study: Can You Hear Me Now?". rt image. Valley Forge Publishing. pp. 30–31. Archived from the original on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
  10. "MEMS Microphone Will Be Hurt by Downturn in Smartphone Market". Seeking Alpha. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
  11. "OMRON to Launch Mass-production and Supply of MEMS Acoustic Sensor Chip -World's first MEMS sensor capable of detecting the lower limit of human audible frequencies-". பார்க்கப்பட்ட நாள் 2009-11-24.
  12. Bartlett, Bruce. "How A Cardioid Microphone Works". Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-08.
  13. History & Development of Microphone. பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம் Lloyd Microphone Classics
  14. Proximity Effect. பரணிடப்பட்டது 2007-10-16 at the வந்தவழி இயந்திரம் Geoff Martin, Introduction to Sound Recording .
  15. (US 4361736 )
  16. Crown Audio.Tech Made Simple.
  17. 17.0 17.1 சர்வதேச தரமுறை IEC 60268-4
  18. Eargle, John (2002). Audio Engineering for Sound Reinforcement. Milwaukee: Hal Leonard Corporation. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0634043552. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-28. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
  20. Robertson, A. E.: "Microphones" Illiffe Press for BBC, 1951-1963
  21. IEC Standard 61672 and/or ANSI S1.4
  22. IEC 61094
  23. "Shure - Accessories - A2WS Microphone Windscreens". Archived from the original on 2008-05-11. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
  24. Full Windshield Kits. பரணிடப்பட்டது 2010-05-04 at the வந்தவழி இயந்திரம் Rycote Microphones. மே 10, 2007-இல் பெறப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Microphones
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவாங்கி&oldid=3731147" இலிருந்து மீள்விக்கப்பட்டது