ஒல்லையூர்

ஒல்லையூர் நாடு என்பது ஒல்லையூரைத் தலைநகராகக் கொண்டது. இக்காலத்தில் திருமெய்யம் வட்டத்தில் உள்ள ஒலியமங்கலம் சங்ககால ஒல்லையூர். இது பாண்டிய நாட்டின் வடவெல்லையான வெள்ளாற்றின் தென்கரையில் இருந்தது. [1] இந்த ஒல்லையூரைச் சங்ககாலத்தில் சிலகாலம் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஆண்டு வந்தான். ஒருமுறை சோழ அரசர்களால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு ஒரு பாண்டிய அரசன் இந்நாட்டைக் கைப்பற்றினான்.

பூதப்பாண்டியன்

இந்நாட்டைப் பூதப்பாண்டியன் என்ற அரசன் வென்றதால் அவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனப் போற்றப்படுகிறான்.[2]

மேற்கோள்தொகு

  1. புறம் - 242 உ. வே. சாமிநாதய்யர் எழுதிய புறநானூறு உரை
  2. புறம் - 71
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லையூர்&oldid=1977193" இருந்து மீள்விக்கப்பட்டது