ஒழுகு வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

ஒழுகு வண்ணம் என்பது செய்யுளின் ஓசை ஒழுகுதல். ஒழுகுதல் என்பது ஆற்றில் நூர் ஒழுகுவது போல ஒழுகும் நடையோட்டம். இதனை யாற்றுநீர் பொருள்கோள் எனவும் கூறுவர்.

அம்ம வாழி தோழி காதலர்
இல்முன் பனிக்கும் இன்னா வாடையொடு
புன்கண் மாலை அன்பின்று கழிய
உய்யலள் இவளென உணரச் சொல்லி
சொல்லுநர்ப் பெறினே செய்ய வல்ல
இன்அளி இறந்த மன்னவர்
பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே. [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழுகு_வண்ணம்&oldid=1114575" இலிருந்து மீள்விக்கப்பட்டது