ஓகோவர்
ஓகோவர் (Oakover) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்கதொரு கட்டிடம் ஆகும். சிம்லாவில் கட்டப்பட்ட ஆரம்பகால வீடுகளில் இதுவும் ஒன்று. இமாச்சல பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமுமாகும். [1]
ஓகோவர் Oakover | |
---|---|
ஓகோவரின் நுழைவு வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | பெம்லோ |
நகரம் | சிம்லா |
நாடு | இந்தியா |
தற்போதைய குடியிருப்பாளர் |
வரலாறு
தொகுஒரு பிரித்தானிய காலகட்ட கட்டிடமான ஓகோவர் முன்பு முன்னாள் பாட்டியாலா மாநிலத்தின் மகாராசாக்களின் வசிப்பிடமாக இருந்தது. [2]
ஓகோவர் கல்லறை 1828 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. சிம்லாவில் உள்ள பழமையான பிரித்தானியர் கால கல்லறையாக இது கருதப்படுகிறது. 1841 ஆம் ஆண்டு வரை இக்கல்லறை பயன்பாட்டில் இருந்தது, பின்னர் இது பழுதடைந்து புறக்கணிக்கப்பட்டது. [3] [4]
கலை மற்றும் பிரபலமான கலாச்சாரத்தில்
தொகுபிரித்தானிய புகைப்படக் கலைஞர் சாமுவேல் பார்ன் 1863 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அவர் சிம்லாவுக்குச் சென்று, ஓகோவரில் இருந்தும் சிம்லாவிலிருந்தும் பல புகைப்படங்களை எடுத்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Oakover' receives CM". The Tribune. 1 Jan 2018. http://www.tribuneindia.com/news/himachal/-oakover-receives-cm/521674.html.
- ↑ "Oakover Shimla – A Jinxed Building | Hill Post". hillpost.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-24.
- ↑ "A requiem for dead at Himachal's cemeteries | Hill Post". hillpost.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
- ↑ "British organization offers help to restore cemeteries | UCAN India". india.ucanews.com. Archived from the original on 2018-04-09. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.