ஓங்கி ஆறு (மொங்கோலியம்: Онги гол) ஓவர்கன்காய் மாகாணத்தின் கன்காய் மலைகளின் தென்கிழக்கு சரிவுகளில் இருந்து பாய்கிறது. 435 கிலோமீட்டர் (270 மைல்கள்) நீளமுள்ள மங்கோலியாவின் வடிநிலத்தில் பாய்கின்றது. இந்த ஆறு சில குறிப்பாக மழை அதிகமுள்ள ஆண்டுகளில், இது வட மத்திய அம்னகோவி மாகாணத்தில் உள்ள உலான் ஏரியில் வடிகிறது. பெரும்பாலான ஆண்டுகளில் உலான் ஏரியை அடையும் முன்பே வறண்டுவிடுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இது கூடுதலாக 37 சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, ஆனால் செட்ஸ்கீஜின் மாங்க்பாயர் மற்றும் ஓங்கி நதி படுகை இயக்கம் ஆகியவற்றின் வெற்றிகரமான அழுத்தத்தின் காரணமாக பிராந்தியத்தில் ஆய்வுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் 35 நடவடிக்கைகளை நிறுத்த உதவியது.[1] இந்தப் பகுதியில் உள்ள மேற்பரப்பு நீர் நிலத்தடி நீர் சுரங்கத் தொழிலில் இருந்து வரும் பாதரசம் மற்றும் சயனைடுகளால் மாசுபடுத்தப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. [2]

ஓங்கி நதி

குறிப்புகள்

தொகு
  1. April 23, 2007. ‘Earth Day in Mongolia: Onggi River Movement Receives Award’, Mongolia-Web.com பரணிடப்பட்டது 2017-12-22 at the வந்தவழி இயந்திரம்
  2. Lovgren S. 2008. ‘Mongolia gold rush destroying rivers, nomadic lives. National Geographic News’. Accessed Nov 4th 2008 at National Geographic News
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓங்கி_ஆறு&oldid=3421267" இலிருந்து மீள்விக்கப்பட்டது