ஒசுமியம் ஐம்புளோரைடு
வேதிச் சேர்மம்
(ஓசுமியம் பெண்டாபுளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓசுமியம் ஐம்புளோரைடு (Osmium pentafluoride) என்பது OsF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலப்பச்சை நிறத்தில் ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. ருபீடியம், ரோடியம், இரிடியம் தனிமங்களின் ஐம்புளோரைடுகள் போல ஓசுமியம் ஐம்புளோரைடும் திண்மநிலையில் நான்குறுப்பு சேர்மமாக காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
31576-40-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15797581 |
| |
பண்புகள் | |
F5Os | |
வாய்ப்பாட்டு எடை | 285.22 g·mol−1 |
தோற்றம் | நீலப்பச்சை திண்மம் |
உருகுநிலை | 70 °C (158 °F; 343 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஓசுமியம் அறுபுளோரைடை அயோடினில் கரைத்த அயோடின் பெண்டாபுளோரைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி ஓசுமியம் ஐம்புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[1]
- 10 OsF6 + I2 → 10 OsF5 + 2 IF5
மேற்கோள்கள்
தொகு- ↑ Holloway, John H.; Mitchell, S. J. (1971). "Preparation and Crystal Structure of Osmium Pentafluoride". Journal of the Chemical Society: 2789–94. doi:10.1039/J19710002789.