ஓசோன் நீர்வீழ்ச்சி

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் உள்ள ஓர் நீர்வீழ்ச்சி

ஓசோன் நீர்வீழ்ச்சி (Ozone Falls) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான டென்னசி மாநிலத்திலுள்ள கம்பர்லேண்டு மாகாணத்தில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட ஓசோன் நீர்வீழ்ச்சி மாநில இயற்கை பகுதிக்கும் கம்பர்லேண்டு மாநில பூங்காவுக்கும் இடையில் ஒரு சிற்றோடையில் ஓசோன் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கில் கிராப் ஆர்ச்சார்டு நகர மலைப்பகுதிக்கும் கிழக்கில் வால்டென் மலைத்தொடருக்கும் இடையில் இருக்கும் கம்பர்லேண்டு பீடபூமியின் சிறு பகுதியில் இச்சிற்றோடை பாய்ந்து வடிகிறது. பின்னர் கிராப் ஆர்ச்சர்டு நகர மலையிலுள்ள அதன் மூலத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு சிற்றோடை கீழ்நோக்கி பாய்கிறது அல்லது ஓசோன் நீர்வீழ்ச்சிக்குள் நுழைந்து நிலைபெறுவதற்கு முன்பு இவ்வாறு குதிக்கிறது. அமெரிக்க பாதை 70 இன் கீழ் சென்றபின் இந்நீர்வீழ்ச்சி மாநில இயற்கை பகுதிக்குள் நுழைகிறது. இப்பாதைக்கு தெற்கில் சில நூறு மீட்டர்கள் ஓடியபின் ஓசோன் நீர்வீழ்ச்சியின் மீது சிற்றோடை பரவி கலக்கிறது. [2]

ஓசோன் நீர்வீழ்ச்சி
Ozone Falls
ஓசோன் நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்டென்னசி, கம்பர்லேண்டு மாகாணம்
ஆள்கூறு35°52′50″N 84°48′36″W / 35.88045°N 84.81001°W / 35.88045; -84.81001[1]
வகைமுழுகுதல்
மொத்த உயரம்110 அடிகள் (34 m)[1]
நீர்வழிசிற்றோடை இறக்கம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Dunigan, Tom. "Ozone Falls 110'". Tennessee landforms. பார்க்கப்பட்ட நாள் May 10, 2017. 35.88045, -84.81001
  2. Roark, Kelley (1996). Hiking Tennessee. Helena, Mont.: Falcon. பக். 158–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56044-394-0. https://archive.org/details/hikingtennessee00roar/page/158. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசோன்_நீர்வீழ்ச்சி&oldid=3080251" இலிருந்து மீள்விக்கப்பட்டது