ஓம்பாய் நீரிணை

ஓம்பாய் நீரிணை (ஆங்கிலம்: Ombai Strait; இந்தோனேசியம்: Selat Ombai; போர்த்துகீசியம்: Estreito de Ombai; தேதுனம்: Estreitu Ombai;) என்பது சுந்தா சிறு தீவுகளின் பகுதிகளான வெத்தார் (Wetar), அத்தாவுரோ (Atauro), தீமோர் (Timor) ஆகியவற்றில் இருந்து; அலோர் (Alor Archipelago) தீவுக் கூட்டங்களைப் பிரிக்கும் நீரிணை ஆகும்.

ஓம்பாய் நீரிணை
Ombai Strait
Selat Ombai
கிழக்கு திமோர் ஐ பெலோ சிறையில் இருந்து ஓம்பாய் நீரிணை
அமைவிடம் தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8°30′00″S 125°00′00″E / 8.50000°S 125.00000°E / -8.50000; 125.00000
வகைநீரிணை
சொற்பிறப்புஅலோர் தீவு; ஓம்பாய் தீவு
Part ofபண்டா கடல்
வடிநில நாடுகள்இந்தோனேசியா
கிழக்கு தீமோர்
குறைந்தபட்ச அகலம்27 km (17 mi)
குடியேற்றங்கள்டிலி
மேற்கோள்கள்Ombai Strait: Timor-Leste National Geospatial-Intelligence Agency, Bethesda, MD, USA

இந்த நீரிணை வடக்கில் உள்ள பண்டா கடலையும், தென்மேற்கில் உள்ள சாவு கடலையும் (Savu Sea) இணைக்கிறது. வெத்தார் தீவு, இந்தோனீசியாவின் மலுக்கு மாகாணத்தைச் சேர்ந்தது.

அலோர் தீவுக் கூட்டமும், மேற்கு திமோரும், இந்தோனேசியாவின் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தைச் சேர்ந்தவை. அத்தாவுரோவும், கிழக்குத் திமோரும் கிழக்குத் திமோர் நாட்டுக்கு உரியவை.[1] மலாக்கா நீரிணை வழியாகச் செல்ல முடியாத பெரிய கப்பல்கள் செல்வதற்கான ஒரு மாற்று வழியாகவும் இந்த ஓம்பாய் நீரிணை செயல்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Molcard, R.; Fieux, M.; Syamsudin, F. (2001). "The throughflow within Ombai Strait". Deep Sea Research Part I: Oceanographic Research Papers 48 (5): 1237. doi:10.1016/S0967-0637(00)00084-4. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்பாய்_நீரிணை&oldid=4229021" இலிருந்து மீள்விக்கப்பட்டது