ஓருனெதியித்தெப்பு

ஓர்னெட்யித்தெஃபு (Hornedjitef) என்பவர், பண்டை எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச பார்வோன் மூன்றாம் தாலமியின் ஆட்சிக் காலத்தில் (கிமு 246-222) கர்னக் நகரத்தில் இருந்த அமுன் கோயிலின் மதகுரு ஆவார். இவர் எகிப்தின் தீபை நகரத்தின் அசாசிஃப் பகுதியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, தொடக்க தொலமியர் காலத்து வேலைப்பாடுகளுடன் கூடிய கல் சவப்பெட்டி, மரச்சவப் பெட்டி, மம்மி, மம்மியின் முகமூடி போன்றவற்றின் மூலமாக அறியப்பட்டவர். இத்தொல்பொருட்கள் இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளன.[1][2][3] 2010 ஆம் ஆண்டில், பிரித்தானிய அருங்காட்சியகமும், பிபிசியும் இணைந்து செயற்படுத்திய "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் திட்டத்தில், உலக வரலாற்றைக் கூறுவதற்காக முதலாவதாகத் தெரியப்பட்டவை இப்பொருட்களே.[4]

ஓர்னெட்யித்தெஃபுவின் உள் பிணப்பெட்டியின் மேற்பகுதி.

மேற்சொன்ன பொருட்களுடன், இவரது கல்லறையில் வேறு பல பொருட்களும் காணப்பட்டன. இவற்றுள் பாபிரஸ் தாளில் எழுதிய இறந்தோர் நூல்,[5] இப்தா-சோக்கர்-ஒசிரிசுவின் நிறந்தீட்டிய மரச்சிலையும் அடங்கும்.

குறிப்புகள் தொகு

  1. "Outer coffin of the priest Hornedjitef". British Museum. Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  2. "Mummy of Hornedjitef › The British Museum". Britishmuseum.org. Archived from the original on 2010-01-23. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  3. "Mummy mask of Hornedjitef". British Museum. Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  4. John Taylor, Curator, British Museum. "A History of the World - Object: Mummy of Hornedjitef". BBC. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. "Search object details". British Museum. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓருனெதியித்தெப்பு&oldid=3621993" இலிருந்து மீள்விக்கப்பட்டது