ஓல்மியம்(III) ஆக்சலேட்டு
வேதிச் சேர்மம்
ஓல்மியம்(III) ஆக்சலேட்டு (Holmium(III) oxalate) என்பது Ho2(C2O4) 3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் ஆக்சலேட்டு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் நீரிலி மற்றும் நீரேற்று என இரண்டு வடிவங்களிலும் காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
3269-15-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
| |
பண்புகள் | |
Ho2(C2O4)3 | |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் (எழுநீரேற்று) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுஓல்மியம்(III) ஆக்சலேட்டு பத்துநீரேற்று சேர்மத்தை சூடுபடுத்தினால் வெப்பத்தில் சிதைந்து தொடர்புடைய இருநீரேற்று உருவாகிறது. நீரற்ற வடிவத்தைப் பெற மேலும் தொடர்ந்து சூடேற்றப்படுகிறது. வினையின் இறுதியாக ஓல்மியம்(III) ஆக்சைடு பெறப்படுகிறது.[1] இது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து H[Ho(C2O4)2]·6H2O என்ற அறுநீரேற்றைக் கொடுக்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700.
- ↑ Moebius, R.; Matthes, F. (1964). "The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium". Zeitschrift für Chemie 4 (6): 234–235.