ஓவன் சேம்பர்லேன்

ஓவன் சேம்பர்லேன் (Owen Chamberlain, சூலை 10, 1920 – பெப்ரவரி 28, 2006) அமெரிக்க இயற்பியலறிஞர் ஆவார். அணுவடி இதிர்த்துகள்களில் ஒன்றான எதிர் புரோத்தனைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும் எமீலியோ சேக்ரே என்பவருக்கும் 1959 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]

ஓவன் சேம்பர்லேன்
Owen Chamberlain
பிறப்பு(1920-07-10)சூலை 10, 1920
சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 28, 2006(2006-02-28) (அகவை 85)
பெர்க்கிலி, கலிபோர்னியா
தேசியம்ஐக்கிய அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லாசு அலாமொசு தேசிய ஆய்வுகூடம்
கல்வி கற்ற இடங்கள்டார்ட்மவுத் கல்லூரி
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
சிக்காகோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்என்ரிக்கோ பெர்மி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜான் கூத்
அறியப்படுவதுதுகள் இயற்பியல்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1959

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ஓவன் சேம்பர்லேன், டார்ட்மவுத் கல்லூரியில் இயற்பியல் படித்தார். பின்னர் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தார். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில் 1942 இல் மன்காட்டன் திட்டத்தில் இணைந்தார்.[2] போருக்குப் பின்னர், 1946 இல் பிரபல இயற்பியலாளர் என்ரிக்கோ பெர்மியின் கீழ் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படித்து,[3] 1949 இல் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

1985 இல் சேம்பர்லேன் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, 1989 இல் இளைப்பாறினார். 2006 பெப்ரவரி 28 இல், பெர்க்கிலியில் தனது 85-வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவன்_சேம்பர்லேன்&oldid=3536493" இலிருந்து மீள்விக்கப்பட்டது