ஓ. இ. ஆர். எம். அரசு மேல்நிலைப் பள்ளி, பாகனேரி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி
ஓ. இ. ஆர். எம். அரசு மேல்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், பாகனேரி சிற்றூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் பாகனேரி, காடனேரி, அம்மன்பட்டி, நடராஜபுரம், கொட்டாப்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றுவருகின்றனர். 1965இல் துவக்கப்பட்ட இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. இங்கு 2019 காலக்கட்டத்தில் 18 ஆசிரியர்களும் 200 மாணவர்களும் பயின்றுவருகின்றனர். இப்பள்ளிக்கு 15 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ இ. ஜெகநாதன் (8 ஆகத்து 2019). "ஏசியுடன் கூடிய ஸ்மாட் வகுப்பறை ஒரே ஆண்டில் நவீனமயமான கிராம்ப்புற அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், மக்கள் பங்களிப்புடன் சாத்தியமாக்கிய ஆசிரியர்". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2019.