ஓ. எஸ். மணியன்
இந்திய அரசியல்வாதி
ஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.[2] இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சார்ந்த அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
ஓ. எஸ். மணியன் | |
---|---|
பிறப்பு | 29 ஏப்ரல் 1954[1] ஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு[1] |
இருப்பிடம் | நாகப்பட்டினம் & புது தில்லி, இந்தியா[1] |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | காதர் மொகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம், தமிழ்நாடு[1] |
பணி | அரசியல்வாதி, விவசாயி |
செயற்பாட்டுக் காலம் | 1995 - முதல் |
சொந்த ஊர் | ஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[1] |
பெற்றோர் | சோமுத்தேவர் (தந்தை) & காசாம்பு அம்மாள் (தாய்)[1] |
வாழ்க்கைத் துணை | கலைச்செல்வி [1] |
பிள்ளைகள் | 02 |
கல்விதொகு
மணியன் இளங்கலை சட்டம் பயின்றுள்ளார்
வகித்த பதவிகள்தொகு
# | தொடக்கம் | வரை | பதவி |
---|---|---|---|
1 | 1995 | 2001 | உறுப்பினர், ராஜ்ய சபா |
2 | 2009 | 2014 | உறுப்பினர், 15வது மக்களவை |
3 | 31 ஆகத்து 2009 | 30 ஏப்ரல் 2014 | உறுப்பினர், வர்த்தகக் குழ |
4 | 31 ஆகத்து 2009 | 30 ஏப்ரல் 2014 | உறுப்பினர், மின்சாரக் குழு |
5 | 23 செப்டம்பர் 2009 | 30 ஏப்ரல் 2014 | உறுப்பினர், சட்டக் குழு |
6 | 2016 | 23 மே 2016– தற்போது | உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் |
7 | 2016 | 23 மே 2016–தற்போது | அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை |
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Biography". Lok Sabha Website. Archived from the original on 2013-02-01. https://web.archive.org/web/20130201160314/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4550.
- ↑ "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 31. 31 மே 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.