கஃப் விட்லம்

எட்வேர்ட் கஃப் விட்லம் (Edward Gough Whitlam, சூலை 11, 1916 - அக்டோபர் 21, 2014) ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் உதவித் தலைவரான விட்லம், 1967 ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். அப்போது அவரது கட்சி எதிரணியில் இருந்தது.

கஃப் விட்லம்
Gough Whitlam
Gough Whitlam 1962.jpg
ஆத்திரேலியாவின் 21வது பிரதமர்
தேர்தல்கள்: 1969, 1972, 1974, 1975, 1977
பதவியில்
5 டிசம்பர் 1972 – 11 நவம்பர் 1975
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் சேர் பவுல் ஆசுலக்
சேர் ஜான் கெர்
துணை லான்சு பார்னார்ட்
ஜிம் கேர்ன்சு
பிராங்க் கிறீன்
முன்னவர் வில்லியம் மெக்மாகான்
பின்வந்தவர் மால்கம் பிரேசர்
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
5 டிசம்பர் 1972 – 6 நவம்பர் 1973
பிரதமர் கஃப் விட்லம்
முன்னவர் நைஜல் போவன்
பின்வந்தவர் டொன் வெலெசி
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
11 நவம்பர் 1975 – 22 டிசம்பர் 1977
துணை பிராங்க் கிறீன்
டொம் ஊரன்
முன்னவர் மால்கம் பிரேசர்
பின்வந்தவர் பில் ஹெய்டன்
பதவியில்
9 பெப்ரவரி 1967 – 5 டிசம்பர் 1972
துணை லான்சு பார்னார்ட்
முன்னவர் ஆர்தர் கால்வெல்
பின்வந்தவர் பிலி சினெடன்
தொழிற்கட்சித் தலைவர்
பதவியில்
9 பெப்ரவரி 1967 – 22 டிசம்பர் 1977
துணை லான்சு பார்னார்ட்
ஜிம் கேர்ன்ஸ்
பிராங்கி கிறீன்
டொம் ஊரன்
முன்னவர் ஆர்தர் கால்வெல்
பின்வந்தவர் பில் ஹெய்டன்
தனிநபர் தகவல்
பிறப்பு எட்வர்ட் கஃப் விட்லம்
சூலை 11, 1916(1916-07-11)
கியூ, மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
இறப்பு 21 அக்டோபர் 2014(2014-10-21) (அகவை 98)
எலிசபெத் குடா, சிட்னி, ஆத்திரேலியா
அரசியல் கட்சி தொழிற்கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மார்கரெட் விட்லம்
பிள்ளைகள் டொனி
நிக்கொலாசு
ஸ்டீவன்
கேத்தரின்
படித்த கல்வி நிறுவனங்கள் சிட்னி பல்கலைக்கழகம்
தொழில் பார் அட் லா
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு ஆத்திரேலியப் பொதுநலவாயம்
கிளை ரோயல் ஆத்திரேலிய வான்படை
பணி ஆண்டுகள் 1941–1945
தர வரிசை RAAF O3 rank.png Flight Lieutenant
படையணி No. 13 Squadron RAAF
சமர்கள்/போர்கள் இரண்டாம் உலகப் போர்

1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி தோல்வ்வியடைந்தது. எனினும் விட்லமின் தலைமையில் 1972 தேர்தலில் 23 ஆண்டுகளின் பின்னர் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 1975 ஆம் ஆண்டில் எழுந்த அரசியலமைப்புப் பிரச்சினையை அடுத்து ஆஸ்திரேலிய பொது-ஆளுநர் ஜோன் கேர் இவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். அரசு கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றை செனட் அவைக்கு வாக்கெடுப்புக்கு விடுவதற்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆஸ்திரேலிய லிபரல் கட்சி தடுத்ததை அடுத்து, ஆளுநர் விட்லமை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்தது. ஆளுநர் ஒருவரினால் அவரது சிறப்பு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் இவரே ஆவார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஃப்_விட்லம்&oldid=3627286" இருந்து மீள்விக்கப்பட்டது