கக்குவான் தடுப்பூசி

கக்குவான் தடுப்பூசி (Pertussis vaccine) என்பது தொடர் இருமலிலிருந்து[1] காக்கும் தடுப்பூசியாகும். இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: முழு செல் தடுப்பூசிகள் மற்றும் அசெல்லுலர் தடுப்பூசிகள்.[2] முழு செல் தடுப்பூசி சுமார் 78% பயனுள்ளதாக இருக்கும், அதே நேரத்தில் திசுவற்ற (அசெல்லுலர்) தடுப்பூசி 71-85% பயனுள்ளதாக இருக்கும்.[3][4] தடுப்பூசிகளின் செயல்திறன் ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 10% வரை குறைகின்றன, அசெல்லுலர் தடுப்பூசிகளின் திறன் மிகவும் வேகமாகக் குறைகிறது. கர்ப்பக் காலத்தில் தடுப்பூசி போடுவது குழந்தையைப் பாதுகாக்கும்.[5] இந்தத் தடுப்பூசி 2002 ஆம் ஆண்டில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6]

கக்குவான் தடுப்பூசி
Vaccine description
Target disease Bordetella pertussis
வகை ?
மருத்துவத் தரவு
மெட்லைன் ப்ளஸ் a682198
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?-only (அமெரிக்கா) ? Prescription only
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07AJ01 J07AJ02 J07AJ51 J07AJ52
ChemSpider none N

அனைத்துக் குழந்தைகளுக்கும் கக்குவான் தடுப்பூசி போட வேண்டும் என்றும், அது வழக்கமான தடுப்பூசிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் பரிந்துரைக்கின்றன.[7][8] எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு இது போடப்பட வேண்டும். பிறந்த ஆறு வார காலத்தில் தொடங்கி மூன்று முறை தடுப்பூசி போடுவது இளம் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் கூடுதல் அளவு கொடுக்கப்படலாம். இந்தத் தடுப்பூசியானது பிற தடுப்பூசிகளுடன் இணைந்து மட்டுமே கிடைக்கிறது.[9]

குறைவான பக்கவிளைவுகளின் காரணமாக வளர்ந்த நாடுகளில் அசெல்லுலர் தடுப்பூசிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. முழு செல் தடுப்பூசிகள் போடப்பட்ட 10 முதல் 50% நபர்களுக்கு ஊசி போட்ட இடத்தில் சிவத்தலும் காய்ச்சலும் ஏற்படுகிறது. காய்ச்சலுக்குரிய வலிப்பு மற்றும் நீண்ட நேர அழுகை ஆகியவை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நிகழ்கின்றன. அசெல்லுலர் தடுப்பூசிகளால் கையின் தீவிரமற்ற வீக்கம் கொஞ்சம் நேரம் ஏற்படலாம். இரண்டு வகையான தடுப்பூசிகளிலும் பக்க விளைவுகள் ஏற்படலாம், எனினும் குறிப்பாக முழு செல் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குழந்தைக்குக் குறைவாக இருக்கும். ஆறு வயதுக்குப் பிறகு முழு செல் தடுப்பூசிகளைப் பயன்படுத்தக்கூடாது. கடுமையான நீண்ட கால நரம்பியல் பிரச்சினைகளுடன் இரண்டு வகைகளுக்கும் தொடர்பு இல்லை.[10]

கக்குவான் தடுப்பூசி 1926 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[11] இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது, இது ஓர் அடிப்படை சுகாதார அமைப்பில் தேவைப்படும் மிக முக்கியமான மருந்தாகும்.[12] 2014 நிலவரப்படி டெட்டனஸ், டிப்தீரியா, போலியோ மற்றும் ஹிப் தடுப்பூசி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு கொண்ட ஒரு டோசுக்கு 15.41 அமெரிக்க டாலர் செலவாகும்.[13]

குறிப்புகள்தொகு

 1. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 2. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 3. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 4. Zhang, L; Prietsch, SO; Axelsson, I; Halperin, SA (Sep 17, 2014). "Acellular vaccines for preventing whooping cough in children.". The Cochrane Database of Systematic Reviews 9: CD001478. doi:10.1002/14651858.CD001478.pub6. பப்மெட்:25228233. 
 5. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 6. "Annex 6 whole cell pertussis" (PDF). World Health Organization. 5 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 8. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 9. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 10. "Pertussis vaccines: WHO position paper - September 2015.". Wkly Epidemiol Rec 90 (35): 433-58. 2015 Aug. பப்மெட்:26320265. http://www.who.int/wer/2015/wer9035.pdf. 
 11. Macera, Caroline (2012). Introduction to Epidemiology: Distribution and Determinants of Disease. Nelson Education. பக். 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781285687148. https://books.google.ca/books?id=U8FuCgAAQBAJ&pg=PA251. 
 12. "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. 22 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Vaccine, Pentavalent". International Drug Price Indicator Guide. 25 ஜனவரி 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 December 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்குவான்_தடுப்பூசி&oldid=3547285" இருந்து மீள்விக்கப்பட்டது