கச்சபகத வம்சம்

மத்திய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் ஆட்சி செய்த வம்சம்

கச்சபகத வம்சம் (Kachchhapaghata dynasty) என்பது 10 -12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த ஒரு இந்திய வம்சமாகும்.[2] மத்திய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் (இன்றைய மத்தியப் பிரதேசம் ) இவர்கள் ஆட்சி செய்தனர். இவ்வம்சத்தின் மன்னர் மகிபாலன் 1093இல் சாஸ்பாகு கோயில் கட்டினார்.

Map
Find spots of the Kachchhapaghata inscriptions[1]

வரலாறு தொகு

சமசுகிருத வார்த்தையான கச்சப-கதா (कच्छपघात) என்பதன் அர்த்தம் "ஆமைக் கொலையாளி" என்பதாகும்.[3] கச்சபகதர்கள் முதலில் பிரதிகாரர்கள் மற்றும் சந்தேலர்களின் அடிமைகளாக இருந்தனர். [4] சந்தேல மன்னன் வித்யாதரன் இறந்த பிறகு, மீண்டும் மீண்டும் முஸ்லிம் ( கசனவித்துகள் ) படையெடுப்புகளால் சந்தேல இராச்சியம் பலவீனமடைந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, கச்சபகதர்கள் சந்தேலர்களிடம் தங்கள் விசுவாசத்தைக் கைவிட்டனர். [5] பின்னர், இவர்கள் 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சக்தி வாய்ந்தவர்களாக மாறினர். [4]

சாஸ்பாகு கோவில் கல்வெட்டு, இலட்சுமணன் என்பவரை வம்சத்தின் முதல் முக்கிய உறுப்பினர் என்று கூறுகிறது. இந்தக் கல்வெட்டும், பொ.ச.977 தேதியிட்ட சிஹோனியா கல்வெட்டும் அவரது வாரிசான வஜ்ரதாமன் கன்னோசி பிரதிகார ஆட்சியாளரான காதிநகர அரசனிடமிருந்து கோபாத்ரியை (குவாலியர்) கைப்பற்றியதாகக் கூறுகிறது. [6] 1093-94 மற்றும் 1104 தேதியிட்ட குவாலியர் கல்வெட்டுகளில் வம்சத்தின் திலகமாக விவரிக்கப்படும் வஜ்ரதாமன், வம்சத்தின் முதல் சக்திவாய்ந்த ஆட்சியாளராக இருக்கலாம். இவர் சந்தேல மன்னர்களான தங்கன் மற்றும் வித்யாதரன் ஆகியோருக்கு நிலப்பிரபுவாக பணியாற்றினார். [7]

குவாலியர் (கோபாத்ரிகிரி), துப்குந்தா (சந்தோபா) மற்றும் நார்வார் (நளபுரம்) ஆகிய இடங்களிலிருந்து ஆட்சி செய்த வம்சம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டது. [8] நளபுரத்தின் கச்சபகத ஆட்சியாளரான வீரசிம்மன் (வீரசிம்மராமன் அல்லது வீரசிம்மதேவன்) 1120-21 தேதியிட்ட செப்புத் தகட்டில் மானியத்தை வழங்கியதாகத் தெரிவிக்கிறார். இந்த பதிவு இவர் மகாராஜாதிராஜா என்ற உயர் அந்தஸ்துள்ள அரச பட்டத்தைப் பயன்படுத்தியதை விவரிக்கிறது. இவர் வெளியிட்ட தங்க நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [9]

வீழ்ச்சி தொகு

நாட்டுப்புற பாரம்பரியத்தின் படி, வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் தேஜஸ்கரனன் (துல்ஹா ராய் அல்லது தோலா ராய்), காதல் கதையான தோலா மாருவின் நாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். குவாலியர் கோட்டையின் பொறுப்பாளராக பரமல்-தேவனை (அல்லது பரமார்த்தி-தேவன்) விட்டுவிட்டு, அண்டை நாட்டு ஆட்சியாளரின் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக 1128-இல் குவாலியரை விட்டுச் சென்றதாக இந்தக் கணக்கு கூறுகிறது. இவர் குவாலியருக்குத் திரும்பியபோது, பரமல் கோட்டையை இவரிடம் ஒப்படைக்க மறுத்து, 103 ஆண்டுகள் குவாலியரை ஆண்ட பரிகார வம்சத்தை நிறுவினார். குவாலியரின் பரிகார ஆட்சியாளர் இராம்தேவின் 1150 தேதியிட்ட கல்வெட்டும் இலோகங்க-தேவனின் 1194 கல்வெட்டும் இவரைப் பற்றிக் கூறுகிறது.. [10] இருப்பினும், மற்ற கல்வெட்டுகள், கச்சபகதர்கள் இப்பகுதியை குறைந்தது பொ.ச. 1155 வரை ஆண்டதாகக் கூறுகின்றன. [11] கூடுதலாக, குவாலியரில் கண்டெடுக்கப்பட்ட 1192 மற்றும் 1194 கல்வெட்டுகள், கச்சபகத ஆட்சியாளர் அஜயபாலன் பிற்காலத்திலும் குவாலியரைக் கட்டுப்படுத்தினார் என்பதைக் காட்டுகின்றன. [10] எனவே, நாட்டுப்புறக் கணக்கு முற்றிலும் நம்பகமானதாக இல்லை. மேலும் பரிகார தலைவர்கள் குவாலியரை கச்சபகதர்களின் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்திருக்கலாம். [10]

வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சுலக்சனபாலன், கோரி படையெடுப்பால் தனது இராச்சியத்தை இழந்ததாகத் தெரிகிறது. 1196 இல் குத்புத்தீன் ஐபக் குவாலியர் மீது படையெடுத்தார். மேலும் சுலக்சனபாலனிடமிருந்து வரியை வசூலித்தார் என்று தாஜுல்-மாசிர் பரிந்துரைக்கிறார். பிற்காலத்தில் படையெடுப்பாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். [12] தோலா மாரு போன்ற நாட்டுப்புறக் கணக்குகள், ஆம்பர் கச்வாக வம்சம், கச்சபகத வம்சத்தின் நார்வார் கிளையின் கடைசி ஆட்சியாளரான தேஜஸ்கரனிடமிருந்து தோன்றியதாகக் கூறுகின்றன. [13] இருப்பினும், கச்வாக கல்வெட்டுகள் இவர்களின் வம்சத்திற்கு வேறுபட்ட தோற்றத்தைக் கூறுகின்றன. [14]

கலையும் கட்டிடக்கலையும் தொகு

இவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் ஆதரித்தனர். ஆனாலும் பௌத்தத்தின் மீதும்,சைனத்தின் மீதும் சகிப்புத்தன்மையுடன் இருந்துள்ளனர். கத்வாகாவில் இவர்களது ஆட்சியின் போது சாஸ்பாகு கோயில் கட்டப்பட்டது.[2]

குவாலியரின் கச்சபகத வம்சம் குறிப்பாக அவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது. [15] கச்சபகதாவின் ஆட்சியாளர் மகிபாலன் குவாலியரில் உள்ள சாஸ்-பாகு கோயிலை நிறுவினார். பொ.ச.1093 , பொ.ச.1104 தேதியிட்ட குவாலியரில் அவர் வழங்கிய இரண்டு மானியங்களின் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் வெளியிட்ட பல வெள்ளி , தங்க நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [9] அஜயபாலன் (ஆட்சி 1192-1194) 1194 கல்வெட்டு மூலம் சான்றளிக்கப்பட்டபடி, குவாலியரின் கங்கோலா குளம் தூர்வாரப்பட்டது. [16]

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. Om Prakash Misra 2003, ப. 15.
  2. 2.0 2.1 "Exploration Of Kadwaha, District Ashoknagar, Madhya Pradesh (2009-2010)". Bhopal: Archaeological Survey of India (Temple Survey Project). Archived from the original on 28 August 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
  3. Henry Miers Elliot (1869). Memoirs on the History, Folk-Lore, and Distribution of the Races of the North Western Provinces of India. Trübner & co.. பக். 158. https://archive.org/details/memoirsonhistor00elligoog. 
  4. 4.0 4.1 Ahmed Ali 2005.
  5. Sailendra Nath Sen 1999.
  6. Kalyan Kumar Chakravarty 1984.
  7. Rahman Ali (2012). "Art of the Kachchhapaghātas in Central India: An assessment". Journal of History & Social Sciences 3 (2). http://jhss.org/archivearticleview.php?artid=145. பார்த்த நாள்: 2022-02-17. 
  8. Ahmed Ali 2005, ப. 2.
  9. 9.0 9.1 P. C. Roy 1980.
  10. 10.0 10.1 10.2 Mysore Ramsharma, ப. 134.
  11. Mysore Ramsharma, ப. 133.
  12. Kalyan Kumar Chakravarty 1984, ப. 91.
  13. Kalyan Kumar Ganguli 1983, ப. 196.
  14. V. S. Bhatnagar 1974, ப. 4.
  15. Rahman Ali (2012). "Art of the Kachchhapaghātas in Central India: An assessment". Journal of History & Social Sciences 3 (2). http://jhss.org/archivearticleview.php?artid=145. பார்த்த நாள்: 2022-02-17. Rahman Ali (2012). "Art of the Kachchhapaghātas in Central India: An assessment" பரணிடப்பட்டது 2020-07-15 at the வந்தவழி இயந்திரம். Journal of History & Social Sciences. 3 (2).
  16. Mysore Ramsharma.

உசாத்துணை தொகு

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சபகத_வம்சம்&oldid=3703941" இலிருந்து மீள்விக்கப்பட்டது