கஞ்சமலை
கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. சேலம் மாநகரத்திலிருந்து வடமேற்கு திசையில் இம்மலை அமைந்துள்ளது. சேலத்திலிருந்து இளம்பிள்ளைக்குச் செல்லும் வழியில் மூடுதுறை, முருங்கப்பட்டி என்ற கிராமங்களுக்கு தெற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த மலையின் அடிவாரத்தில் சித்தர் கோயில் உள்ளது. இளம்பிள்ளை, நல்லணம்பட்டி கிராமத்திற்கு கிழக்கிலும் மலையின் உச்சியில் மேல்சித்தர் கோயில், கரியபெருமாள் கோயில் ஆகியன உள்ளன. மலைக் கோவிலுக்கு சித்தர் கோவில் அடிவாரத்தில் இருந்தும், முருங்கப்பட்டி மலை அடிவாரத்தில் இருந்தும் செல்லலாம். சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது, இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது. மேல்சித்தர் கோயில் அருகில் ஒரு ஊற்றும் நீரோடையும் நல்லணம்பட்டி அடிவாரத்தில் உள்ளது. [1] இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. மேலும் சித்தர் கோவில், வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது. இந்த மலையில் இரும்புத்தாது அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மலையில் மூன்று அடுக்குகளாக இரும்புத்தாதுகள் உள்ளன.இவை நல்ல தரம் வாய்ந்தவை.
கஞ்சமலைக் காட்சிக்கூடம்
தொகு-
கஞ்சமலைக்குரங்கு
-
கஞ்சமலையின் தோற்றம்
-
கஞ்சமலையின் காட்சி
-
கஞ்சமலை வேப்பமரம்
-
கஞ்சமலையின் கவின் காட்சி
-
கஞ்சமலையின் அழகுக்காட்சி
-
கஞ்சமலையின் எழில்காட்சி
-
கஞ்சமலையின் இன்காட்சி
-
கஞ்சமலை சிவன் கோவில் மணி
-
கஞ்சமலை சிவன் கோவில் திரிசூலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. Retrieved 2011-11-03.