Bussy: 2,500 ஐரோப்பியர்கள் Bussy: 2,000 சிப்பாய்கள் 5,800 மைசூர் வீரர்கள்[1] Suffren: 2,400 கடற்படை வீரர்கள்
இழப்புகள்
1,000
1,000
கடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.