கடிய நன்னீயார்

யாப்பிலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர் கடிய நன்னீயார். இவர் கடியநன்னியார் எனவும் குறிப்பிடப்படுகிறார். [1] இவரது இலக்கணப் பாடல்கள் 3 யாப்பருங்கல விருத்தியில் எடுத்துக் கட்டப்பட்டுள்ளன. [2]

1 தொகு

இருதலைக் காமம் இன்றிக் கைக்கிளை

ஒருதலைக் காம மாகக் கூறிய
இல்லக்கண மரபின் இயல்புற நாட்டி
அதர்ப்பபட மொழிந்தனர் புலவர் அதுவே
பெறுதி வெண்பா உரியதாய் மற்றதன்
இறுதி எழுசீர் ஆசிரியம்மே

2 தொகு

வெண்பா ஆசிரியத்தாய் மற்றதன்

இறுதி எழுசீர் ஆசிரியம்மே

3 தொகு

கைக்கிளை மருட்பா ஆகி வருகால்

ஆசிரியம் வருவதாயின் மேவா
முச்சீர் எருத்திற்று ஆகி முடிவு அடி
எச்சீரானும் ஏகாரம் இறுமே

4 தொகு

கைக்கிளை ஆசிரியம் வருவதாயின்

முச்சீர் எருத்து இன்றாகி முடிவடி
எச்சீரானும் ஏகாரத்து இறுமே [3]

மேற்கோள் தொகு

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 211
  2. மேல் யாப்பருங்கலம் - பக்கம் 170
  3. மேல் யாப்பருங்கலம் பக்கம் 211
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிய_நன்னீயார்&oldid=3453276" இலிருந்து மீள்விக்கப்பட்டது