கடோலினியம் மோனோசல்பைடு
கடோலினியம் மோனோசல்பைடு (Gadolinium monosulfide) என்பது GdS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கடோலினியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கடோலினியம்(II) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12134-74-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
GdS | |
வாய்ப்பாட்டு எடை | 189.31 g·mol−1 |
தோற்றம் | Crystals |
அடர்த்தி | 7.2 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,300 °C (4,170 °F; 2,570 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவிகிதவியல் அளவுகளில் தூய கடோலியம் தனிமத்தையும் கந்தகத்தையும் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி வினைபுரியச் செய்து கடோலினியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- Gd + S → GdS
கடோலினியம்(III) ஆக்சைடுடன் கடோலினியம் செசுகியூசல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் கடோலினியம் மோனோசல்பைடைத் தயாரிக்கலாம்:[3]
- Gd2O3 + 2Gd2S3 + 3C -> 6GdS + 3CO}}
இயற்பியல் பண்புகள்
தொகுகடோலினியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பின் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5574 நானோமீட்டர், Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[4][5]
2300 செல்சியசு வெப்பநிலையில் கடோலினியம் மோனோசல்பைடு முற்றிலுமாக உருகுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gadolinium monosulfide" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "Gadolinium Sulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ Peshev, P.; Bliznakov, G.; Toshev, A. (April 1968). "On the preparation and some physical properties of gadolinium sesquisulphide and gadolinium monosulphide". Journal of the Less Common Metals 14 (4): 379–386. doi:10.1016/0022-5088(68)90161-6. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508868901616. பார்த்த நாள்: 30 July 2024.
- ↑ Predel, B. (1996). "Gd-S (Gadolinium-Sulfur)". Ga-Gd – Hf-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry f: 1–2. doi:10.1007/10501684_1447. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-60344-1. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-44996-6_1447.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. C-70. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.