கட்சி மாநாடு

கட்சி மாநாடு என்பது அரசியல் கட்சிகள் தன் ஊழியர்கள், தொண்டர்கள் ஆகியோரைக் கொண்டு நடத்தும் மாநாடு ஆகும்.

பொதுவாக அரசியல் கட்சிகள் ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போதோ, அல்லது தேர்தல் நெருங்கும்போதோ தன் தொண்டர்களை உற்சாகப்படுத்த மாநாடுகளை நடத்துவது வழக்கம். மாநாடு பொதுவாக இரண்டு மூன்று நாட்கள் நடத்தப்படும். மாநாட்டின் முடிவில் ஒற்றைத் தீர்மானமோ அல்லது அதற்கும் மேற்பட்ட தீர்மானங்களோ நிறைவேற்றப்படும்.[1]

மாநாட்டின்போது கட்சியின் மிக முக்கியமான முடிவுகள் எடுப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி பந்தயத்திடலில் நடந்த திமுகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் தேர்தலில் கலந்து கொள்வதா அல்லது வேண்டாமா என தொண்டர்களிடம் வாக்குகளைப் பெற்று, தேர்தல்களில் பங்கேற்பது என அக்அக்கட்சி முடிவெடுத்தது.[2]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சி_மாநாடு&oldid=3247789" இலிருந்து மீள்விக்கப்பட்டது