கட்டிட வரைபடங்கள்

கட்டிடக்கலைஞனின் கற்பனையில் உதித்த கட்டிடமொன்று எப்படி இருக்கப்போகிறது என்று மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்காக வரையப்படும் படங்களே கட்டிட வரைபடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்யத் தொடங்கியதிலிருந்து அது கட்டிமுடியும்வரை பல்வேறு நோக்கங்களூக்காக வரைபடங்கள் வரையப்படுகின்றன. பின்வரும் சந்தர்ப்பங்களில் வரைபடங்கள் தேவைப்படுகின்றன.

  • கட்டிடக்கலைஞனின் கற்பனையில் உதிக்கும் எண்ணங்களுக்குப் பார்க்கக் கூடிய வடிவம் கொடுத்து அவற்றைப் பதிவுசெய்வதற்கும், துண்டுதுண்டாக உதிக்கும் இவ்வாறான எண்ணங்களை ஒன்றுபடுத்திப் பரிசோதிப்பதற்கும், பருமட்டான கைவரைபடங்கள் வரையப்படுகின்றன. இது வடிவமைப்புச் செய்யும் கட்டிடக்கலைஞனின் சொந்தத் தேவைக்கே பொதுவாகப் பயன்படுகின்றன. வடிவமைப்புக் குழுவினரிடையே எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இவை பயன்படுவதுண்டு.
  • கட்டிட உரிமையாளரின் தேவைகளுக்கு ஏற்ப மேலோட்டமான ஒரு அடிப்படைத் திட்டம் தயாரானதும், அதன் அம்சங்கள் பற்றி அவருக்கு விளங்கவைத்து, அவருடைய சம்மதம் பெறவேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்துக்காகத் தயாரிக்கப்படும் வரைபடங்கள், உரிமையாளருடையதும், பயனர்களுடையதுமான தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படப் போகின்றன, சூழலிலுள்ள கட்டிடங்கள் தொடர்பிலும், கட்டிடத்துக்கான நிலம் தொடர்பிலும் கட்டிடம் எவ்வாறு அமையப்போகிறது, கட்டிடத்தின் தோற்றம் எப்படியிருக்கும் போன்ற பல ஆரம்பநிலைத் தகவல்களைக் கொண்டிருக்கும். பொதுவாகப் பல உரிமையாளர்கள் தொழில்நுட்பப் பின்னணி இல்லாதவர்களாக இருப்பதனால், இவ்வரைபடங்கள் சகலரும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டியதுடன், இலகுவகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நிறங்கள் தீட்டப்படுவதுண்டு. முப்பரிமாணத் தோற்றப்படங்கள் இக் கட்டத்தில் பெரிதும் உபயோகமானவை. பெரும்பாலும் இயலுறு தோற்றப் படங்களே (Perspectives) இந்த நோக்கத்துக்குப் பயன்படுகின்றன.
  • மாநகரசபை போன்ற திட்டமிடல் அதிகாரம் கொண்ட நிறுவனங்களிடமிருந்து, திட்டமிடல் அனுமதிக்கான சமர்ப்பிப்புக்கான வரைபடங்கள்.
  • கட்டிட அனுமதி பெறுவதற்கான சமர்ப்பிப்பு வரைபடங்கள்.
    • ஆரம்பநிலை
    • இறுதிநிலை

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிட_வரைபடங்கள்&oldid=2609033" இருந்து மீள்விக்கப்பட்டது