கட்டுமானக் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுகின்ற கோயில்களே கட்டுமானக் கோயில்களாகும். குடைவரை மற்றும் ஒற்றைக் கற்றளி என்பவற்றைவிட அமைப்பதற்கு இவை இலகுவானவை. வசதியான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ள முடியும். முன்னைய வகைகளில் பாறையின் ஓரிடத்தில் தொடங்கி வடிவமைப்புக்கு அமையச் சரியானபடி முடிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். செதுக்கும் போது பாறையில் வெடிப்பு எதுவும் ஏற்பட்டால் முழு வேலையையும் கைவிட வேண்டியதுதான். இத்தகைய சிக்கல்கள் கட்டுமானக் கோயில்களில் இல்லை. சிறிய பகுதிகளாகச் செதுக்குவதால் கையாளுவதும் இலகு. இதன் காரணமாகத் தமிழ் நாட்டில் கட்டுமானக் கோயில்கள் அறிமுகமானதின் பின்பு குடைவரைகளோ அல்லது ஒற்றைக் கற்றளிகளோ கட்டப்படவேயில்லை.
தமிழ் நாட்டில் முதல் முதலாகக் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலாகும். இக்கோயிலைக் கட்டியவன் பல்லவ மன்னனான இராஜசிம்மன். இவன் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உட்பட மேலும் பல கட்டுமானக் கோயில்கள் கட்டப்பட்டன.