கணக்கர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணக்கை எழுதுவோர் கணக்கர் (ஒலிப்பு (உதவி·தகவல்)) எனப்பட்டனர். பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சில கணக்கர்கள்
- ஓலைக் கணக்கர்
- நாழிகைக் கணக்கர்
- மந்திரக் கணக்கர்
- சமயக் கணக்கர்
- அமயக் கணக்கர்
- ஆசிரியக் கணக்கர்
- பெருங்கணக்கர்
- கணக்கியல் வினைஞர்
- காலக்கணிதர்
- ஆயக்கணக்கர்
வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் நாழிகைக் கணக்கர் என்று அழைக்கப்பட்டனர். இதை “வானோக்கிக் காலக் கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” என குறுந்தொகை (261: 6-7) தெரிவிக்கிறது. அப்பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் என்ற கருவியைப் பயன்படுத்தினர்.(முல்லை 55-58, அகம் 43-6, மதுரை கா 670-71) அதனால் இந்தக் கணக்கர்கள் யாமத்தைக் கணக்கிட்டுக் கூறினர். நாழிகை கொண்டு யாமத்தையும், ஆண்டுகளை எண்ணி ஊழியையும் கணக்கிட்டனர் என்பதை மணிமேகலை, நாண்மணி ஆகியவை மூலம் அறிந்து கொள்ள் முடிகிறது.